”தோனி உலகக்கோப்பை வென்றுவிட்டால்?” ரசிகர்களின் வாயை அடைத்த அஷ்வின் - என்ன பேசினார்?

தோனிக்கு முன்னரும் சரி, தோனிக்கு பிறகும் சரி, யாரும் தங்களது முதல் முயற்சியிலேயே கோப்பையை கைப்பற்றவில்லை என்றார் அஷ்வின்.
”தோனி உலகக்கோப்பை வென்றுவிட்டால்?” - ரசிகர்களின் வாயை அடைத்த அஷ்வின் - என்ன பேசினார்?
”தோனி உலகக்கோப்பை வென்றுவிட்டால்?” - ரசிகர்களின் வாயை அடைத்த அஷ்வின் - என்ன பேசினார்?twitter

எம் எஸ் தோனி தலைமையை ஏற்றவுடன் உலகக்கோப்பையை வென்றதால், அனைவரும் அவரைப் போலவே உலகக்கோப்பையை வெல்ல முடியும் என நினைப்பது தவறு எனப் பேசியுள்ளார் ரவிச்சந்திரன் அஷ்வின்.

1983ஆம் ஆண்டு கபில் தேவின் தலைமையில், முதன்முதலில் 50 ஓவர் உலகக்கோப்பையை கைப்பற்றியது இந்திய அணி. அதன் பிறகு, இரண்டாவது முறையாக 2011 ஆம் ஆண்டு எம் எஸ் தோனி தலைமையில் வென்றது. இந்த இரண்டாவது உலகக்கோப்பையை வெல்ல, இந்திய அணிக்கு 28 ஆண்டுகள் தேவைப்பட்டன.

அதன் பின்னர் இந்தியா உலகக்கோப்பையில் பங்கேற்றாலும், கோப்பையை கைப்பற்றவில்லை. 20 ஓவர் உலகக்கோப்பை, ஆசியக் கோப்பை, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் என எதிலும் இந்திய அணி பெரிதாக சோபிக்கவில்லை. கடைசியாக 2013 ஆம் ஆண்டு கோப்பையை வென்றது.

தோனி விலகி, விராட் பொறுப்பேற்ற பிறகும் சரி, ரோஹித் சர்மா கேப்டன் ஆன பிறகும் சரி, இரு தரப்பு தொடர்களில் (பைலேட்டரல் சீரீஸ்) இந்திய அணி சிறப்பாக விளையாடும். தொடர்ந்து தொடர்களையும் வெல்லும். ஆனால் முக்கியமான ஐசிசி தொடர்களில் படுதோல்வியடைந்து வெளியேறும் என்பதாகவே இருக்கிறது வரலாறு.

இதனால் ரசிகர்களும், முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் இந்திய அணியை, அதன் தலைமையை விமர்சிக்காத நாளில்லை.

”தோனி உலகக்கோப்பை வென்றுவிட்டால்?” - ரசிகர்களின் வாயை அடைத்த அஷ்வின் - என்ன பேசினார்?
சச்சின் முதல் கில் வரை - ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த கிரிக்கெட் வீரர்கள்

இந்திய அணி வீரர்கள் மைதானத்தில், தொடரின்போது சந்திக்கும் அழுத்தங்கள், ஒரு வெற்றிக் கூட்டணியை உருவாக்க அணிக்குள் ஏற்படுத்தும் மாற்றங்கள், அணி நிர்வாகம் நடத்தும் பரிசோதனைகள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி இந்த விமர்சனங்கள் எழுந்துவருகின்றன. கடந்த ஒரு ஆண்டில் மட்டுமே 7 கேப்டன்களை கொண்டு பல தொடர்களில் விளையாடியது இந்திய அணி

அவ்வப்போது இந்திய அணிக் குறித்தும் வீரர்கள் குறித்தும் எழும் விமர்சனங்களுக்கு தனது யூடியூப் பக்கத்தில் பதிலளிப்பார் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின். இந்நிலையில், இந்த விமர்சனங்கள் குறித்தும் தனது யூடியூப் வீடியோவில் பேசியுள்ளார் அஷ்வின்.

MS Dhoni
MS DhoniTwitter

தோனிக்கு முன்னரும் சரி, தோனிக்கு பிறகும் சரி, யாரும் தங்களது முதல் முயற்சியிலேயே கோப்பையை கைப்பற்றவில்லை என்றார் அஷ்வின்.

”இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், 1983க்கு பிறகு 1992,1996, 1999, 2003, 2007 ஆகிய உலகக்கோப்பைகளில் விளையாடினார். 6 தொடர்களுக்கு பிறகு 2011ல் தான் அவர் உலகக்கோப்பையை வென்றார்.

தோனி உலகக்கோப்பையை வென்ற ஒரே காரணத்திற்காக அனைவருக்கும் அதுபோலவே நடந்துவிடாது அல்லவா?” என்றார்.

”தோனி உலகக்கோப்பை வென்றுவிட்டால்?” - ரசிகர்களின் வாயை அடைத்த அஷ்வின் - என்ன பேசினார்?
T20WC: 15 ஆண்டுகளில் தோனி இல்லாமல் முதல் நாக் அவுட் போட்டி- இந்தியா இங்கிலாந்தை வெல்லுமா?

மேலும் ரோஹித், கோலியை பொறுத்தவரை சற்று பொறுமையை ரசிகர்கள் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் அஷ்வின் கூறினார். உலகக்கோப்பையை வென்ற அணிகளில் வெவ்வேறு ஆண்டுகளில் ரோஹித், கோலி இடம்பெற்றிருந்தனர்.

அவர்கள் உலகக்கோப்பையை வெல்லவே இல்லை என்று புறந்தள்ளிவிட முடியாது என்றும் கூறினார். குறிப்பாக, ஐசிசி தொடர்களை நாம் விளையாடும் போது, முக்கிய தருணங்கள் நமக்கு சாதகமாக அமைவதில் தான் வெற்றியும் தோல்வியும் நிச்சயிக்கப்படுகிறது என்பதையும் அஷ்வின் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த ஆண்டு இந்தியாவில் 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்திய அணி இந்த ஆண்டாவது உலகக்கோப்பையை வெல்லுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

”தோனி உலகக்கோப்பை வென்றுவிட்டால்?” - ரசிகர்களின் வாயை அடைத்த அஷ்வின் - என்ன பேசினார்?
T20WC: இந்திய அணி தோல்வி - வைரலாகும் தோனியின் 11 வருட பழைய ட்வீட்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com