IPL 2022 : நடராஜன் பந்தில் 4 சிக்ஸர்; மிரட்டிய சிங்கப்பூர் வீரர் - மிரண்டது SRH

நேற்றைய போட்டி ஒரு ஹை ஸ்கோரிங் மேட்ச். ஆனாலும் கடைசி ஓவரின் கடைசி இரு பந்துகள் வரை திரில்லுக்கு பஞ்சமில்லை. வெறும் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் ஹைதரபாத் மும்பையை தோற்கடித்தது. இதன் மூலம் பிளே ஆஃப் ரேஸில் இன்னமும் தொடர்கிறது.
நடராஜன் பந்தில் 4 சிக்ஸர்; மிரட்டிய சிங்கப்பூர் வீரர் - மிரண்டது SRH
நடராஜன் பந்தில் 4 சிக்ஸர்; மிரட்டிய சிங்கப்பூர் வீரர் - மிரண்டது SRHNewsSense
Published on

ஐபிஎல் 2022 லீக் சுற்று முடிவதற்கு இன்னும் ஒரு சில போட்டிகள் மட்டுமே உள்ளன. ஆனாலும் இன்னமும் பிளே ஆஃப் சுற்றுக்கு ஒரு அணி மட்டுமே அதிகாரபூர்வமாக தகுதி பெற்றுள்ளது. அந்த அளவுக்கு கடந்த சில நாட்களின் போட்டிகளின் முடிவுகள் அமைந்துள்ளன.

நேற்றைய போட்டி ஒரு ஹை ஸ்கோரிங் மேட்ச். ஆனாலும் கடைசி ஓவரின் கடைசி இரு பந்துகள் வரை திரில்லுக்கு பஞ்சமில்லை. வெறும் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் ஹைதரபாத் மும்பையை தோற்கடித்தது. இதன் மூலம் பிளே ஆஃப் ரேஸில் இன்னமும் தொடர்கிறது.

நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்று மும்பை சேஸிங்கை தேர்ந்தெடுத்தது. கடந்த சில பல போட்டிகளாக சொதப்பிக் கொண்டிருந்த கேன் வில்லியம்சன் நேற்றைய ஆட்டத்தில் ரைட்டு விடு என ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்குவதை தவிர்த்தார். இதனால் அபிஷேக் ஷர்மா மற்றும் பிரியம் கார்க் என இரு இளம் வீரர்கள் களமிறங்கினர்.

மூன்றாவது ஓவரில் அபிஷேக் அவுட் ஆக, ராகுல் திரிபாதி களம் புகுந்தார். அங்கிருந்து மும்பைக்கு ஆரம்பித்தது ஏழரை. பவர்பிளேவில் 57 ரன்கள் எடுத்த ஹைதராபாத் பத்தாவது ஓவரில் பிரியம் கார்கை இழந்தது. அப்போது இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்திருந்தது. கார்க் 26 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார்.

நிக்கோலஸ் பூரன் கொஞ்ச நேரம் தான் இருந்தார் என்றாலும் வான வேடிக்கை காட்ட தவறவில்லை. இதற்கிடையில் திரிபாதி தனது அரை சதத்த்தை பூர்த்தி செய்தார்.

44 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கேன் வில்லியம்சன் இறுதி ஓவர்களில் களமிறங்கியபோதும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை. மும்பை வெற்றிக்கு 194 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

மும்பை சேஸிங்கில் ஓப்பனிங் கச்சிதம். விக்கெட் கொடுக்காமல் நான்கு ஓவரை ஒட்டியது மும்பை. அப்போது நடராஜன் பந்து வீசவந்தார். இஷான் கிஷன் 2 பௌண்டரி அடிக்க, ரோகித் ஒரு சிக்ஸர் வைக்க 16 ரன்கள் அந்த ஓவரில் வந்தது. இதனால் பவர்பிளேவில் விக்கெட் ஏதும் இழக்காமல் 50 ரன்களை கடந்தது மும்பை. 10 ஓவர்களில் ஸ்கோர் விக்கெட் இழப்பின்றி 89 ரன்கள்.

