Ind vs Pak : ஆசியக் கோப்பை போட்டி - எதிர்பார்ப்பில் ரசிகர்கள், வைரலாகும் மீம்ஸ்

இந்தியா பெருந்தோல்விக்கு பின்னர் பாகிஸ்தான் அணியை சந்திக்கவுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அளவு கடந்து உள்ளது. போட்டியைப் பார்க்க ஆவலாக காத்திருப்பதாக மீம்கள் பகிர்ந்து வருகின்றனர்
Rohit Sharma - Babar Azam
Rohit Sharma - Babar AzamTwitter
Published on

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இன்று துவங்குகின்றன. நாளை இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ள நிலையில், ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். இதுவரை பாகிஸ்தான் அணி, இந்தியாவை மொத்தம் 14 ஆசியக் கோப்பை போட்டிகளில் 5 முறை மட்டுமே வென்றுள்ளது.

ஆனால், உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோற்றதில்லை. கடந்த வருடம் டி20 உலகக் கோப்பை போட்டியில் தான் இந்தியா பாகிஸ்தானிடம் தோற்றது. அதிலும், எந்த விக்கெட் இழப்புமின்றி பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தியது தான் ரசிகர்களுக்கு சோகத்திலும் சோகமாக அமைந்தது.

390587037022101

அந்த போட்டிக்குப் பின்னர் இந்தியா பாகிஸ்தானை எதிர்கொள்ளவிருக்கும் போட்டி நாளை நடைபெறும் ஆசியக் கோப்பை தான். சாதாரணமாகவே இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றால் அணல் பறக்க விவாதங்களும், மீம்களும் இணையத்தில் இடம்பெறும். தற்போது பெருந்தோல்விக்கு பின்னர் இரு அணிகளும் சந்திக்கவுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அளவு கடந்து உள்ளது. போட்டியைப் பார்க்க ஆவலாக காத்திருப்பதாக மீம்கள் பகிர்ந்து வருகின்றனர்

Rohit Sharma - Babar Azam
உலகின் முதல் மீம் எது தெரியுமா?
Rohit Sharma - Babar Azam
மீம் போட்ட நேரத்துக்கு நாலு காசு சேர்த்து இருக்கலாம்: வைரலாகும் ஆனந்த் சீனிவாசன் மீம்ஸ்
Rohit Sharma - Babar Azam
திருச்சிற்றம்பலம், சீதா ராமம், PTR - இந்த வாரத்தில் கலக்கிய Memes

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com