IPL 2022 : இங்க அடிச்சா அங்க வலிக்கும் - SRH-ஐ போட்டுத் தள்ளிய வார்னர்

காயம்பட்ட சிங்கமாக வார்னர் கர்ஜனையுடன் களமிறங்குவதைக் கண்டு ஹைதரபாத் பந்துவீச்சாளர்கள் அலறியடித்து ஓடினர். ஃபீல்டர்கள் மைதானத்தின் அத்தனை புறமும் ஓடி ஓடி டயர்டானார்கள், 92 ரன்கள் விளாசி கெத்து காட்டினார் டேவிட் வார்னர்.
வார்னர்
வார்னர்Twitter

சன் ரைஸர்ஸ் ஹைதரபாத் அணியின் முதுகெலும்பாக இருந்தவர் டேவிட் வார்னர். அதிரடி சரவெடி ஆட்டமானாலும் சரி, அபாரமான கேப்டன்சியானாலும் சரி கெத்து காட்டியவர்.

சன் ரைசர்ஸ் அணி அவர் தலைமையில் தான் ஐபிஎல் கோப்பையை வென்றது. அப்பேற்பட்ட வார்னரை கடந்த சீசனில் வெளியே உட்காரவைத்து அசிங்கப்படுத்தி அனுப்பியது காவ்யா மாறன் அணி நிர்வாகம். இந்த முறை அணியிலிருந்தே கழட்டிவிட்டது.

ஹைதராபாத் அணியால் துரத்திவிடப்பட்ட வார்னரை ஏலத்தில் அள்ளி அனைத்து டெல்லி கேபிட்டல்ஸ். இத்தகைய சூழலில் தான் டெல்லி கேபிட்டல்ஸ் சன் ரைசர்ஸ் ஹைதரபாத் ஆட்டம் எப்போது நடக்கும், அதில் வார்னர் எப்படி விளையாடுவார் என எதிர்பார்ப்புகள் எழுந்தன.

நேற்றைய தினம் பிரபோர்ன் மைதானத்தில் ஆட்டம் நடந்தது. காயம்பட்ட சிங்கத்தின் கர்ஜனையை கண்டு ஹைதரபாத் பந்துவீச்சாளர்கள் அலறிஅடித்து ஓடினர். ஃபீல்டர்கள் மைதானத்தின் அத்தனை புறமும் ஓடி ஓடி டயர்டானார்கள், நேற்றைய ஆட்டத்தில் 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெல்லி அணி பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை தக்கவைத்து.

டாஸ் வென்ற சன் ரைஸர்ஸ் அணி பந்துவீசிச்சை தேர்வு செய்தது.

மன்தீப் சிங் மற்றும் வார்னர் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கினர். முதல் ஓவரை புவேனஸ்வர் குமார் வீசினார். மன்தீப் எதிர்கொண்டார்.

ஐந்தாவது பந்தில் டக் அவுட் ஆனார் மன்தீப். முதல் ஓவரையே மெய்டன் ஓவராக வீசி ஆச்சர்யப்படுத்தினார் புவனேஷ்வர் குமார்.

வார்னர்
KGF Rocky Bhai : தேடி வந்த பல கோடி மதிப்பிலான வாய்ப்பை மறுத்த நடிகர் - ஏன்?

இரண்டாவது ஓவரை சீன் அபாட் வீசினார். தான் எதிர்கொண்ட முதல் பந்தையே பௌண்டரிக்கு விளாசி வேட்டையை துவங்கினார் வார்னர். குறிப்பாக உம்ரான் மாலிக் வீசிய நான்காவது ஓவரில் இரண்டு பௌண்டரி ஒரு சிக்ஸர் விளாசி அதிரடித்தார்.

ஒரு முனையில் விக்கெட் விழுந்தாலும் வார்னரின் ரன் பசிக்கு முன் ஹைதரபாத் பந்துவீச்சளர்கள் தெறித்தார்கள். ஷ்ரேயாஸ் ஓவரில் மூன்று சிக்ஸர், ஒரு பௌண்டரி என மிரட்டிய ரிஷப் பந்த் அதே ஓவரில் வீழ்ந்தார். பந்த் ஆட்டமிழந்ததும் வார்னருக்கு பக்கபலமாக பொவேல் விளையாடினார்.

நிக்கோலஸ்
நிக்கோலஸ்Twitter

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்தது ஹைதரபாத். பொவேல் மற்றும் வார்னர் இருவரும் அரைசதம் அடித்தனர். டேவிட் வார்னர் 58 பந்துகளில் 92 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமலிருந்தார்.

ஹைதரபாத் அணி சேஸிங்கை தொடங்கியது, அபிஷேக் வர்மா சொதப்ப கேப்டன் வில்லியம்சன் தடவ சேசிங் மந்தமாக தொடங்கியது. இவர்கள் இருவரும் அவுட் ஆன பிறகு திரிபாதி லைட்டாக எரிய தொடங்கினார் ஆனால் அதை மார்ஷ் தடுத்து நிறுத்தினார்.

ஏழு ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து வெறும் 37 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது ஹைதராபாத்.

அதன்பிறகு மார்க்கரம் பூரன் ஜோடி சேர்ந்து டெல்லி பௌலர்களை ஓடவிட்டனர். மளமளவென ரன்கள் உயர்ந்த நிலையில் 25 பந்துகளில் நான்கு பௌண்டரி மூன்று சிக்ஸர்கள் என 42 ரன்கள் எடுத்து மார்க்ரம் அவுட் ஆனார்.

வார்னர்
"இன்னும் 2 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் " - கோலிக்கு வார்னர் 'அடடா' அட்வைஸ்

கடைசியில் நிக்கோலஸ் பூரன் அதிரடியால் ஆட்டம் காண வைக்க முயற்சித்தார். ஆனால் அவரையும் சமாளித்தது டெல்லி. அவர் 34 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து வீழ்ந்தார். ஆரவாரமின்றி 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்று மேட்சை முடித்தது டெல்லி.

மேலும் ரிஷப் பந்த் அணி புள்ளிபட்டியலிலும் ஐந்தாமிடத்துக்கு முன்னேறியது, ஹைதராபாத் ஆறாமிடத்துக்கு தள்ளப்பட்டது. இபோதைய சூழலில் பிளே ஆஃப் செல்ல எட்டு அணிகளுக்கு வாய்ப்புள்ளது.

ஹைதராபாத்தை நொறுக்கிய வார்னர் நேற்றைய ஆட்டத்தின் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

வார்னர்
IPL 2022 : சென்னை வெளியே ஜாவ்- பிளே ஆஃப் ரேஸில் CSK-ஐ துரத்திவிட்ட பெங்களூரு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com