11வது ஓவரில் வாஷிங்டன் சுந்தர் பந்து வீச வந்தார். அவரிடம் ரோகித் அவுட் ஆனார். நேற்றைய ரோகித் ஷர்மா நீண்ட நாட்களுக்கு பிறகு சிற்ப்பான ஷாட்களை ஆடினார். அவர் நான்கு சிக்ஸர்கள் இரண்டு பௌண்டரிகள் வைத்து 36 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார்.

அவர்போன கையோடு அடுத்த ஓவரிலேயே இஷான் கிஷன் உம்ரான் மாலிக் வேகத்தில் சாய்ந்தார்.

ஆட்டத்தின் 15வது ஓவரில் திலக் வர்மா மற்றும் டேனியல் சாம்ஸ் என இருவரின் விக்கெட்டுகளை வீழ்த்தி வெறும் நான்கு ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து ஒரு திருப்புமுனையயை கொண்டுவந்தார் உம்ரான் மாலிக்.

16வது ஓவரை நடராஜன் வீசினார். அடுத்தடுத்து இரு பௌண்டரிகள் விளாசினார் சிங்கப்பூரை சேர்ந்த கிரிக்கெட் வீரர் டிம் டேவிட்.

17வது ஓவரை சிறப்பாக வீசிய புவனேஷ்வர் குமார் 9 ரன்கள் கொடுத்தார். அந்த ஓவரில் ஒரு ரன் அவுட் வேறு.

18வது ஓவரை வைடுடன் ஆரம்பித்தார் நடராஜன். அந்த ஓவரில் நான்கு சிக்ஸர்கள் வைத்தார் டிம் டேவிட். அவர் அடித்த அடி ஒவ்வொன்றும் இடியாய் பாய்ந்தது. ஆனால் சற்றும் மனம் தளராத நடராஜன் அதே ஓவரின் கடைசி பந்தில் டிம் டேவிட்டை ரன் அவுட் செய்து பழிதீர்த்தார். இந்த ஓவரில் மட்டும் 26 ரன்கள் விட்டுக்கொடுத்தார் நடராஜன். மொத்தமாய் 4 ஓவர்களில் 60 ரன்கள் கொடுத்தார்.

19வது ஓவர் வீசிய புவனேஷ்வர் குமார் ஆட்டத்தில் மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்தினார். ஆம் அந்த ஓவரை விக்கெட் மெய்டனாய் வீசினார். கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுத்தது மும்பை. எனினும் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ஹைதரபாத் அணிக்காக அபாரமாக பேட்டிங் சேய்த ராகுல் திரிபாதி ஆட்டநாயகன் ஆனார்.

ஹைதரபாத் வெற்றியை அடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி இரு இடங்களை பிடிப்பது உறுதியானது. ஆம் எட்டாமிடத்தில் இருக்கும் ஹைதரபாத் அணி 12 புள்ளிகளை பெற்றுள்ளது. ஒன்பதாமிடத்தில் இருக்கும் சென்னை 8 புள்ளிகளை பெற்றுள்ளது. அடுத்த போட்டியில் வென்றாலும் கூட 10 புள்ளிகள் மட்டுமே பெறமுடியும் சூழலில் உள்ளது.

நடராஜன் பந்தில் 4 சிக்ஸர்; மிரட்டிய சிங்கப்பூர் வீரர் - மிரண்டது SRH
Elon Musk: இல்ல... இல்ல... மொத்த கோட்டையும் அழிங்க - Twitter விவகாரத்தில் மஸ்க் யூடேர்ன்

13வது போட்டியில் விளையாடிய மும்பை அணி இந்த சீசனில் சந்திக்கும் 10வது தோல்வி இது.

ஹைதரபாத் நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றுள்ளது என்றபோதிலும் அந்த அணிக்கு சாதகமாக மற்ற அணிகளின் வெற்றி தோல்வி அமைந்தாலும் கூட நெட் ரன்ரெட் மோசமான நிலையில் தான் இருக்கிறது.

டிம் டேவிட் அதிரடி இன்றி ஒருவேளை 50 அல்லது அதற்கு அதிகமான ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றிருந்தால் ஹைதராபாத்துக்கு ஒரு பிரகாசமான வாய்ப்பு உருவாகியிருக்கும். ஆனால் இப்போதைய சூழலில் ஹைதரபாத் பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பு மிக மிக கடினமே.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com