ஐபிஎல் 2022 சீசனில் தோக்குறவன் ஜெயிப்பான்; ஜெயிக்கறவன் தோப்பான் கதையாகக் கடைசி சில போட்டிகளின் முடிவுகள் அமைந்துள்ளன. மும்பை, சென்னை, கொல்கத்தா என பாயின்டஸ் டேபிளில் கடைசி மூன்று இடங்களிலிருந்த அணிகள் சமீபத்தில் அடுத்தடுத்து வெற்றி பெற்றுள்ளன.
பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் அடுத்தடுத்து இரு போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளன. இதனால் ஐபிஎல் சீசனில் புது டிவிஸ்ட் இருக்குமா என எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் ராயல்ஸ் அணியை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பந்தாடியது நைட் ரைடர்ஸ்.
இதன் மூலம் புள்ளி பட்டியலில் ஏழாமிடத்துக்கு முன்னேறியுள்ளது கொல்கத்தா. தொடர்ச்சியாக இரு போட்டிகளில் தோல்வியைத் தழுவியபோதும் மூன்றாமிடத்தில் ராஜஸ்தான் நீடிக்கிறது.
பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் தமது அடுத்த ஆட்டத்தில் தோல்வியடைந்து, கொல்கத்தா தனது அடுத்த ஆட்டத்தில் வெற்றி பெரும் பட்சத்தில் பாயின்டஸ் டேபிளில் அதிர்வலைகள் உண்டாகும் வாய்ப்பிருக்கிறது.
ஆம், கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில் ஐந்தாமிடத்துக்கு முன்னேறும் வாய்ப்பு ஏற்படும். அதே சமயம் கொல்கத்தாவின் இந்த வெற்றி சென்னை அணிக்கு ஒரு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அணி மீதமுள்ள அனைத்து போட்டிகளையும் வென்றே ஆக வேண்டும், அதுவும் அதிக ரன்ரேட்டுடன் அப்போதுதான் தூரத்தில் ஏதேனும் பிளே ஆஃப் வாய்ப்பு கிடைக்குமா எனக் குத்தவைத்துக் காத்திருக்கமுடியும்.
சரி, நேற்றைய ஆட்டத்தில் நடந்தது என்ன?
டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. ராஜஸ்தான் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் படிக்கல்லை மூன்றாவது ஓவரில் தூக்கினார் உமேஷ் யாதவ். பட்லர் கியரை மாற்றுவதற்குள் வாரி வெளியே போட்டார் சவுதீ. கருண் நாயர், ரியான் பராக் கொஞ்ச நேரம் கம்பெனி தர ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பொறுப்பாக விளையாடி அரை சதமடித்து அவுட் ஆனார். இறுதியில் ஹெட்மேயர் வான வேடிக்கை காட்டியதால் ஸ்கோர் 150 ரன்களை கடந்தது.
20 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.
கொல்கத்தா அணி பதற்றப்படாமல் விளையாடி கடைசி ஓவரில் வென்றது. அந்த அணியின் இளம் வீரர் ரிங்கு சிங் 23 பந்துகளில் ஆறு பௌண்டரிகள் ஒரு சிக்சரோடு 42 ரன்கள் எடுத்தார். அவரே ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn: https://www.newssensetn.com/
Nalam360 : https://www.newssensetn.com/health
Newsnow: https://www.newssensetn.com/wow-news
Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu