நேற்றைய தினம் பஞ்சாப் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த ஐபிஎல் சீசனில் தனது இரண்டாவது தோல்வியைப் பதிவு செய்துள்ளது.
குஜராத் நேற்றைய போட்டியில் தோல்வியடைந்ததால், பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்ய முடியவில்லை.
மும்பை, லக்நௌ, சென்னை, பெங்களூரு ஆகிய அணிகளை அடுத்தடுத்து சந்திக்கவிருக்கிறது. தற்போது மீதமுள்ள நான்கு போட்டிகளில் குறைந்தபட்சம் ஒரு போட்டியிலும், அதிகபட்சம் இரு போட்டிகளிலும் வென்றால் மட்டுமே அந்த அணி பிளே ஆஃப் வாய்ப்பில் எவ்வித சிக்கலும் இல்லாமல் நுழைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று மாலை வரை எட்டாமிடத்திலிருந்த பஞ்சாப் கிங்ஸ், நேற்று இரவு கிடைத்த வெற்றியால் பாயின்டஸ் டேபிளில் சடாரென தாவி ஐந்தாமிடத்தைப் பிடித்தது. இதன் மூலம் பிளே ஆஃப் ரேஸில் அந்த அணியும் நீடிக்கிறது.
இப்போதைய சூழலில் மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பை முழுமையாக இழந்திருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் சென்னை அணி பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. ஒருவேளை இதில் சென்னை தோற்றால் பிளே ஆஃப் ரேஸில் இருந்து வெளியேறும். வெற்றி பெற்றால் அதே ஒன்பதாவது இடத்தில் நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தினம் குஜராத் தோற்றது எப்படி?
குஜராத் டைட்டன்ஸ் அணி நேற்று டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. ஆனால் அந்த அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 143 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. பஞ்சாப் அணி 16 ஓவர்களில் இலக்கை ஊதி தள்ளியது.
நாங்கள் சேஸிங்கில் சிறப்பாகச் செயல்படுகிறோம், இனி வரும் காலங்களில் முதலில் பேட்டிங் செய்யவேண்டிய தருணம் வந்தால், அதனை எப்படிச் செய்யப்போகிறோம் என்பதைச் சோதித்துப்பார்க்கவும் பயிற்சி பெறவும் இந்த போட்டியில் டாஸ் வென்றும் சேஸிங்கை தேர்ந்தெடுக்கவில்லை என விளக்கம் சொன்னார் குஜராத் கேப்டன் ஹர்டிக் பாண்டியா.
ஆனால் இந்த தோல்வி குஜராத் அணிக்கு எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி பவர்பிளேவிலேயே தொடக்க வீரர்கள், கேப்டன் உட்பட மூன்று பேரின் விக்கெட்டுகளை இழந்தது, அதன் பின்னர் சாய் சுதர்சன் மட்டுமே தாக்குப்பிடித்து ஆடினார். மற்ற வீரர்கள் சொதப்பினார். சாய் சுதர்சன் 50 பந்துகளில் 65 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமலிருந்தார்.
பஞ்சாப் அணி சார்பில் ககிஸோ ரபடா நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பஞ்சாபின் சேஸிங்கின்போது பேர்ஸ்டோ தொடக்க வீரராகக் களமிறங்கினார். ஆனால் அவர் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். எனினும் ஷிகர் தவான் அரை சதமடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமலிருந்தார். பனுகா ராஜபக்ச 28 பந்துகளில் 40 ரன்கள் விளாசி அவுட் ஆனார். அதன்பின்னர் இறங்கிய லிவிங்ஸ்டன் சரவெடி ஆட்டம் ஆடினார். கடைசி ஐந்து ஓவர்களில் பஞ்சாப் அணி வெற்றிக்கு 27 ரன்கள் தேவைப்பட்டது.
16வது ஓவரை முகமது ஷமி வீசினார். லிவிங்ஸ்டன் அந்த ஓவரில் மட்டும் ஹாட்ரிக் சிக்ஸர்கள், இரண்டு பௌண்டரி உட்பட 28 ரன்கள் எடுத்து ஒரே ஓவரில் ஆட்டத்தை முடித்தார்.
நேற்றைய தினம் அவர் 10 பந்துகளில் இரண்டு பௌண்டரி, மூன்று சிக்ஸர்கள் உட்பட 30 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். ஆட்டநாயகன் விருது ரபடாவுக்கு வழங்கப்பட்டது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn: https://www.newssensetn.com/
Nalam360 : https://www.newssensetn.com/health
Newsnow: https://www.newssensetn.com/wow-news
Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu