வரும் மார்ச் 31 முதல் தொடங்குகிறது 2023ஆம் ஆண்டின் ஐபிஎல் பருவம்.
கடந்த ஆண்டு, அறிமுக சீசனிலேயே கோப்பையை வென்ற குஜராத அணி, சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை முதல் போட்டியில் எதிர்கொள்கிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், இந்த பருவத்திற்கான ஏலம் நடைப்பெற்றது. அதில் அதிகபட்சமாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் சாம் கரணை 18.5 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியது. வழக்கமாக நடப்பது போல முந்தைய ஆண்டு விளையாடிய சில நட்சத்திர வீரர்கள் ஏலம் போகாமல் இருந்தனர், மற்றும் பலர் வெவேறு அணிகளுக்கு மாறியுள்ளனர்.
மார்ச் மாத இறுதியில் தொடங்கி மே மாதம் வரை நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில், காயம் காரணமாக மிகவும் எதிர்பார்க்கப்படும் சில வீரர்கள் விளையாடாமல் விலகியுள்ளனர். அந்த பட்டியலை இங்கு காண்போம்
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுகிறார் ஜஸ்ப்ரீத் பும்ரா.
கடந்த ஆண்டு நடைப்பெற்ற டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னரே முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து விலகினார் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா.
இந்நிலையில், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பும்ரா விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சாலை விபத்தில் சிக்கினார் இந்திய அணி வீரர் ரிஷப் பண்ட். இவர் ஐபிஎல்லில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன்.
விபத்தில் சிக்கிய பண்ட் உயிர் பிழைத்ததே பெரிய விஷயம் என மருத்துவர்கள் கூறிய நிலையில், அவர் உடல்நலம் தேறி எப்போது அணிக்கு திரும்புவார் என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. ஆகையால் இவ்வாண்டு ஐபிஎல்லிலும் இவர் விளையாடமாட்டார்.
இவருக்கு பதிலாக ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் அணியை வழிநடத்தவுள்ளார்.
நியூசிலாந்து அணியின் வீரரான கைல் ஜேமிசனை, ரூ.1 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. வேகப்பந்து வீச்சாளரான இவரும் முதுகு காயம் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
இவருக்கு பதிலாக சிஎஸ்கே தென் ஆப்ப்ரிக்க வீரரான சிசண்டா மகலா என்பவரை அணியில் சேர்த்துள்ளார்.
ரூ.3.2 கோடிக்கு வாங்கப்பட்ட இங்கிலாந்து வீரரான வில் ஜாக்ஸ் காயம் காரணமாக விளையாடமாட்டார். இவர் கடந்த ஆண்டு தான் சர்வதேச டி20 போட்டியில் விளையாடத் தொடங்கினார். இவருக்கு பதிலாக நியூசிலாந்து அணியின் மைக்கல் பிரேஸ்வெல் விளையாடவுள்ளார்.
முதுகு தண்டுவடத்தில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக இந்திய வீரர் பிரசித் கிருஷ்ணா நடப்பு ஐபிஎல்லில் விளையாடமாட்டார். இவரை ராஜஸ்தான் அணி ரூ.10 கோடிக்கு வாங்கியது.
இந்திய அணி பேட்டரான ஷ்ரேயஸ் ஐயர் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார். இவரை கொல்கத்தா அணி ரூ.12.25 கோடிக்கு வாங்கியது.
இவரை கொல்கத்தா அணி நிர்வாகம் கேப்டனாக அறிவித்திருந்தது. இவருக்கு பதிலாக மேற்கு இந்திய வீரர் சுனில் நரேன் அல்லது இந்திய அணியின் நிதிஷ் ராணா கேப்டனாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust