கால்பந்து ஜாம்போவான் பீலே நினைவு தினம் இன்று! அவர் பற்றி இந்த விஷயங்கள் தெரியுமா?

16 வயதில் பிரேசில் கால்பந்து அணியில் இடம்பெற்றார். 17 வயதில் 1958ம் ஆண்டு தனது நாட்டுக்காக உலகக்கோப்பையை பெற்றுத்தந்தார்.
கால்பந்து ஜாம்போவான் பீலே நினைவு தினம் இன்று! அவர் பற்றி இந்த விஷயங்கள் தெரியுமா?
கால்பந்து ஜாம்போவான் பீலே நினைவு தினம் இன்று! அவர் பற்றி இந்த விஷயங்கள் தெரியுமா?Pele/vikatan

இன்று வரை கால்பந்து விளையாடத் தொடங்கும் அனைவருக்கும் ஹீரோவாக இருக்கிறார் பீலே. மெஸ்ஸி ரினால்டோவுக்கெல்லாம் முன்னாலே கால்பந்து உலகில் கொடிநாட்டியவர்.

எட்ஸன் அரன்டென் டூ நசிமென்டோ என்பது பீலேவின் இயற்பெயர். பள்ளியில் படிக்கும் போது பீலேவின் விருப்பத்துக்குரிய ஆட்டக்காரராக இருந்தவர் வாஸ்கோடகாமா கோல்கீப்பர் பைல்(Bile) இவரது பெயரை சிறுவயதில் தவறாக உச்சரித்து வந்தார் பீலே. பின்னாளில் அதுவே அவரது பெயராக மாறியது.

1940ம் ஆண்டு பிறந்த பீலே தனது 15 வயதில் சாண்டோஸ் அணிக்காக கால்பந்து விளையாடத் தொடங்கினார்.

16 வயதில் பிரேசில் கால்பந்து அணியில் இடம்பெற்றார். 17 வயதில் 1958ம் ஆண்டு தனது நாட்டுக்காக உலகக்கோப்பையை பெற்றுத்தந்தார்.

1958, 1962, 1970 என மூன்று முறை இவர் இடம் பெற்ற பிரேசில் அணி உலகக்கோப்பையை வென்றுள்ளது. உலகக்கோப்பை போட்டிகளில் மட்டும் 12 கோல்கள் அடித்திருக்கிறார். ஒட்டுமொத்தமாக 1279 கோல்கள் அடித்த வீரர் பீலே. குறிப்பாக அவரது பைசைக்கிள் கிக்கில் அடிக்கப்படும் கோல்களுக்கு ரசிகர்கள் அதிகம்.

கால்பந்து ஜாம்போவான் பீலே நினைவு தினம் இன்று! அவர் பற்றி இந்த விஷயங்கள் தெரியுமா?
கால்பந்து : வரலாற்றில் முதன்முதலாக கொடுக்கப்பட்ட 'White Card' - விரிவான தகவல்கள்

1994ம் ஆண்டி யுனெஸ்கோவின் நல்லெண்ண தூதராக செயல்படத் தொடங்கினார். 1995ம் ஆண்டு பிரேசிலின் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். 1997ல் பிரிட்டனின் நைட்வுட் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

1999ம் ஆண்டு 20ம் நூற்றாண்டின் சிறந்த வீரர் என்ற அங்கீகாரத்தைப் பெற்றார். 2022ம் ஆண்டு இதேநாளில் இன்னுயிர் நீர்த்தார் பீலே. கால்பந்து என்ற விளையாட்டு இருக்கும் வரை அதன் அரசராக திகழ்வார் அவர்!

கால்பந்து ஜாம்போவான் பீலே நினைவு தினம் இன்று! அவர் பற்றி இந்த விஷயங்கள் தெரியுமா?
Messi: கால்பந்து வீரருக்கு வந்த கொலை மிரட்டல் - அதிர்ச்சியில் ரசிகர்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com