டி20 உலகக் கோப்பையிலிருந்து ஜஸ்ப்ரீத் பும்ரா காயம் காரணமாக விலகியுள்ளார். வரும் அக்டோபர் மாதம் 20 ஓவர் உலகக் கோப்பை தொடர் துவங்கவுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய நம்பிக்கை நாயகன் ஜஸ்ப்ரீத் பும்ரா. இவர் காயம் காரணமாக விளையாடாமல் இருந்தது, டெத் ஓவர்களில் இந்திய அணிக்கு மிகப் பெரிய பலவீனமாக அமைந்தது.
காயம் சரியாகி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இவர் ஆடினார். ஆனால், தற்போது மீண்டும் அவரது முதுகு பிரச்னை தீவிரமாகியுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இதனால் நடைபெறவுள்ள 20 ஓவர் உலக கோப்பை தொடரில் அவர் விளையாடமாட்டார் என பிசிசிஐ அதிகாரப் பூர்வமாக தெரிவித்துள்ளது.
இந்த காயம் காரணமாக தான் அவர் தற்போது நடைபெற்று வரும் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரில் விளையாடவில்லை. பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருக்கிறார் பும்ரா.
இந்நிலையில், கடந்த ஆண்டு வீடியோ ஒன்றில் முன்னாள் பாகிஸ்தான் வேகபந்து வீச்சாளர் ஷோயப் அக்தர், பும்ரா குறித்து பேசியிருந்தது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அக்தர், பும்ராவின் பவுலிங் ஆக்ஷன் காரணமாக அவருக்குப் பின்பகுதியில் காயம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் எனக் குறிப்பிட்டிருந்தார்.
"பும்ரா அவரது பின்பகுதி மற்றும் தோள்பட்டையைப் பயன்படுத்திப் பந்துவீசுகிறார். அந்த மாதிரி பந்துவீசும்போது பின்பகுதியில் காயம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். இயன் பிஷப், ஷேன் பாண்ட் ஆகிய பவுலர்களும் இதேமாதிரி பவுலிங் ஆக்ஷனை கொண்டவர்கள் தான். அவர்களும் காயத்தால் அவதிப்பட்டார்கள். எனவே பும்ராவிற்கு போதுமான ஓய்வளிப்பது அவசியம்."
5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடினால் 3 போட்டிகளில் மட்டுமே அவரை ஆட வைக்க வேண்டும். 2 போட்டிகளில் ஓய்வளிக்க வேண்டும். அப்படியில்லை என்றால் அவரது ஃபிட்னெஸை பராமரிப்பது கடினம். பும்ரா நீண்டகாலம் காயமில்லாமல் ஆடவேண்டுமென்றால், ஃபிட்னெஸை பராமரிப்பது அவசியம். அனைத்து போட்டிகளிலும் ஆடினால் அவர் காயமடைந்துவிடுவார் என்று அக்தர் எச்சரித்திருந்தார்.
தற்போது முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாகவே பும்ரா விலகியுள்ள நிலையில், அக்தரின் வீடியோ மீண்டும் கவனம் பெற்று வருகிறது.
பும்ராவுக்கு பதிலாக வேகபந்து வீச்சாளர் முகமது சிராஜ் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust