Shubman Gill: விராட் கோலியின் சாதனையை முறியடித்த இளம் வீரர் - என்ன சாதனை?

இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் 63 பந்துகளில் 126 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சதத்தின் மூலம் பல சாதனைகளை படைத்தும் முறியடித்தும் இருக்கிறார் சுப்மன் கில்
Shubman Gill
Shubman GillTwitter
Published on

நியூசிலாந்திற்கு எதிராக நடந்த கடைசி டி20யில் சதமடித்த இந்திய வீரர் சுப்மன் கில், வீரர்கள் சுரேஷ் ரெய்னா மற்றும் விராட் கோலியின் சாதனைகளை முறியடித்துள்ளார்.

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் முதல் போட்டியில் நியூசிலாந்தும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வென்று தொடர் சமநிலையில் இருந்தது.

இந்நிலையில், நேற்று அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானதில் இறுதிப்போட்டி நடந்தது. இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 234 ரன்கள் குவித்தது. இது நியூசிலாந்திற்கு எதிராக இந்திய அணியின் அதிகபட்ச டி20 ஸ்கோர்.

235 என்ற இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி வெறும் 66 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது இந்திய அணி

இதில் இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் 63 பந்துகளில் 126 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சதத்தின் மூலம் பல சாதனைகளை படைத்தும் முறியடித்தும் இருக்கிறார் சுப்மன் கில்

முக்கியமாக விராட் கோலியின் சாதனையை முறியடித்திருக்கிறார் சுப்மன் கில். இதற்கு முன் விராட் அடித்திருந்த 122 ரன்கள் தான், டி20 போட்டிகளில் ஒரு இந்தியர் அடித்த அதிகபட்ச ஸ்கோர். தற்போது 126 ரன்களை விளாசி இந்த ஸ்கோரை முந்தியிருக்கிறார் கில்.

மேலும், ஒரு நாள் போட்டிகள், டெஸ்ட் மற்றும் டி20 என மூன்று வகை ஆட்டங்களிலும் சதமடித்த 5வது இந்தியர் ஆகிறார் கில். இதற்கு முன்னர் சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா, விராட் கோலி கே எல் ராகுல் ஆகியோர் மூன்று ஃபார்மேட்டிலும் சதமடித்திருக்கின்றனர்.

Shubman Gill
Shubhman Gill: இரட்டை சதமடித்த இந்திய வீரர் - படைத்த சாதனைகள் என்ன?

தவிர சுப்மன் கில் டி20 போட்டிகளில் சதமடித்த இளம் வீரர் ஆகிறார். இதற்கு முன்னர் 2010ல் சுரேஷ் ரெய்னா தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக நடந்த டி20 போட்டியில் சதமடித்திருந்தார்.

அப்போது அவருக்கு வயது 23 ஆண்டுகள் 156 நாட்கள், கில் நேற்றைய ஆட்டத்தில் சதமடித்த போது அவருக்கு வயது 23 ஆண்டுகள் 146 நாட்கள். இதன் மூலம் டி20 போட்டிகளில் சதமடித்த இளம் வீரர் என்ற சாதனையை படைத்தார் கில்.

ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே சிறப்பாக விளையாடிவருவதாகவும், டி20 போட்டிகளை விளையாட கில் தகுதியற்றவர் என்ற விமர்சனங்கள் இவர் மீது பல முன்வைக்கப்பட்டன. அவற்றிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது அவரது இந்த சதம்.

நியூசிலாந்திற்கு எதிராக நடந்த ஒரு நாள் தொடரிலும் சுப்மன் கில் சென்சுரி அடித்து பல சாதனைகளை முறியடித்திருந்தது குறிப்பிடதக்கது.

Shubman Gill
விராட் கோலி : சதங்களை துரத்தும் வீரர் - முறியடிக்கப்பட்ட சச்சின் சாதனைகள் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com