IPL 2022 - SRH vs LSG : வாஷிங்டன் சுந்தரின் மாஸ் பவுலிங் ஆனாலும் சறுக்கிய ஐதராபாத் அணி

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து நடைபெற்ற முதல் இன்னிங்ஸில் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார் வாஷிங்டன் சுந்தர்.
IPL 2022 - SRH vs LSG
IPL 2022 - SRH vs LSGNewsSense
Published on

ஐபிஎல் தொடரின் 12வது லீக் போட்டியில் நேற்று லக்னோ மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து நடைபெற்ற முதல் இன்னிங்ஸில் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார் வாஷிங்டன் சுந்தர்.

NewsSense

என்ன நடந்தது?

ஐபிஎல் கிரிக்கெட் சீசன் கடந்த மாதம் 15-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் ஐதராபாத் - லக்னோ அணிகள் மோதின.

டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் வில்லியம்சன் கேப்டன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி லக்னோ அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்கியது.

தொடக்க வீரராக களமிறங்கிய டி காக் 1 ரன்கள் எடுத்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் வெளியேறினார். அதை தொடர்ந்து வந்த லீவிசும் ஒரே ரன்னில் மீண்டும் சுந்தர் சூழலில் சிக்கினார்.

அனுபவ வீரர் மனிஷ் பாண்டே 11 ரன்களில் வெளியேற ஒரு கட்டத்தில் லக்னோ அணி 68 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

தொடக்க வீராக களமிறங்கி நிலைத்து நின்று விளையாடி வந்த அணியின் கேப்டன் ராகுல் , தீபக் ஹூடா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.

தீபக் ஹூடா 51 ரன்னிலும் கேப்டன் ராகுல் 68 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதி ஓவரில் இளம் வீரர் ஆயுஷ் படோனி - ஜேசன் ஹோல்டர் ஜோடி அதிரடி காட்ட லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் குவித்தது.

IPL 2022 - SRH vs LSG
செங்கிஸ்கான் கல்லறை : உலகை நடுங்க வைத்த ஒரு மர்ம வரலாறு - அட்டகாச தகவல்

நழுவிய வெற்றி வாய்ப்பு

170 ரன்கள் இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய அணியின் கேப்டன் வில்லியம்சன் 16 ரன்கள் எடுத்த நிலையில் ஆவேஷ் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு அபிஷேக் சர்மா - ராகுல் திரிபாதி ஜோடி சேர்ந்தனர்.

அபிஷேக் சர்மா 13 ரன்களில் வெளியேற ராகுல் திரிபாதி அதிரடியாக விளையாடி 44 ரன்கள் குவித்து க்ருனால் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

மார்க்ரம் 12 ரன்களில் க்ருனால் சுழலில் சிக்கினார். அதன் பிறகு வாஷிங்டன் சுந்தர் - நிக்கோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தனர். சிறப்பாக விளையாடி வந்த பூரன் 34 ரன்களில் அவேஷ் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதற்கு அடுத்தப் பந்திலே அப்துல் சமத் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது . இதனால் லக்னோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

லக்னோ அணியில் சிறப்பாக பந்துவீசிய ஆவேஷ் கான் 24 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

IPL 2022 - SRH vs LSG
வியாழன் கோளை போல உருவாகும் ஒரு கோள் - ஆச்சர்ய தகவல்

கொல மாஸ்


ஐதராபாத் அணி தோற்று இருந்தாலும், அந்த அணியைச் சேர்ந்த தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் சமூக ஊடகங்களில் கொண்டாடப்படுகிறார்.

ஐதராபாத் அணியின் முதல் போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்றது. இதில் 211 என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 78 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. இதன் பின்னர் வந்த வாஷிங்டன் சுந்தர் வெறும் 14 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸருடன் 40 ரன்களை விளாசினார். எனினும் அவர் மீது ஒரு குற்றச்சாட்டு இருந்தது. அதாவது பவுலிங்கில் சொதுப்புகிறார் என்பதே அந்த குற்றச்சாட்டு.

அந்த மேட்ட்சில் பேட்டிங்கில் என்னதான் 285 ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடினாலும் பவுலிங்கில் சொதப்பினார். வெறும் 3 ஓவர்களை வீசிய அவர் 47 ரன்களை தாராளமாக வாரி வழங்கினார். ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் எடுத்துக் கொடுத்தார். இதனால் அவர் ஒரு ஆல்ரவுண்டராக சரியாக செயல்படவில்லை என்ற அதிருப்தி இருந்தது.

இந்த சூழலில் இதற்கெல்லாம் இன்று பதிலடி கொடுத்துள்ளார். முன்னணி வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கும் போது வாஷிங்டன் சுந்தருக்கு 2வது ஓவரை நம்பிக் கொடுத்தார் கே.எல்.ராகுல். அவர் வீசிய 4வது பந்திலேயே லக்னோ அணியின் ஓப்பனர் டிக்காக் 1 ரன்னுக்கு அவுட்டாகி வெளியேறினார். சிக்ஸருக்கு தூக்கி அடிக்க முயன்று சொதப்பியது.

இதனால் மீண்டும் 4வது ஓவரும் சுந்தருக்கு வழங்கப்பட்டது. அந்த ஓவரில் முதல் பந்திலேயே விக்கெட்டை அள்ளினார். ஸ்வீப் ஷாட் ஆட முயன்ற அதிரடி வீரர் எவின் லீவிஸை எல்.பி.டபள்யூ அவுட்டாக்கி வெளியேற்றினார். இதன் மூலம் லக்னோ அணியின் 2 அதிரடி வீரர்களை வெறும் 1 ரன்னுக்கு அவுட்டாக்கி சுந்தர் அசத்தினார்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com