சென்னையில், உணவு டெலிவரி பாயாக பணியாற்றிவரும் இளைஞர், உலகக்கோப்பை நெதர்லாண்ட்ஸ் அணிக்கு விளையாட தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
2023ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை போட்டிகள் வருகின்ற அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கவிருக்கிறது.
இந்த முறை போட்டிகள் முழுக்க முழுக்க இந்தியாவில் நடைபெறுகிறது. சென்னை, கொல்கத்தா, அகமதாபாத் உள்ளிட்ட 10 இடங்களில் போட்டிகள் நடைபெறுகிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த ஆசியக் கோப்பை போட்டிகளில் இந்திய அணி வெற்றிப்பெற்றிருக்கிறது. இதனையடுத்து, உலகக்கோப்பை வெல்வதன் மீதான எதிர்பார்ப்பு இன்னும் கூடியிருக்கிறது.
இந்நிலையில், சென்னையை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான லோகேஷ் குமார் என்ற இளைஞர் நெதர்லாந்து அணியில் விளையாட தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
உலகக் கோப்பைக்கான அணி தேர்வுகள் முடிந்துவிட்டதே என்று நீங்கள் கேட்டால், அது சரி தான். லோகேஷ் குமார் நெதர்லாந்து அணியில் நெட் பௌலராக செயல்படுவார்.
இந்திய மைதானங்களில் விளையாடவுள்ள நெதர்லாந்து அணிக்கு சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள நெட் பௌலர்கள் தேவைப்பட்டனர். மொபைல் செயலில் மூலமாக விண்ணப்பங்கள் அனுப்பி, அதிலிருந்து நால்வரை தேர்வு செய்துள்ளது நெதர்லாந்து அணி நிர்வாகம்.
அவர்களுக்கு கிடைத்த சுமார் 10,000 விண்ணப்பங்களில் இருந்து, 4 பேரை தேர்வு செய்துள்ளது நெதர்லாந்து.
லோகேஷ் குமார் இடது கை சுழற்பந்துவீச்சாளர். இவரது ஸ்டைலை, சைனா மேன் என்று அழைப்பார்கள்.
தமிழ்நாடு கிரிக்கெட் கூட்டமைப்பிற்கு விளையாடி வருகிறார். இந்திய அணியில், ஐபிஎல்லில் விளையாடும் லட்சியத்தில் இருக்கும் இவர், 4 ஆண்டுகளாக ஸ்விக்கியில் பணியாற்றி வருகிறார். இவரது பயிற்சிகளுக்கு ஏற்றவாறு நிறுவனமும் இவருக்கு பணி நேரத்தை ஒதுக்கி கொடுத்துள்ளது.
“பெரும்பாலும் வார இறுதி நாட்களில் Tamilnadu Cricket Associaton போட்டிகள் நடைபெறுவதால், வாரத்தின் மற்ற நாட்களில் நான் டெலிவரி ஏஜண்ட்டாக பணியாற்றுகிறேன்.
தற்போது கிடைத்துள்ள இந்த வாய்ப்பு, எனக்கு பல கதவுகளை திறக்க உதவும். இறுதியாக எனது திறமைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக உணருகிறேன்” என்கிறார் பூரிப்பில் திழைத்திருக்கும் லோகேஷ்.
லோகேஷுடன் ஹர்ஷ் சர்மா, ராஜாமணி பிரசாத், ஹேமந்த் குமார் உள்ளிட்ட இளைஞர்களும் நெட் பௌலராக தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். இது குறித்த அறிவிப்பை தனது X தளத்தில் வெளியிட்டுள்ளது அணி நிர்வாகம்
வழக்கமாக உலகக்கோப்பை போன்ற பெரிய டோர்னமெண்ட்டுகள் நடக்கும்போது, அணியில் இருக்கும் வீரர்களுக்கு அதிக பளு கொடுக்க விரும்பாது நிர்வாகங்கள். எவ்வளவு பயிற்சி தேவையோ, அதே அளவு ஓய்வும் தேவை. இதனால், சில அணிகள், நெட் பௌலர்களை தேர்வு செய்வார்கள்.
இவ்விதம், பேட்டர்களுக்கு பயிற்சி, கிடைக்கும், பௌலர்கள் தேவையான ஓய்வை பெறலாம்.
இப்படி நெட் பௌலராக தேர்வு செய்யப்படுபவர்கள், பெரும்பாலும், இதுவரை சர்வதேச அணியில் விளையாடாத இளம் வீரர்களாக தான் இருக்கிறார்கள். இதனால், தங்களின் திறனை வெளிப்படுத்தி, அணியில் இடம்பெற இது அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கூட.
மேலும், வெளிநாட்டு மைதானங்களில் ஒரு அணி விளையாடுகிற சமயங்களில், உள்ளூரில் இருக்கும் இளைஞர்களை அணி தேர்வு செய்யும். இதற்கு காரணம், அங்குள்ள மைதானத்தின் நிலைக்கு ஏற்றவாறு இந்த பந்துவீச்சாளர்கள் செயல்படுவர். இதனால், பேட்டர்களுக்கு பந்துவீச்சை ஒரளவுக்கு கணிக்க முடிகிறது.
தற்போது, சென்னையை சேர்ந்த லோகேஷ் குமாரும் நெதர்லாந்து அணிக்கு நெட் பௌலராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust