Roger Federer: "கடைசி காலத்தில் தோல்விகளை மட்டுமே சந்தித்தேன்" - டென்னிஸ் வீரர் உருக்கம்

டென்னிஸ் உலகில் இவரது 'எதிரி' என்று அழைக்கப்பட்டவர் ரஃபேல் நடால். ஃபெடரர் ஓய்வை அறிவித்தவுடன் நடால் பகிர்ந்திருந்த பதிவு ரசிகர்களுக்கு இன்னும் அதிக வலியை கொடுத்தது.
Roger Federer
Roger Federerinstagram
Published on

"எப்போதும் நாம் எதிர்பார்க்கும்படியான Fairytale Ending நமக்கு கிடைப்பதில்லை" என உருக்கமாகப் பதிவிட்டிருந்தார் டென்னிஸ் உலகின் ஜாம்பவான் ராஜர் ஃபெடரெர். 

டென்னிஸ் விளையாட்டில் எண்ணற்ற சாதனைகளை படைத்தவர் ராஜர் ஃபெடரர். 20 முறை கிரான்ட் ஸ்லாம் டைட்டில், Association of Tennis Proffessionals3 தரவரிசையில், 310 வாரங்களுக்கு முதலிடம், எட்டு முறை சிங்கிள்ஸ் பிரிவில் ஆடவருக்கான விம்பிள்டன், 5 முறை US ஓபன் பட்டங்களை வென்றவர். 

41 வயதாகும் ஃபெடரர் சமீபத்தில் தான் டென்னிஸ் விளையாடுவதிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். எதிர்பார்த்த ஒன்றே ஆனாலும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக வந்தது இந்த செய்தி. 

டென்னிஸ் உலகில் இவரது 'எதிரி' என்று அழைக்கப்பட்டவர் ரஃபேல் நடால். ஃபெடரர் ஓய்வை அறிவித்தவுடன் நடால் பகிர்ந்திருந்த பதிவு ரசிகர்களுக்கு இன்னும் அதிக வலியை கொடுத்தது.

நடால் தனது பதிவில், "என் நண்பனும் எதிரியுமான ராஜர். என் வாழ்வில் இந்த நாள் வராமல் இருந்திருக்கவேண்டும் என ஆசைப்படுகிறேன். உன்னுடன் இணைந்து நான் இத்தனை ஆண்டுகள் கடந்து வந்த இந்த பயணம் எனக்கு நிச்சயம் பெருமைக்குரியது" என சொல்லியிருந்தார். 

கடைசி போட்டியில் அவருக்கு கண்ணீர்மல்க விடைகொடுத்தார் நடால்

இந்நிலையில், நேற்று ஃபெடரர் தன் இன்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் நாம் எதிர்பார்க்கும் படி சில விஷயங்கள் நடப்பதில்லை எனக் கூறியிருந்தார். 

அதில் அவர், "நாம் எல்லோரும் ஒரு இனிமையான முடிவை (Fairytale Ending) எதிர்பார்ப்போம் எனக் கூறி, கடந்த சில வருடங்களாக தனது வாழ்க்கையில் நடந்த துரதிர்ஷ்ட நிகழ்வுகளைக் குறிப்பிட்டிருந்தார். 

" எனது கடைசி ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் தோல்வி 

எனது கடைசி இரட்டையர் பிரிவு போட்டியில் தோல்வி  

எனது கடைசி டீம் ஈவன்ட்டை இழந்தேன்

அந்த வாரத்தில் என் குரலையும் இழந்தேன்

என் வேலையை இழந்தேன்

ஆனால் என் ஓய்வு இதைவிட peRFect ஆக இருந்திருக்க முடியாது" என எழுதியிருந்தார். 

அதிகமாக அதைபற்றி சிந்திக்கவேண்டாம், உங்கள் வழியில் நீங்க எப்போது அற்புதமனவரே! என்றும் உருக்கமாக சொல்லியிருந்தார். 

ஃபெடரரின் இந்த பதிவு ரசிகர்கள் மனதை நெகிழச் செய்துள்ளது. 

Roger Federer
"தோனி மட்டும் தான் என்னிடம் பேசினார்" - மனம் திறந்த விராட் கோலி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com