IPL 2022: நம்பர் 1 இடத்தை பிடித்தது லக்நௌ; இனியும் சென்னைக்கு வாய்ப்பு உண்டா?

தற்போதைய சூழலில் மூன்று அணிகள் 14 அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளை வைத்துள்ளன. பெங்களூரு 12 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் உள்ளது. கொல்கத்தாவும் சென்னையும் இனி மீதமுள்ள அனைத்து போட்டிகளையும் வென்றால் 14 புள்ளிகள் கிடைக்கும்.
LGS
LGSTwitter
Published on

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதிய போட்டியில் 75 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று பாயின்டஸ் டேபிளில் நம்பர் 1 இடத்தை பிடித்தது லக்நௌ. நீண்ட நாட்களாக முதலிடத்திலிருந்து வந்த குஜராத் டைட்டன்ஸ் அணி தற்போது இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

நேற்றைய போட்டியில் கொல்கத்தாவின் ஆட்டம் அதிர்ச்சியளிக்கும் வகையிலிருந்தது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி சேஸிங்கை தேர்ந்தெடுத்தது. முதல் ஓவரிலேயே லக்நௌ கேப்டன் கே.எல்.ராகுலை ரன் அவுட் செய்தார் கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர்.

மிகவும் ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார் ராகுல்.

தீபக் ஹூடா மற்றும் டீ காக் இணைந்து அதிரடி ஆட்டம் ஆடினார். இவர்கள் இருவரும் களத்தில் இருக்கும்போது இந்த இருவரில் யாரேனும் மேன் ஆஃப் தி மேட்ச் பெறக்கூடும் என எதிர்பார்ப்பு நிலவியது.

29 பந்துகளில் அரை சதமடித்த டீ காக் சுனில் நரேன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மிடில் ஓவர்களில் கொல்கத்தா சிறப்பாகப் பந்து வீசியதால் லக்நௌ ரன்வேகம் மட்டுப்பட்டது.

இறுதியில் ஸ்டாய்னிஸ் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியோர் அபாரமான சிக்ஸர்களை விலாச 20 ஓவர்கள் முடிவில் 176 ரன்களை எடுத்தது லக்நௌ.

சேஸிங்கில் கொல்கத்தா முதல் ஓவரிலேயே முதல் விக்கெட்டை இழந்தது, ஆறு பந்துகளைச் சந்தித்து ரன்கள் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார் பாபா இந்திரஜித்.

பவர்பிளேவில் இறுக்கிப்பிடித்தது லக்நௌ. இதன் விளைவாகக் கொல்கத்தா அணியின் ரன்ரேட் மந்தமானது. தவிர இன்னொரு முனையில் விக்கெட் வேகமாக விழுந்துகொண்டிருந்தது. 25 ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்தது.

அப்போது களமிறங்கிய ஆந்த்ரே ரஸ்ஸல் இடியாய் இடித்தார். 19 பந்துகளை சந்தித்து மூன்று பௌண்டரி, ஐந்து சிக்ஸர்கள் என 45 ரன்கள் குவித்து ஆவேஷ் கான் பந்தில் வீழ்ந்தார். அவர் அவுட் ஆனதும் கொல்கத்தா சரணடைந்தது. 101 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய ஆவேஷ் கான் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

அபாரமான இந்த வெற்றி மூலம் குஜராத்தை பின்னுக்குத் தள்ளியது லக்நௌ.

LGS
IPL 2022 : இங்க அடிச்சா அங்க வலிக்கும் - SRH-ஐ போட்டுத் தள்ளிய வார்னர்
kkr
kkrTwitter

நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் பஞ்சாப் ராஜஸ்தான் அணிகள் மோதின. பஞ்சாப் முதலில் பேட்டிங் செய்து 189 ரன்கள் எடுத்தது, அதை ராஜஸ்தான் இரண்டு பந்துகள் மீதம் வைத்து வெற்றிகரமாக சேசிங் செய்தது,

இதன் மூலம் புள்ளி பட்டியலில் 14 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் நீடிக்கிறது.

தற்போதைய சூழலில் மூன்று அணிகள் 14 அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளை வைத்துள்ளன. பெங்களூரு 12 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் உள்ளது.

LGS
வீர் மஹான்: தி கிரேட் காலியின் வாரிசாகும் இந்திய WWE வீரர் - ஆச்சர்ய பயணம்

டெல்லி, ஹைதரபாத், பஞ்சாப் அணிகள் 10 புள்ளிகளோடு பிளே ஆஃப் ரேஸில் உள்ளன. கொல்கத்தாவும் சென்னையும் இனி மீதமுள்ள அனைத்து போட்டிகளையும் வென்றால் 14 புள்ளிகள் கிடைக்கும். ஆனால் அதை வைத்து பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு.

நேற்றைய தோல்வியின் மூலம் கொல்கத்தா அணியும் கிட்டத்தட்ட பிளே ஆஃப் ரேஸில் இருந்து அகற்றப்பட்டுள்ளது என்பதே உண்மை.

LGS
IPL 2022 : சென்னை வெளியே ஜாவ்- பிளே ஆஃப் ரேஸில் CSK-ஐ துரத்திவிட்ட பெங்களூரு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com