IPL 2022 : அஷ்வின் அடித்த அரைசதம் வீண்; Beast Mode-ல் ஆடிய டெல்லி | DC vs RR

ராஜஸ்தான் அணி கிட்டத்தட்ட பைல் ஆஃப் வாய்ப்பை உறுதிப்படுத்த ஒரே ஒரு வெற்றி தான் தேவை. ஆனால் தற்போது சொதப்பி வருகிறது. அதற்கு இன்னும் இரண்டு ஆட்டங்கள் தான் மீதமுள்ளன. அதிலொன்று CSK உடன்!
வார்னர்
வார்னர்Twitter
Published on

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் செம அடி வாங்கிய டெல்லியை கேபிடல்ஸ் நேற்றைய தினம் ராஜஸ்தான் அணியை அபாரமாக விளையாடி வீழ்த்தியது. இதன் மூலம் பிளே ஆஃப் ரேஸில் தொடர்ந்து நீடிக்கிறது.

தற்போதைய சூழலில் பாயின்டஸ் டேபிளில் ஐந்தாமிடத்தில் நீடிக்கிறது. கொஞ்சம் வழிவிடுப்பா முன்னாடிப் போயிடுறேன் என வாசலில் காத்துக் கொண்டிருக்கிறது டெல்லி அணி.

ராஜஸ்தான் அணி கிட்டத்தட்ட பைல் ஆஃப் வாய்ப்பை உறுதிப்படுத்த ஒரே ஒரு வெற்றி தான் தேவை. ஆனால் தற்போது சொதப்பி வருகிறது. அதற்கு இன்னும் இரண்டு ஆட்டங்கள் தான் மீதமுள்ளன. ஒரு ஆட்டத்தில் இரண்டாமிடத்தில் உள்ள லக்நௌ சூப்பர் ஜெயன்ட்ஸை எதிர்கொள்கிறது. மற்றொரு ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

எனவே இனி வரும் ஆட்டங்களில் அனல் பறக்கும்; டிவி திரை தீ பிடிக்கும் என எதிர்பார்க்கலாம்.

Ashwin
Ashwin Twitter

நேற்றைய ஆட்டத்தை பொருத்தவரை டாஸ் வென்ற டெல்லி அணி சேஸிங்கையே தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியின் அபாயகரமான தொடக்க வீரர் ஜாஸ் பட்லரை செட்டில் ஆவதற்கு முன் மூன்றாவது ஓவரிலேயே தூக்கினார் சேத்தன் சகாரியா.

அதன் பின்னர் அதிர்ச்சியளிக்கும் விதமாக பவர்பிளேவில் பேட்டிங் செய்ய ரவிச்சந்திரன் அஷ்வினை அனுப்பியது ராஜஸ்தான் நிர்வாகம்.

ஷர்துல் தாக்கூர் ஓவரில் இரண்டு பௌண்டரிகள், அக்ஷர் படேல் வீசிய ஓவரில் ஒரு சிக்ஸர் ஒரு பௌண்டரி என பவர்பிளேவில் அமர்க்களப்படுத்தினார் அஷ்வின்.

இதனால் பவர்பிளே முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 43 ரன்கள் எடுத்திருந்தது ராஜஸ்தான் அணி.

அதன்பின்னர் மிச்சல் மார்ஷ் பந்தில் யக்ஷவி ஜெய்ஷ்வால் அவுட் ஆனார். அதன் பின்னர் அஷ்வின் - படிக்கல் ஜோடி சேந்தனர். இந்த ஜோடி மேற்கொண்டு விக்கெட்டுகளை விடக்கூடாது என கவனமாக விளையாடியது. இந்த ஜோடி இணைந்து 50 ரன்கள் சேர்த்தது.

Warner, Chahal
Warner, ChahalTwitter

14வது ஓவரின் கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்து ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாகத் தனது கன்னி அரைசதத்தை நிறைவு செய்தார் அஷ்வின்.

ஆனால், 15வது ஓவரின் முதல் பந்திலேயே வீழ்ந்தார். அவர் 38 பந்துகளில் நான்கு பௌண்டரி, இரண்டு சிக்ஸர்களுடன் 50 ரன்கள் குவித்தார்.

அதன்பின்னர் படிக்கல் அதிரடியை கன்டினியூ பண்ண, ஸ்கோர் விறுவிறுவென உயர்ந்தது. ஆனால் கடைசி மூன்று ஓவர்களில் அபாரமாக பந்து வீசி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி 21 ரன்கள் மட்டும் கொடுத்தது டெல்லி.

ராஜஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 160 ரன்கள் எடுத்தது.

டிசிக்கு முதல் ஓவரிலியே அதிர்ச்சி காத்திருந்தது. ஓப்பனிங் பேட்ஸ்மேனை டக் அவுட் செய்தார் டிரென்ட் போல்ட். ஆனால் அதன் பின்னர் டெல்லி ராஜ்ஜியம் தான்.

வார்னர்
IPL 2022 : இங்க அடிச்சா அங்க வலிக்கும் - SRH-ஐ போட்டுத் தள்ளிய வார்னர்
Mitchell Marsh
Mitchell MarshTwitter

பவர்பிளே முடிவில் 38 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த டெல்லி, அதற்கடுத்த ஓவரில் மட்டும் 16 ரன்கள் குவித்தது. வார்னரும் மார்ஸும் இணைந்து மைதானத்தில் தீபாவளி கொண்டாடினர். 62 பந்துகளில் ஐந்து பௌண்டரி, ஏழு சிக்ஸர்களை விளாசி 89 ரன்கள் எடுத்து மார்ஷ் அவுட் ஆனார். அவர் விட்ட பணியைத் தொடர்ந்து செய்து ஆட்டத்தை முடித்து வைத்தார் கேப்டன் பந்த்.

தொடக்க வீரராகக் களமிறங்கிய வார்னர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 52 ரன்கள் எடுத்தார். 11 பந்துகள் மீதம் வைத்து இலக்கை எட்டியது டெல்லி.

இன்றைய ஆட்டத்தில் கடைசி இரு இடங்களில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

வார்னர்
IPL -ல் இருந்து விலகும் ஜடேஜா - காரணம் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com