"தோனி மட்டும் தான் என்னிடம் பேசினார்" - மனம் திறந்த விராட் கோலி

நேற்று ஆசியக் கோப்பை Super four சுற்றில், இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது. நேற்றைய ஆட்டத்தில் கோலி 60 ரன்களை குவித்திருந்தார்.
கோலி - தோனி
கோலி - தோனிடிவிட்டர்

நேற்று நடந்த இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு பிறகு பேசிய இந்திய அணி வீரர் கோலி, தான் டெஸ்ட் கேப்டன்சி விட்டு விலகிய போது, அவரைப் பற்றி தெரிந்துகொள்ள முன்வந்து, அவரிடம் பேசியது தோனி மட்டும் தான் என தெரிவித்திருக்கிறார்.

இந்த வருடத்தின் துவக்கத்தில் தன் டெஸ்ட் கேப்டன்சியை விட்டு விலகினார் கோலி. சக வீரர்களும், ரசிகர்கள், விமர்சகர்கள் என பலரும் கோலி அணியை வழிநடத்தும் வலிமையை இழந்துவிட்டார் எனவும், அவரது விளையாட்டிலும் தோய்வு உள்ளது எனவும் விமர்சித்து வந்தனர். மேலும், கோலியின் தலைமையில் இந்திய அணி எந்த ஒரு கோப்பையும் வென்றதில்லை. இதுவே அவருக்கு பெறும் பின்னடைவாக கருதப்பட்டது.

முதலில் டி20, பிறகு ஒரு நாள் கிரிக்கெட், அதன் பின்னர் இந்த வருடம் ஜனவரி மாதத்தில் டெஸ்ட் போட்டிகள் என அனைத்தின் தலைமையையும் விட்டு விலகினார் கோலி. இப்போது அணியை ரோஹித் சர்மா வழிநடத்தி வருகிறார்.

இந்நிலையில், நேற்று ஆசியக் கோப்பை Super four சுற்றில், இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது. நேற்றைய ஆட்டத்தில் கோலி 60 ரன்களை குவித்திருந்தார். இரண்டு வருடங்களாக சரியாக விளையாடவில்லை என கண்டனங்களைச் சந்தித்து வந்த கோலிக்கு இந்த தொடர் கம் பேக் ஆக அமைந்திருக்கிறது.

கோலி - தோனி
விராட் கோலி : "எங்கள் பார்ட்னர்ஷிப் எப்போதும் ஸ்பெஷல்..." - 7+18 காம்போ குறித்து கோலி

நேற்று இந்திய அணி தோற்றிருந்தாலும், கோலியின் ஃபார்ம் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்திருக்கிறது. போட்டிக்கு பிறகு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய கோலி, "நான் டெஸ்ட் கேப்டன்சி விட்டு விலகிய பிறகு, எனக்கு தோனி மட்டும் தான் மெசேஜ் செய்திருந்தார்" என தெரிவித்தார்.

"தொலைகாட்சியில் பேசுவதற்கு எல்லோருக்கும் நிறைய இருந்தது. என் விளையாட்டைக் குறித்தும், நான் என்ன செய்யவேண்டும் வேண்டாம் என சொல்லவும்...

என்னுடைய தொலைப்பேசி எண்ணும் பலரிடம் இருந்தது. ஆனால் அன்று தோனியை தவிர யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை" என தெரிவித்தார்.

மேலும், எனக்கு யாரிடமாவது ஒரு விஷயத்தைக் கூற வேண்டும் என்றால் நான் அவர்களிடம் நேரடியாக கூறிவிடுவேன் எனக் கூறினார் கோலி. உலகறிய ஒரு விஷயத்தை நீங்கள் சொல்வதாயிருந்தால், என்னை பொறுத்தமட்டில் அதற்கு மதிப்பு இல்லை எனவும் தெரிவித்தார்.

"நீங்கள் என் வளர்ச்சி குறித்துப் பேசினால், என்னிடம் நேரே வந்து சொல்லுங்கள். நான் என் வாழ்வை உண்மையாக வாழ்ந்து வருகிறேன். இவ்வாறான விஷயங்கள் எனக்கு முக்கியமானவை. நாட்டிற்காக விளையாடுவதற்கு நான் தகுதியானவனாக இருக்கும் வரை, அப்படித்தான் விளையாடுவேன்"

சமீபத்தில் விராட் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு வந்ததாக மனம் திறந்திருந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கோலி - தோனி
அடுத்த சீசனுக்கும் தோனி தான் சிஎஸ்கே கேப்டன்? சென்னை அணி குறித்த புதிய அப்டேட்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com