Ind vs Aus: ஆறாவது கோப்பையை கைப்பற்றிய ஆஸி; கண்கலங்கிய இந்திய அணி - என்ன நடந்தது?

4 ரன்கள் மட்டுமே அடித்து தொடக்கத்திலேயே சுப்மன் கில் வெளியேற, மைதானத்தில் அமைதி நிலவியது. ரோஹித் - கோலி கூட்டணி நம்பிக்கை அளித்தாலும், வழக்கம் போல தன் பங்கான 47 ரன்களை அடித்து அவுட் ஆகினார் ரோஹித்.
ஆறாவது கோப்பையை கைப்பற்றிய ஆஸி; கண்கலங்கிய இந்திய அணி - என்ன நடந்தது?
ஆறாவது கோப்பையை கைப்பற்றிய ஆஸி; கண்கலங்கிய இந்திய அணி - என்ன நடந்தது?twitter

உலகக்கோப்பை கிரிக்கெட் 2023இனை வென்றது ஆஸ்திரேலிய அணி. இது அந்த அணி வெல்லும் ஆறாவது உலகக்கோப்பை ஆகும்.

டாஸ் வென்று பௌலிங் தெர்வு செய்தார் ஆஸி கேப்டன் கம்மின்ஸ். அங்கேயே சற்று தடுமாறியது இந்திய அணியின் வெற்றிப் பயணம்.

தளராமல் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது இந்திய படை. 4 ரன்கள் மட்டுமே அடித்து தொடக்கத்திலேயே சுப்மன் கில் வெளியேற, மைதானத்தில் அமைதி நிலவியது. ரோஹித் - கோலி கூட்டணி நம்பிக்கை அளித்தாலும், வழக்கம் போல தன் பங்கான 47 ரன்களை அடித்து அவுட் ஆகினார் ரோஹித்.

அவரை தொடர்ந்து வந்த ஷ்ரேயஸ் ஐயர் 4 ரன்களில் வெளியேற நிதானமாக ஆடிய கோலி அரை சதம் கடந்தார்.

கோலி 54, கே எல் ராகுல் 66 ரன்கள் எடுத்தனர். வந்த மற்ற பேட்டர்களை கம்மின்ஸின் படை பந்தாடியது. பௌண்டரிகளை அரணாக நின்று காத்தார் 37 வயதான டேவிட் வார்னர்.

ஆஸ்திரேலியாவின் கடுமையான பந்துவீச்சில் திணறிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 240 ரன் மட்டுமே எடுத்தது.

எளிய இலக்கை நோக்கி களமிறங்கினாலும், மூன்று விக்கெட்களை மட மடவென இழந்தது ஆஸி. ஜெயித்து விடலாம் என்ற நம்பிக்கை ஒளிரும் சமயத்தில் அமைந்தது டிராவிஸ் ஹெட் மற்றும் லபுஷேன் கூட்டணி. ஹெட் அடித்த 137 ரன்கள் ஆஸியை வெற்றிப்பாதைக்கு கூட்டிச் சென்றது. 43 ஓவர்களில் ஆஸ்திரேலியா வென்றது.

ஆறாவது கோப்பையை கைப்பற்றிய ஆஸி; கண்கலங்கிய இந்திய அணி - என்ன நடந்தது?
RCB vs KKR: ”இந்த தோல்வி எங்களுக்கு தேவைதான்” - என்ன பேசினார் கேப்டன் கோலி?

லீக் சுற்று முதல் எந்த போட்டியிலும் தோல்வி பெறாமல் வந்த இந்திய அணி, கண்ணீரும் கம்பலையுமாக வெளியேறியது. ஆட்டநாயகன் விருதினை டிராவிஸ் ஹெட் பெற்றார். தொடர் நாயகன் விருதினை விராட் கோலி பெற்றார். இதுவே இந்திய அணிக்கு ஆறுதலாக இருந்தது.

அணியின் தேர்வில் பிரச்சினையா, டாஸ் வெல்லாததா, பேட்டிங்கில் ஏன் இத்தனை நாள் இல்லாத தடுமாற்றம் என ரசிகர்கள் பல தியரிக்களை முன்வைத்தனர்.

எதுவானாலும், சொன்னதை செய்து காட்டினார் கம்மின்ஸ்.

இந்தியா தோற்றது!

ஆறாவது கோப்பையை கைப்பற்றிய ஆஸி; கண்கலங்கிய இந்திய அணி - என்ன நடந்தது?
T20WC: இந்திய அணி தோல்வி - வைரலாகும் தோனியின் 11 வருட பழைய ட்வீட்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com