IPL : மந்தீப் சிங் முதல் ரோஹித் சர்மா வரை - அதிகம் Duck Out ஆன வீரர்கள் யார் தெரியுமா?
IPL : மந்தீப் சிங் முதல் ரோஹித் சர்மா வரை - அதிகம் Duck Out ஆன வீரர்கள் யார் தெரியுமா?Twitter

IPL 2023: மந்தீப் சிங் முதல் ரோஹித் சர்மா வரை - அதிகம் Duck Out ஆன வீரர்கள் யார் தெரியுமா?

என்னதான் நம் வீரர்கள் பெரிய விஷயங்களை சாதித்திருந்தாலும் மோசமான சாதனைகளையும் நாம் கருத்தில்கொள்ள வேண்டும். அப்படி ஒரு மோசமான சாதனை தான் அதிக டக் அவுட்கள். இந்த சாதனைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பெயர்கள் உங்களுக்கு ஆச்சரிய தரக் கூடியதாக இருக்கும்.
Published on

ஐபிஎல் திருவிழா ஆரம்பித்து கோலகலமாக நடைபெற்று வருகிறது.

முந்தைய ஐபிஎல் போட்டிகளில் பல தருணங்களை திரும்பிப்பார்க்கிறோம்.

பல வெற்றிகள், பல தோல்விகள், மகிழ்ச்சிகள், நெகிழ்ச்சிகள், சாதனைகள்.

என்னதான் நம் வீரர்கள் பெரிய விஷயங்களை சாதித்திருந்தாலும் மோசமான சாதனைகளையும் நாம் கருத்தில்கொள்ள வேண்டும்.

அப்படி ஒரு மோசமான சாதனை தான் அதிக டக் அவுட்கள். இந்த சாதனைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பெயர்கள் உங்களுக்கு ஆச்சரிய தரக் கூடியதாக இருக்கும்.

மந்தீப் சிங்

மந்தீப் சிங் தனது ஐபிஎல் கேரியரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியிருக்கிறார்.

அவர் ஆடிய 97 போட்டிகளில் களமிறங்கி 15 போட்டிகள் ஒரு ரன் கூட எடுக்காமல் விக்கெட்டை இழந்துள்ளார். இது ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனை

தினேஷ் கார்திக்

இப்போது ஆர்சிபி அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருக்கிறார் தினேஷ் கார்திக். இதற்கு முன்னர் டெல்லி டேர்டெவில்ஸ், குஜராத் லயன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்காக விளையாடியிருக்கிறார்.

209 இன்னிங்ஸ் விளையாடியுள்ள இவர் 14 முறை டக் அவுட் ஆகியிருக்கிறார்.

ரோஹித் சர்மா

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா. ஐபிஎல் வரலாற்றில் இவருக்கு முக்கியமான இடம் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இப்படி ஒரு மோசமான இடம் இருக்கும் என்பதை நிச்சயம் யூகித்திருக்க மாட்டீர்கள்!

இதுவரை 223 இன்னிங்ஸ் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 14 போட்டிகளில் டக் அவுட் ஆகியிருக்கிறார்.

IPL : மந்தீப் சிங் முதல் ரோஹித் சர்மா வரை - அதிகம் Duck Out ஆன வீரர்கள் யார் தெரியுமா?
IPL: தூள் கிளப்பிய ஷர்துல்; தடுமாறிய RCB - இயல்பு நிலைக்கு திரும்பியதா பெங்களூரு அணி?

பியூஷ் சாவ்லா

லெக் ஸ்பின்னரான பியூஸ் சாவ்லா இந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதில் ஆச்சரியம் இல்லை. சிலநேரங்களில் பிட்சின் தன்மையை பொருத்து மிடில் ஆர்டரில் பியூஷ் சாவ்லா விளையாடியிருக்கிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளில் இருந்த இவர், இப்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் இவர் விளையாடுகிறார். 13 முறை டக் அவுட் ஆகியிருக்கிறார்.

IPL : மந்தீப் சிங் முதல் ரோஹித் சர்மா வரை - அதிகம் Duck Out ஆன வீரர்கள் யார் தெரியுமா?
44,075 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ஐபிஎல் போட்டி ஒளிபரப்பு உரிமை - விரிவான தகவல்கள்

ஹர்பஜன் சிங்

இந்த பட்டியலில் இருக்கும் மற்றோரு ஸ்பின்னர் ஹர்பஜன் சிங். சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளில் விளையாடியிருக்கிறார்.

2021ம் ஆண்டு வரை விளையாடிய ஹர்பஜன் சிங், இந்த பட்டியலில் 13 டக் அவுட்களுடன் 5வது இடம் பிடித்துள்ளார். சில நேரங்களில் சிக்ஸர், பவுண்டரிக்கு பந்தை விளாசுவார் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

IPL : மந்தீப் சிங் முதல் ரோஹித் சர்மா வரை - அதிகம் Duck Out ஆன வீரர்கள் யார் தெரியுமா?
ரிஷப் பண்ட் முதல் ஷ்ரேயஸ் ஐயர் வரை - ஐபிஎல் 2023ஐ மிஸ் செய்யும் வீரர்கள் யார் யார்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com