
உலகக்கோப்பை தொடர் ஆரம்பித்து பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. நேற்று நடந்த வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து அணி வெற்றிபெற்றது.
இது தான் இந்த அணியின் இரண்டாவது வெற்றியாகும். எனினும் நெதர்லாந்து அணியின் வெற்றி பலரையும் சந்தோஷப்படுத்தியது எனலாம். காரணம், நடப்பு சாம்பியனான இங்கிலாந்து இதுவரை ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது.
ஆனால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு முறை, நேற்றைய போட்டியில் ஒரு முறை என நெதர்லாந்து இரண்டு போட்டிகளில் வென்றுள்ளது
மேலும் சிறிய அணிகளாக பார்க்கப்படும் நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான், பெயர்பெற்ற அணிகளுடன் மோதி, நல்ல மார்ஜினில் வெற்றிபெற்று வருகிறது
இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில், 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது நெதர்லாந்து.
இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக பால் வான் மீகெரென் தேந்தெடுக்கப்பட்டார். 4 விக்கெட்களை இவர் வீழ்த்தியிருந்தார். இவரது மூன்று ஆண்டு பழைய ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.
இவர் ஒரு சமயத்தில் உபர் ஈட்ஸில் பணியாற்றி வந்தார்.
கொரோனா காரணமாக 2020 ஆண்கள் உலகக்கோப்பை தொடர் தள்ளிபோனது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இத்தொடரில் விளையாடவிருந்த நெதர்லாந்து அணி வீரர் பால் வான் பொருளாதார காரணங்களால், உபர் ஈட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
"இன்று உண்மையில் நான் கிரிக்கெட் விளையாடியிருக்க வேண்டும் 😏😢 ஆனால், உபர் ஈட்ஸில் பணியாற்றி உணவு வழங்கிக்கொண்டிருக்கிறேன். காலம் எப்படி மாறுகிறது.
வேடிக்கையாக இருக்கிறது அல்லவா? ஆனால், எப்போதும் சிரித்துக் கொண்டே இருங்கள் மக்களே😁" என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
ஆனால், இன்று உலகக்கோப்பையில் தனது அணியின் வெற்றிக்கு வித்திட்டது பலரது கவனத்தை பெற்றுள்ளது.
நெதர்லாந்து அணியின் முதல் வெற்றி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அமைந்தது. தென் ஆப்பிரிக்கா இந்த பருவத்தில் தோற்ற ஒரே போட்டி இது தான்.
நெதர்லாந்து அணியின் பல்வேறு வீரர்களுக்கு பெரிய தொடர்களில் விளையாடும் வாய்ப்புகள் பெரும்பாலும் அமைவதில்லை. பொருளாதார சிக்கல்கள் காரணமாக, வேறு பணிகளில், கார்ப்பரேட் பணிகளில் உள்ளனர். இவர்கள் சிறு சிறு தொடர்களில் விளையாட, பயிற்சி ஆட்டங்களில் ஈடுபடக் கூட சொந்த செலவுகளை தான் நம்பியுள்ளனர்.
ஆகையால் உலகக்கோப்பை வெற்றிகள் அவர்களுக்கு அவசியமானதாக உள்ளன. குறிப்பாக இது டச்சுகாரர்களின் கிரிக்கெட்டின் மீதான பார்வையை மாற்றும் எனவும் கூறுகிறார் பால் வான் மீகெரென்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust