BCCI: உலகக்கோப்பை 2023 அட்டவணை வெளியிட்ட ஐசிசி - இந்தியா பாகிஸ்தான் எப்போது மோதுகிறது?

இந்திய அணி ஒரு ஐசிசி கோப்பை வென்று 10 ஆண்டுகள் ஆகிறது. கடந்த முறை இந்தியாவில் உலகக்கோப்பை நடந்தபோது இந்திய அணி தான் வாகை சூடியது. இம்முறையும் கோப்பை வெல்லுமா ரோஹித்தின் படை?
BCCI: உலகக்கோப்பை 2023 அட்டவணை வெளியிட்ட ஐசிசி - இந்தியா பாகிஸ்தான் எப்போது மோதுகிறது?
BCCI: உலகக்கோப்பை 2023 அட்டவணை வெளியிட்ட ஐசிசி - இந்தியா பாகிஸ்தான் எப்போது மோதுகிறது?ட்விட்டர்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உலகக்கோப்பை அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்திய அணி விளையாடவுள்ள போட்டிகள் எப்போது, குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் அணிகள் எப்போது மோதுகின்றன என்ற எதிர்பார்ப்புகளுக்கு விடை கிடைத்துள்ளது.

50 ஓவர் உலகக்கோப்பை போட்டிகள் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறுகிறது. 2011க்கு பிறகு இந்தியாவில், 12 ஆண்டுகள் கழித்து உலகக்கோப்பை போட்டிகள் நடைப்பெறுகின்றன.

அகமதாபாத், கொல்கத்தா, சென்னை, பெங்களூரூ, பூனே, ஹைதராபாத், லக்னோ, தர்மசாலா, டெல்லி, மும்பை ஆகிய பத்து இடங்களில் போட்டிகள் நடக்கின்றன.

உலகக்கோப்பை போட்டிகளை விளம்பரப்படுத்த கோப்பையை விண்ணுக்கு பிசிசிஐ மற்றும் ஐசிசி அனுப்பியது குறிப்பிடத்தக்கது

முதல் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில், அக்டொபர் 5ஆம் தேதி நடக்கிறது. கடந்த 2019ல் இறுதிப்போட்டியில் மோதிய இங்கிலாந்து நியூசிலாந்து அணிகள் முதல் போட்டியில் மோதுகின்றன.

இந்த ஆண்டின் முதல் மற்றும் இறுதிப்போட்டி, இந்தியாவின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானம், அகமதாபாத்தில் நடைப்பெறும்.

இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட அணிகள் ஏற்கனவே உலகக்கோப்பையில் விளையாட தகுதிப் பெற்றுவிட்டன. இலங்கை, ஐயர்லாந்து, மேற்கு இந்திய தீவுகள் உள்ளிட்ட அணிகள் தகுதிச் சுற்றுகளில் வெற்றிப்பெறும் பட்சத்தில், இந்த அணிகளுடன் இணையவுள்ளன.

BCCI: உலகக்கோப்பை 2023 அட்டவணை வெளியிட்ட ஐசிசி - இந்தியா பாகிஸ்தான் எப்போது மோதுகிறது?
”தோனி உலகக்கோப்பை வென்றுவிட்டால்?” ரசிகர்களின் வாயை அடைத்த அஷ்வின் - என்ன பேசினார்?

இந்நிலையில், இன்று ஐசிசி தரப்பில் இந்த ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பைக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய அணிக்கு முதல்போட்டி அக்டோபர் 8 ஆம் தேதி நடக்கிறது.

சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்த போட்டியில், இந்தியா ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. பாகிஸ்தான் அணியுடன் அக்டோபர் 15ஆம் தேதி இந்திய அணி மோதுகிறது.

உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோற்றதே இல்லை என்ற வரலாற்றை கடந்த 2021 20 ஓவர் உலக்கோப்பையின் போது முறியடித்தது பாகிஸ்தான் அணி.

இதனால் இப்போட்டிக்கு கூடுதல் எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்திய அணி ஒரு ஐசிசி கோப்பை வென்று 10 ஆண்டுகள் ஆகிறது. கடந்த முறை இந்தியாவில் உலகக்கோப்பை நடந்தபோது இந்திய அணி தான் வாகை சூடியது. இம்முறையும் கோப்பை வெல்லுமா ரோஹித்தின் படை?

BCCI: உலகக்கோப்பை 2023 அட்டவணை வெளியிட்ட ஐசிசி - இந்தியா பாகிஸ்தான் எப்போது மோதுகிறது?
IndvsPak: மீண்டும் மோதப்போகும் இந்தியா பாகிஸ்தான் - 2023 ஆசியக் கோப்பை அட்டவணை வெளியீடு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com