Asia Cup 2023: இறுதிப் போட்டிக்குள் முதலாவதாக நுழைந்த இந்திய அணி- ஃபைனலில் யாருடன் மோதும்?

இந்திய அணி இந்த வெற்றியின் மூலம் ஆசியக் கோப்பை 2023ன் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. மேலும் வங்கதேச அணியை வெளியேறச் செய்தது. இனி இலங்கை பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ள போட்டி தான் ஃபைனலில் இந்தியாவின் எதிராளியை நிர்ணயிக்கும்.
Asia Cup 2023: இறுதிப் போட்டிக்குள் முதலாவதாக நுழைந்த இந்திய அணி- ஃபைனலில் யாருடன் மோதும்?
Asia Cup 2023: இறுதிப் போட்டிக்குள் முதலாவதாக நுழைந்த இந்திய அணி- ஃபைனலில் யாருடன் மோதும்?ட்விட்டர்
Published on

ஆசியக் கோப்பை இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுவிட்டது. இந்நிலையில், பாகிஸ்தான் இலங்கை அணிகள் மோதவுள்ள போட்டி தான் ஃபைனலில் இந்தியாவை யார் எதிர்கொள்வார்கள் என்பதை முடிவு செய்யும்.

கிட்ட தட்ட மூன்று நாட்களாக விளையாடி வந்தாலும், சற்றும் தளராமல் தனது இலக்கை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது ரோஹித் சர்மாவின் படை.

ஆசியக்கோப்பை சூப்பர் ஃபோர் போட்டியில், நேற்று இலங்கையை எதிர்கொண்டது இந்திய அணி.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முந்தைய நாள் போட்டியில், பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய எந்த இந்திய நட்சத்திரமும், டிஃபெண்டிங் சாம்பியன்களான இலங்கை வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள தடுமாறியது.

குறிப்பாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி ஒற்றை எண்ணிக்கை ஸ்கோரில் வெளியேறினார்.

தட்டுத் தடுமாறி, 50 ஓவர் முடிவதற்குள்ளாகவே 213 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்திய அணி. 214 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியும் இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்கள் பிடியில் சிக்கித் தவித்தது.

Asia Cup 2023: இறுதிப் போட்டிக்குள் முதலாவதாக நுழைந்த இந்திய அணி- ஃபைனலில் யாருடன் மோதும்?
Asia Cup 2023: மழையால் தடையான Ind vs Pak போட்டி - புள்ளிப் பட்டியலில் என்ன மாற்றம்?

தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழக்க, கொஞ்சம் நம்பிக்கை ஊட்டியது இளம் வீரர் வெல்லலாங்கே மற்றும் தனஞ்சயா வின் ஆட்டம் தான்.

கொஞ்சம் இலங்கையின் பக்கம் வீசிய காற்றை இழுத்து இந்தியாவின் பக்கமாக ஜடேஜாவும் குல்தீப் யாதவும் விட, 41 ஓவர்களில், அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியுற்றது இலங்கை.

குல்தீப் யாதவ் 4 விக்கெட்களை வீழ்த்தினார். இலங்கை சார்பில் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் இளம் வீரர் வெல்லலாங்கே இந்தியாவை ஆட்டம் காணவைத்தது குறிப்பிடத்தக்கது

இந்திய அணி இந்த வெற்றியின் மூலம் ஆசியக் கோப்பை 2023ன் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. மேலும் வங்கதேச அணியை வெளியேறச் செய்தது. இனி இலங்கை பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ள போட்டி தான் ஃபைனலில் இந்தியாவின் எதிராளியை நிர்ணயிக்கும்.

கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி இந்தியா பாகிஸ்தான் மோதியது. மழையின் காரணமாக மறுநாளும் இவ்விரு அணிகள் விளையாடின. தொடர்ந்து மூன்றாவது நாளாக விளையாடி வந்தாலும், இந்திய அணி தனது வெற்றியை விட்டுக்கொடுக்கவில்லை

Asia Cup 2023: இறுதிப் போட்டிக்குள் முதலாவதாக நுழைந்த இந்திய அணி- ஃபைனலில் யாருடன் மோதும்?
Asia Cup 2023: கோலி, ராகுல் அதிரடி சதம் - இமாலய வெற்றி கண்ட இந்திய அணி!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com