IPL 2023 Finals: "நிம்மதியா தூங்க முடியல” ஐபிஎல் தோல்விக்கு பிறகு மனமுடைந்த மோஹித் சர்மா!

சென்னை அணியும் ரசிகர்களும் வெற்றிக்களிப்பில் திழைத்திருக்க, மோஹித் சர்மா கண்கலங்க தொடங்கினார். குஜராத் அணிக்கு தோல்வி தனது கரங்களால் வந்தது என்ற வருத்தத்தில் வழிந்தது அந்த கண்ணீர்.
IPL 2023 Finals: "நிம்மதியா தூங்க முடியல” ஐபிஎல் தோல்விக்கு பிறகு மனமுடைந்த மோஹித் சர்மா!
IPL 2023 Finals: "நிம்மதியா தூங்க முடியல” ஐபிஎல் தோல்விக்கு பிறகு மனமுடைந்த மோஹித் சர்மா!Twitter

நடந்து முடிந்த ஐபிஎல் ஃபைனலில் தோல்வியடைந்ததை அடுத்து, தன்னால் நிம்மதியாக கண்களை மூடி உறங்க முடியவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார் குஜராத் அணிக்காக விளையாடிய பந்துவீச்சாளர் மோஹித் சர்மா.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் 2023ல் கோப்பை வென்றது. இதன் மூலம் 5 முறை கோப்பை வென்று மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனையை சமன் செய்தது சிஎஸ்கே.

மழையின் காரணமாக 28ஆம் தேதி நடைபெறவிருந்த போட்டி மே 29க்கு ஒத்திவைக்கப்பட்டு, அன்றும் மழை வந்து 30 ஆம் தேதி வரை நீடித்த கதையை சிந்துபாத் கதை போல முடிவில்லாமல் பேசிக்கொண்டிருக்கிறோம்.

முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 215 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சென்னைக்கு. சென்னை விளையாட தொடங்கி மழை வந்ததால், டார்கெட் மற்றும் ஓவர்கள் குறைக்கப்பட்டது.

கடைசி பந்து வரை ஆட்டம் சென்று விறுவிறுப்பின் உச்சக்கட்டத்துக்கு நம்மை கூட்டிச்சென்றது போட்டி. இந்த இறுதிப்போட்டியில் குஜராத்தின் சார்பாக கடைசி ஓவரை வீசியவர் மோஹித் சர்மா.

அவர் வீசிய 3 ஓவர்களில் 2.4 ஓவர்கள் வரை 26 ரன்கள் மட்டுமே வழங்கி, சென்னை அணியின் வெற்றிப்பாதையில் பெருந்தடையாக நின்றார்.

ஆனால் கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன் தேவை என்று இருந்தபோது, ஒரு சிக்சர் ஒரு ஃபோர் அடித்து ஜடேஜா சிஎஸ்கேவை வெற்றிப்பெறச் செய்தார்.

IPL 2023 Finals: "நிம்மதியா தூங்க முடியல” ஐபிஎல் தோல்விக்கு பிறகு மனமுடைந்த மோஹித் சர்மா!
CSK: கண்கலங்கிய தோனி, மனமுடைந்த மோஹித் சர்மா - உணர்வுப்பூர்வமாக நிறைவடைந்த 2023ன் ஐபிஎல்

சென்னை அணியும் ரசிகர்களும் வெற்றிக்களிப்பில் திழைத்திருக்க, மோஹித் சர்மா கண்கலங்க தொடங்கினார். குஜராத் அணிக்கு தோல்வி தனது கரங்களால் வந்தது என்ற வருத்தத்தில் வழிந்தது அந்த கண்ணீர்.

கேப்டன் ஹர்திக் பாண்டியா மோஹித் சர்மாவை கட்டிப்பிடித்து சமாதானம் செய்தார். கிரிக்கெட் உலகமும் இணையமும் மோஹித் சர்மாவின் சிறப்பான பந்துவீச்சை மெச்சிக்கொண்டது.

ஆனால், தன்னால் கண்மூடி நிம்மதியாக உறங்கமுடியவில்லை எனக் கூறியுள்ளார்.

“என்னால் உறங்க முடியவில்லை. அந்த கடைசி பந்தை இப்படி வீசியிருக்கலாம், அப்படி வீசியிருக்கலாம் என எனக்குள் ஆயிரம் யோசனைகள். இது நல்ல உணர்வு இல்லை. எங்கோ, ஏதோ சரியாக இல்லை. ஆனால் நான் இதிலிருந்து விடுபட முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்” என்றார்

IPL 2023 Finals: "நிம்மதியா தூங்க முடியல” ஐபிஎல் தோல்விக்கு பிறகு மனமுடைந்த மோஹித் சர்மா!
IPL 2023 Finals: முன்று நாள் நடந்த இறுதிப்போட்டியில் முறியடிக்கப்பட்ட சாதனைகள் என்னென்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com