ஆறு விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்துள்ளது இந்திய அணி.
இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு 209 ரன்கள் இலக்கை கொடுத்திருந்தது இந்திய அணி. ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்து முதல் போட்டியை வென்றது. 1-0 என்ற கணக்கில் முன்னிலையிலிருந்தது ஆஸ்திரேலியா அணி.
நேற்று நாக்பூரில் இரண்டாவது போட்டி நடைபெற்றது. மழை காரணமாக கிட்ட தட்ட 2 மணி நேரம் தாமதமான போட்டி, கடைசியில் 8 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்க் தேர்வு செய்தது.
களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி சற்று தடுமாறி, 8 ஓவர் முடிவில் 5 விக்கெட்களை பறிகொடுத்து 90 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மேத்யூ வேட் 43 ரன்களும், அணியின் கேப்டன் ஆரன் ஃபின்ச் 31 ரன்கள் எடுத்திருந்தனர். அக்சர் படேல் இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார்.
பின்னர் களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா, கே எல் ராகுல் வலுவான துவக்கம் கொடுத்தனர். ரோஹித் 3 சிக்சர்கள் மற்றும் ராகுல் ஒரு சிக்சர் விளாச, முதல் ஓவரில் இந்தியா 20 ரன் எடுத்திருந்தது. அடுத்த ஓவர்களில் ஆடம் ஜம்பா ராகுல், கோலி, சூர்யகுமார் யாதவ் என முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார்.
மற்றொரு புறம் ஆஸ்திரேலிய பந்துவீச்சை பதம் பார்த்த ரோஹித் பவுண்டரிகளை விளாசிக்கொண்டிருந்தார். ஹர்திக் பாண்டியாவும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்ப, ஆட்டம், ரோஹித் மற்றும் தினேஷ் கார்த்திக்கின் கைகளில் வந்தடைந்தது.
டிகே, தனது 'ஃபினிஷர்' பணியை ஆர்ப்பாட்டமில்லாமல் செய்து முடித்தார். மீதம் இருந்த 9 ரன்களை ஒரு சிக்சர், ஒரு ஃபோர், அடித்து வெற்றிப்பாதைக்கு இட்டு சென்றார். 92 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா 46 ரன் எடுத்திருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் 1-0 என்ற கணக்கை 1-1 என சமன் செய்துள்ளது இந்திய அணி. ஹைதராபாத்தில் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நாளை நடக்கவிருக்கிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust