IPL 2022 : இப்ப நான் ரெடி, May I Come In? - நொறுக்கித் தள்ளும் தினேஷ் கார்த்திக்

ஆனால், என் பிளானே வேற என தினேஷ் கார்த்திக் ஒரு திடீர் அவதாரம் எடுத்தார். 18வது ஓவரில் அவர் வெடித்த விதத்தை பார்க்கும்போது காட்டுத் தீயே பத்திக்குச்சு, இனி யாரும் எதுவும் செய்ய முடியாது எனும் பஞ்ச் தான் நினைவுக்கு வந்தது.
IPL 2022
IPL 2022NewsSense
Published on

36 வயதாகும் தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக், இந்த ஐபிஎல் சீசனில் மாஸ் மிரட்டல் ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கிறார்.

இதனால் இந்திய அணியின் தேர்வாளர்களுக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தயார் செய்ய வேண்டிய பொறுப்பில் இருக்கும் தேர்வுக் குழு வாரியம் ஹர்டிக் பாண்ட்யா மற்றும் தினேஷ் கார்த்திக்கின் மிரட்டல் ஆட்டங்களால் யாரைச் சேர்ப்பது யாரை விடுவது என குழம்பிப் போயிருக்கிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இந்த சீசனில் ஏபி டிவில்லியஸ் இல்லை. ஆனால், அந்த குறையை போக்கும் வகையில் விளையாடி வருகிறதார் தினேஷ் கார்த்திக், ஆர்சிபி அணியில் எப்போதுமே ஓபனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கும். ஆனால் மிடில் ஆர்டர் சொதப்பும். இந்த முறை அமரேந்திர பாகுபலி கணக்காய் ஒற்றை மனிதனாக அணியை இழத்துக் கொண்டிருக்கிறார் தினேஷ் கார்த்திக்.

நேற்றைய தினம் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, பவர்பிளேவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது, அதன் பின்னர் அடுத்த ஓவரிலேயே விராட் கோலி ரன் செய்யப்பட்டார்.

கேப்டன் டுபிளசிஸ், கோலி இருவரும் அவுட் ஆகி பெவிலியனில் உட்கார்ந்திருக்க ஸ்கோர் போர்டு 40 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் எனக் காட்டியது.

அதன்பின்னர் மேக்ஸ்வெல் அபாரமாக விளையாடினார். அவர் ரன் ரேட் சரியாமல் பார்த்துக் கொண்டார். ஆனால் 34 பந்துகளில் ஏழு பௌண்டரிகள், இரண்டு சிக்ஸர்கள் உதவியுடன் 55 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்போது ஸ்கோர் 92/5.

தினேஷ் கார்த்திக், ஷபாஸ் இணை விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தும் நோக்கில் விளையாடியது. இந்த இரு ஜோடிகளும் பொறுப்பாக விளையாடினால் பெங்களூரு 160 ரன்களை கடக்கக் கூடும் எனும் சூழல் நிலவியது.

ஆனால், என் பிளானே வேற என தினேஷ் கார்த்திக் ஒரு திடீர் அவதாரம் எடுத்தார். 18வது ஓவரில் அவர் வெடித்த விதத்தை பார்க்கும்போது காட்டுத் தீயே பத்திக்குச்சு, இனி யாரும் எதுவும் செய்ய முடியாது எனும் பஞ்ச் தான் நினைவுக்கு வந்தது.

ஆம், முஸ்தாஃபிசுர் ரஹ்மான் வீசிய அந்த ஓவரில் முதல் மூன்று பந்துகளை பௌண்டரி விரட்டி ஹாட்ரிக் பௌண்டரி அடித்த தினேஷ், அடுத்த இரு பந்துகளை சிக்ஸருக்கு தூக்கினார், கடைசி பந்தையும் விட்டு வைக்காமல் பௌண்டரிக்கு அனுப்பினார்.

அந்த ஓவரில் மட்டும் 28 ரன்கள் எடுத்தது பெங்களூரு. இந்த ஒரு ஓவர் ஆட்டத்தின் மொத்த போக்கையும் மாற்றியது.

கடைசி இரு ஓவர்களில் இந்த கூட்டணி 29 ரன்கள் அடித்தது. 34 பந்துகளில் ஐந்து பௌண்டரிகள், ஐந்து சிக்ஸர்கள் உதவியுடன் 66 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகாமல் நின்றார் தினேஷ் கார்த்திக்,.

டெல்லி அணி வீரர்கள் வாயடைத்துப் போனார்கள்.

பெங்களூரு அணி டெல்லிக்கு வெற்றி இலக்காக 190 ரன்களை நிர்ணயித்தது.

சேஸிங்கில் பிரித்வி விக்கெட்டை விரைவில் இழந்தாலும் ஐந்து ஓவர்களில் 50 ரன்கள் குவித்து நல்ல தொடக்கம் பெற்றது டெல்லி.

ஆட்டத்தின் 11 வது ஓவரில் வார்னர் வீழ்ந்தார். அவர் 38 பந்துகளில் 66 ரன்கள் விளாசியிருந்தார். அதன்பின்னர் பேட்டிங்கில் தடுமாறிக் கொண்டிருந்த மிச்செல் மார்ஷ் 24 பந்துகளில் 14 ரன்கள் எடுத்த நிலையில் நடையை கட்டினார்.

IPL 2022
கௌதம் அதானி வெற்றிக் கதை : கடத்தப்பட்ட பணையக் கைதி அம்பானியை முந்திய வரலாறு

வேறு எந்த வீரரும் நிலைத்து விளையாடாததால் 20 ஓவர்கள் முடிவில் 173 ரன்கள் மட்டுமே எடுத்தது டெல்லி. பதினாறு ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பெங்களூரு பாயின்டஸ் டேபிளில் மூன்றாமிடத்துக்கு தாவியது. டெல்லி எட்டாவது இடத்தில் தொடர்கிறது.

ஒத்த ஓவரில் மொத்த போட்டியை தலைகீழாக்கிய தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

முன்னதாக நடந்த மற்றொரு ஆட்டத்தில் லக்நௌ அணியிடம் வீழ்ந்தது மும்பை. அந்த போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது லக்நௌ. அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் நேற்றைய தினம் சிறப்பாக விளையாடி சதமடித்தார். அவரே ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

தொடர்ச்சியாக ஆறு போட்டிகளில் தோல்வியடைந்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு கிட்டத்தட்ட கானல் நீர் ஆகிவிட்டது.

IPL 2022
செங்கிஸ்கான் கல்லறை : உலகை நடுங்க வைத்த ஒரு மர்ம வரலாறு - அட்டகாச தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com