T20WC: ரோஹித் சர்மாவுக்கு காயம்; அரை இறுதியிலிருந்து விலகுவாரா இந்திய அணி கேப்டன்?

இதனால் பயிற்சியின் இடையில் அவர் வெளியேறினார். பயிற்சியாளர் வீசிய பந்து 150 கிமீ வேகத்திற்கும் அதிகமாக வந்துள்ளது என வட்டாரங்கள் தெரிவித்தன.
ரோஹித் சர்மா
ரோஹித் சர்மாடிவிட்டர்
Published on

இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு பயிற்சியின் போது காயம் ஏற்பட்டுள்ளது. வரும் நவம்பர் 10 ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக அரையிறுதிப் போட்டி நடைபெறவுள்ள நிலையில், இந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்று முடிந்து இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்திய அணி நவம்பர் 10 அன்று இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. போட்டி ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் நடக்கிறது. இதற்காக வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

ரோஹித் சர்மா
IndvsPak: கோலியின் ஆட்டத்தால் 1 மணி நேரம் சரிந்த UPI பரிவர்த்தனை! நிபுணர் பகிர்வு வைரல்

அப்போது இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். இந்திய அணியின் sidearm thrower ரகு ராகவேந்திரா ரோஹித்திற்கு பந்துவீசியுள்ளார். அப்போது அவருக்கு வலது கையில் பந்து வேகமாக பட்டதில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பயிற்சியின் இடையில் அவர் வெளியேறினார். பயிற்சியாளர் வீசிய பந்து 150 கிமீ வேகத்திற்கும் அதிகமாக வந்துள்ளது என வட்டாரங்கள் தெரிவித்தன.

ரோஹித் சர்மா காயம் ஏற்பட்ட கையில் பெரிய ஐஸ் பேக்குடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரோஹித் சர்மாவுக்கு கை உடைந்திருக்கக்கூடும் என சந்தேகிக்கும் நிலையில், நாளை மறுநாள் அரையிறுதியில் அவர் விளையாடுவாரா என்ற கேள்விகள் தற்போது எழுந்து வருகின்றன.

சமீபத்தில் இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொண்டபோது, மழையால், இந்திய அணி வீரர்கள் ஷூக்களில் சேறு படிந்திருந்தது. அதை அகற்ற மைதானத்தில் கையில் பிரஷ்ஷுடன் சுற்றித்திறந்த பயிற்சியாளர் ரகு ராகவேந்திரா பலரது மனதை கவர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது

ரோஹித் சர்மா
T20WC: அரையிறுதிக்குள் நுழைந்த இந்திய அணி; டிரெண்டாகும் #chokers - என்ன நடந்தது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com