T20WC: இந்திய அணி தோல்வி - வைரலாகும் தோனியின் 11 வருட பழைய ட்வீட்!

இந்நிலையில், தோனி 11 வருடங்களுக்கு முன்னர் பகிர்ந்த ட்வீட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
MS Dhoni
MS DhoniTwitter

இந்திய அணி டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் தோற்ற பிறகு, முன்னாள் கேப்டன் தோனியின் 11 வருட பழைய ட்வீட் தற்போது டிரெண்டாகி வருகிறது. தோனி 2013ல் சாம்பியன்ஸ் டிராஃபி வென்ற பிறகு பேசியதும் வைரலாகி வருகிறது.

8வது டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் தொடங்கியது. சூப்பர் 12 போட்டிகளில் 5ல் நான்கு போட்டிகளில் வென்று இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. இரண்டு அரையிறுதி போட்டிகள் நடந்த நிலையில், முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்தை வீழ்த்தியது.

கடந்த 11 ஆம் தேதி இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் 169 ரன் என்ற இலக்கை இங்கிலாந்து எந்த விக்கெட் இழப்புமின்றி எட்டி வென்றது. இந்திய அணி படு தோல்வி அடைந்தது. இந்திய அணியின் தோல்வியை விட தோல்வி அடைந்த விதம் ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது.

இதனால் முன்னாள் கேப்டன் தோனியின் இல்லாதது பெறும் பலவீனமாக அணிக்கு அமைந்தது என கருத்துகள் வெளியிடத் தொடங்கினர். இந்திய அணி அரையிறுதியை விளையாடுவதற்கு முன்பே முன்னாள் கேப்டன் தோனி டிரெண்டில் இருந்தார். இந்தியா, தோனி இல்லாமல் 15 வருடங்களில் விளையாடிய முதல் நாக் அவுட் போட்டி இந்த அரையிறுதி.

இந்தியா தோல்வியடைந்த பிறகு மீண்டும் தோனி டிரெண்டிங்கில் இருந்தார். இந்நிலையில், தோனி 11 வருடங்களுக்கு முன்னர் பகிர்ந்த ட்வீட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

டிசம்பர் 2, 2011 அன்று, அவர் பதிவிட்ட ட்வீட்டில், "ரோஹன் ராத்தோரின் EMPTINESS என்ற பாடலை கேளுங்கள்" என இருந்தது.

EMPTINESS பாடலின் வரிகள்...

Rohan Rathore

I feel this unrest
That nests all hollowness
For I have nowhere to go and I'm cold

And I feel so lonely yeah...
There's a better place than this
Emptiness

And I'm so lonely yeah...
There's a better place than this
Emptiness, yeah!

இந்த ட்வீட்டை தோண்டி எடுத்த நெட்டிசன்ஸ், நீங்கள் இல்லாமல் இந்திய கிரிக்கெட் அணி தான் வெறுமையாக இருக்கிறது என வருத்தம் தெரிவித்து வருகின்றனர். தோனியின் தலைமையில் இந்திய அணி வென்றது மற்றவர் கூறுவது போல 'அதிர்ஷ்டம்' இல்லை எனவும் ட்வீட் செய்தனர்.

தான் இந்திய அணியில் இல்லாமல் போகும் போது நாம் வெறுமையை உணருவோம் என்பதை முன்னரே தோனி கணித்திருக்கிறார் என்றும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து மூன்றாவது நாளாக எம் எஸ் தோனி டிவிட்டர் டிரெண்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது

MS Dhoni
அடுத்த சீசனுக்கும் தோனி தான் சிஎஸ்கே கேப்டன்? சென்னை அணி குறித்த புதிய அப்டேட்

மேலும், 2013ல் இந்தியா சாம்பியன்ஸ் டிராஃபி இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது. முதலில் பேட் செய்த இந்தியா வெறும் 129 ரன்களையே எடுத்திருந்தது. கடைசி பந்து வரை விறுவிறுப்பாக சென்ற அந்த போட்டியில் இந்தியா இங்கிலாந்தை வீழ்த்தியது. போட்டி முடிந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய கேப்டன் தோனி சொன்னதாவது,

"நான் முதலில் சொன்னது இதுதான். மேலே பார்க்காதீர்கள், கடவுள் இறங்கி வந்து உங்களை காப்பாற்றபோவதில்லை. எந்த உதவியும் கிடைக்கும் என நினைக்கவேண்டாம். நாம் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அணி. அதை நினைவில் வைத்துக்கொண்டு அதற்கு ஏற்றவாறு விளையாடுவோம். இந்த 130 ரன்களை எடுக்கவேண்டும் என்றால் அவர்கள் அதற்கு போராட வேண்டும். இதை எதிரணிக்கு நாம் எளிதாக்கிவிடக் கூடாது" என்றார். இதுவும் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

MS Dhoni
T20WC: 15 ஆண்டுகளில் தோனி இல்லாமல் முதல் நாக் அவுட் போட்டி- இந்தியா இங்கிலாந்தை வெல்லுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com