IPL 2023 : லக்னோவை விரட்டி அடித்த தோனியின் சென்னை அணி - வைரலாகும் கௌதம் கம்பீர் ரியாக்சன்

கௌதம் கம்பீர் மற்றும் தோனி இருவருக்குமே 41 வயது தான். ஆனால் எங்க தல சிறந்தவர் என மார்தட்டிக்கொள்கின்றனர் தோனி ரசிகர்கள்.
IPL 2023 : லக்னோவை விரட்டி அடித்த தோனியின் சென்னை அணி - வைரலாகும் கௌதம் கம்பீர் ரியாக்சன்
IPL 2023 : லக்னோவை விரட்டி அடித்த தோனியின் சென்னை அணி - வைரலாகும் கௌதம் கம்பீர் ரியாக்சன் Twitter
Published on

நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது.

நேற்றைய போட்டி ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது. ருதுராஜ் கெய்குவாட் மற்றும் டெவோன் கான்வே முறையே 57 மற்றும் 47 ரன்கள் குவித்தனர்.

கேப்டன் தோனி இரண்டு சிக்ஸர்கள் விளாசினார். மூன்றாவது சிக்ஸருக்கான முயற்சியில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

எனினும் சி.எஸ்.கே ரசிகர்களின் ஆராவாரம் அரங்கத்தை நிறைத்திருந்தது. எதிரணியான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் ரியாக்‌ஷன் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

2011ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற நாளான ஏப்ரல் 2ம் தேதியை சமீபத்தில் கொண்டாடினோம். அந்த போட்டியில் ஒருவருக்கொருவர் பக்கபலமாக விளையாடிய தோனி மற்றும் கம்பீர் இப்போது எதிரெதிர் பக்கத்தில் நிற்கின்றனர்.

ட்விட்டரில் ரசிகர்கள் வைரலாக்கிய சில பதிவுகளைக் காணலாம்,

IPL 2023 : லக்னோவை விரட்டி அடித்த தோனியின் சென்னை அணி - வைரலாகும் கௌதம் கம்பீர் ரியாக்சன்
தோனி டு கோலி- 2011 உலகக்கோப்பை வெற்றி கூட்டணி இப்போதைய நிலை என்ன? '12YearsofIndiaWorldCup'
IPL 2023 : லக்னோவை விரட்டி அடித்த தோனியின் சென்னை அணி - வைரலாகும் கௌதம் கம்பீர் ரியாக்சன்
தோனி, ரெய்னா, ருதுராஜ் : 1426 நாட்களுக்கு பின் சென்னையில் CSK - இந்த போட்டி ஏன் ஸ்பெஷல்?

கௌதம் கம்பீர் மற்றும் தோனி இருவருக்குமே 41 வயது தான். ஆனால் எங்க தல சிறந்தவர் என மார்தட்டிக்கொள்கின்றனர் தோனி ரசிகர்கள்.

தோனி விடுத்த எச்சரிக்கை

நேற்றைய போட்டி ஒரு அதிக ஸ்கோரிங் விளையாட்டாக இருந்தாலும் சென்னையின் வெற்றி தோனியை முழுமையாக திருப்திப்படுத்தவில்லை.

13 வைட் மற்றும் 3 நோபால் விட்டதனால் பௌலர்கள் மேல் அவர் கோபத்துடன் இருந்தார்.

போட்டிக்கு பிறகு பேசும்போது, "இதேப் போல தொடர்ந்தால், அடுத்தது இரண்டாவது எச்சரிக்கை விடப்படும். பின்னர் புதிய கேப்டனுக்கு கீழ் அவர்கள் விளையாட தயாராக இருக்க வேண்டும்" என சிரித்தபடி எச்சரித்தார் தோனி.

ஒரே சீசனில் மூன்று முறை Slow Over Rate எச்சரிக்கை விடப்பட்டால் கேப்டனுக்கு 30 லட்சம் அபராதமும், ஒரு போட்டிக்கான தடையும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

IPL 2023 : லக்னோவை விரட்டி அடித்த தோனியின் சென்னை அணி - வைரலாகும் கௌதம் கம்பீர் ரியாக்சன்
தோனி: சேப்பாக்கில் CSKவுக்கு முதல் வெற்றி- வெளுத்துக்கட்டிய ருதுராஜ்; தல கொடுத்த வார்னிங்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com