IPL 2022 : கொல்கத்தாவை தட்டித் தூக்கிய டெல்லி; MI தொடர்ந்து KKR 5 மேட்சில் காலி

தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ள கொல்கத்தா அணிக்கு மெல்ல மெல்ல பிளே ஆஃப் வாய்ப்பு மங்கி வருகிறது.
KKR vs DC
KKR vs DCIPL
Published on

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் சுற்று ஆட்டம் நேற்று மும்பை

வான்கடே மைதானத்தில் நடந்தது. இந்த ஆட்டத்தில் டெல்லி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

கொல்கத்தாவை வீழ்த்தியதால் பிளே ஆஃபுக்கு முட்டி மோதிச் செல்லும் வாய்ப்பை தக்கவைத்துள்ளது ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ்.

தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ள கொல்கத்தா அணிக்கு மெல்ல மெல்ல பிளே ஆஃப் வாய்ப்பு மங்கி வருகிறது.

மும்பை மற்றும் சென்னை அணிகளை தொடர்ந்து கடைசி மூன்று இடங்களில் கொல்கத்தாவுக்கு இடம்பிடித்துள்ளது.

நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்று டெல்லி அணி ஃபீலடிங்கை தேர்ந்தெடுத்தது.

அபயாகரமான ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஃபின்ச் அசால்டாக ஆட்டமிழக்கச் செய்தார் டெல்லி பௌலர் சேத்தன் ஷர்மா.

கொல்கத்தாவுக்கு அங்கு தொடங்கியது சனி; பவர்பிளேவுக்குள் மற்றொரு ஓப்பனிங் பேட்ஸ்மேன் வெங்கடேஷ் அய்யரும் ஆட்டமிழந்தார்.

பவர்பிளே முடிவில் அதாவது 30 பந்துகள் முடிவில் இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு வெறும் 29 ரன்கள் எடுத்திருந்தது கொல்கத்தா.

இது தேறாது மாப்ள என கொல்கத்தா ரசிகர்கள் கொஞ்சம் சுணங்கும்போது அடுத்தடுத்து சம்மட்டி அடி கொடுத்தனர் டெல்லி பௌலர்கள்.

ஆட்டத்தின் எட்டாவது ஓவரை வீச பௌலர் குல்தீப் யாதவை அழைத்தார் ரிஷப் பந்த். அவர் தனது முதல் ஓவரை வீசினார்.

இந்திரஜித் மற்றும் சுனில் நரேனை அடுத்தடுத்த பந்துகளில் வெளியே கிளம்பு என அனுப்பி வைத்தார் குல்தீப். அப்போது நான்கு விக்கெட்டுகளை இழந்து வெறும் 36 ரன்களை மட்டுமே எடுத்து பரிதாபமாய் காட்சி அளித்தது கொல்கத்தா.

அப்போது நிதீஷ் ராணா மற்றும் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி சற்றே நம்பிக்கை தரும் விதமாக ஆட்டத்தை நகர்த்தியது.

மெல்ல மெல்ல கொல்கத்தா மீண்டு கொண்டிருக்கையில் ஆட்டத்தின் 14வது ஓவரை வீச வந்தார் குல்தீப் யாதவ்.

அப்போது 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 84 ரன்கள் என இருந்த ஸ்கோர் குல்தீப் ஓவர் முடிந்தவுடன் 85/6 ஆனது. இந்த ஓவரில் ஷ்ரேயாஸ் அய்யர், ஆந்த்ரே ரஸ்ஸல் என கொல்கத்தாவின் தூண்கள் இரண்டையும் வேரோடு பிடிங்கிப் போட்டார் குல்தீப்.

ஆனால் நிதீஷ் ராணா மட்டும் தனி ஆளாக துவம்சம் செய்தார். கடைசி ஓவரில் மூன்று விக்கெட்டுகளை இழந்தது கொல்கத்தா. அதில் ராணாவும் ஒருவர். அந்த ஓவரில் வெறும் இரண்டு ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து அற்புதமாய் வீசினார் முஸ்தாஃபிசுர் ரஹ்மான்.

நிதிஷ் ராணா 34 பந்துகளில் மூன்று பௌண்டரி, நான்கு சிக்ஸர்கள் உதவியுடன் 57 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

கொல்கத்தா 20 ஓவர்கள் முடிவில் 146 ரன்கள் எடுத்து. டெல்லி அணி சார்பில் குல்தீப் நான்கு விக்கெட்டுகளையும், முஸ்தாஃபிசுர் ரஹ்மான் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

சேஸிங்கின் போது முதல் பந்திலேயே டெல்லி ஓப்பனிங் பேட்ஸ்மேன் பிரித்வி ஷா அவுட் ஆனார், இரண்டாவது ஓவரில் மிச்செல் மார்ஷ் அவுட் ஆனார். இதனால் ஆட்டத்தில் சுவாரசியம் ஏற்பட்டது. ஆனால் வார்னர் தான் சந்தித்த பந்துகளை சின்னப்பின்னமாக்கினார்.

KKR vs DC
Bermuda Triangle : உண்மையில் இங்கு கப்பல்கள் காணாமல் போகிறதா? - விலகும் மர்மம்

அவர் 26 பந்துகளை சந்தித்து எட்டு பந்துகளை பௌண்டரிக்கு விரட்டி 42 ரன்கள் எடுத்திருந்த நிலையில் உமேஷ் யாதவ் பந்தில் வீழ்ந்தார். அப்போது பத்து ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்திருந்தது டெல்லி.

ஆனால் அதன் பிறகு அடுத்த இரண்டு ஓவர்களில் லலித் யாதவ் மற்றும் பந்த் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழக்க ஸ்கோர் 84/5 என்றானது. இதனால் ஆட்டம் வேகம் வேகமாக கொல்கத்தா பக்கம் நகர்ந்து கொண்டிருந்தது.

ஆனால் அக்சர் படேல் மற்றும் அவரை தொடர்ந்து ராவ்மென் பொவெல் சிறப்பாக பேட்டிங் செய்து டெல்லியை பாதுகாப்பாக வெற்றிக்கோட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றிய குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com