ஐபிஎல் 2023ஆம் பருவம் இனிதே முடிவடைந்தது. மே 28த் தொடங்கி, 30 வரை ஒரு ஃபைனல் போட்டி நீடிக்கிறது என்றால், சாதாரண விஷயமா?
அதுவும் நள்ளிரவு 2 மணி வரை, பார்ப்பவர்களுக்கு ஹார்ட்பீட் எகிறும் வகையில் விறுவிறுப்பாக சென்றது. தவிர சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இது ஐந்தாவது கோப்பையும் கூட.
இந்த ஐபிஎல் வெற்றியின் மூலம் சென்னை அணியும், இந்த ஐபிஎல் இறுதிப்போட்டியும் பல புதிய சாதனைகளுக்கு வழிவகுத்துள்ளது. அவற்றை குறித்து இங்கு காணலாம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இது ஐந்தாவது ஐபிஎல் கோப்பையாகும். 2010,1011, 2018, 2021 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் கோப்பையை தட்டிச்சென்றுள்ளது சிஎஸ்கே அணி.
இதன் மூலம் அதிக முறை டைட்டில் வென்ற அணி என்ற பெருமையை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அடுத்தபடியாக பெற்றுள்ளது சென்னை.
இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனையை சென்னை அணி சமன் செய்துள்ளது.
சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி தற்போது ஐபிஎல்லின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர். 5 முறை டைட்டில் வென்றதால் ரோஹித் சர்மாவுடன் இந்த பெருமையை பகிர்ந்துகொள்கிறார் தோனி.
சுப்மன் கில் இந்த சீசன் முடிவில் 890 ரன்கள் மொத்தமாக அடித்திருந்தார், இவருக்கே ஆரஞ்சு கேப் வழங்கப்பட்டது.
இதற்கு முன் 2022ல் ஜாஸ் பட்லர் 863 ரன்கள் அடித்திருந்தார். இந்த சாதனையை முறியடித்துள்ளார்.
ஆனால், 2016ஆம் ஆண்டு முடிவில் அதிக ரன்களை அடித்திருந்தார் விராட் கோலி. இவர் அடித்திருந்த 973 ரன்கள் முறியடிக்கப்படாமல் இருக்கிறது.
அதிக ஐபிஎல் போட்டிகளை விளையாடிய வீரர் என்ற பெருமையை பெற்றார் தோனி. எம் எஸ் தோனி இதுவரை 250 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார் தோனி. இரு தினங்களுக்கு முன் நடந்த இறுதிப்போட்டி தான் இவருக்கு 250வது போட்டி
ஃபைனலில் குஜராத் அணிக்காக விளையாடினார் தமிழ்நாட்டு வீரர் சாய் சுதர்சன். இவர் அந்த போட்டியில், 96 ரன்களை அடித்திருந்தார். ஐபிஎல் வரலாற்றில், சர்வதேச அணிக்காக விளையாடாத ஒரு வீரர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இது தான்
ஃபைனலில் சுப்மன் கில்லை ஸ்டம்பிங் செய்து அவுட் ஆக்கியதன் மூலம், ஐபிஎல்லில் அதிக பேட்டர்களை அவுட் ஆக்கிய வீரர் என்ற சாதனையை படைத்தார் தோனி. கில் அவுட் ஆனது தோனியின் 300வது விக்கெட் ஆகும்
இதுவரை விளையாடிய அனைத்து ஐபிஎல் ஃபைனலிலும் வென்ற வீரர் என்கிற பெருமையை வைத்திருந்தார். நேற்று சென்னை அணியுடன் தோற்றதன் மூலம் 7வது ஃபைனலில் இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு. ஐபிஎல்லில் அதிக முறை கோப்பை வென்ற வீரர் என்கிற பெருமையை இவர் பெற்றுள்ளார். மொத்தம் 6 முறை இவர் கோப்பை வென்ற அணியில் இடம்பெற்றுள்ளார்.
இதற்கு முன் இந்த பெருமைக்கு சொந்தக்காரராக மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மா இருந்தார். ரோஹித் சர்மா 5 முறை மும்பை அணிக்காகவும், ஒரு முறை டெக்கன் சார்ஜர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தபோதும் கோப்பை வென்றிருந்தார்
குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசன் ஐபிஎல்லில் 215 ரன்களை எதிரணிக்கு இலக்காக நிர்ணயித்தது. இதுவே ஐபிஎல் வரலாற்றில் ஒரு இறுதிப்போட்டியில் அதிகபட்ச முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்.
இதற்கு முன் சன்ரைசர்ஸ் அணி 2016ல் 208 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust