விராட் கோலி : சதங்களை துரத்தும் வீரர் - முறியடிக்கப்பட்ட சச்சின் சாதனைகள் என்ன?

சர்வதேச போட்டிகளில் சச்சினுக்கு பிறகு 73 சதங்களுடன் 2வது இடத்தில் இருக்கிறார் விராட் கோலி. 100 சதங்களை துரத்திக்கொண்டிருக்கும் வேளையில் சச்சினின் இன்னும் பிற சாதனைகளை சமன் செய்தும் முறையடித்தும் வருகிறார் விராட்.
விராட் கோலி : சதங்களை துரத்தும் வீரர் - முறியடிக்கப்பட்ட சச்சின் சாதனைகள் என்ன?
விராட் கோலி : சதங்களை துரத்தும் வீரர் - முறியடிக்கப்பட்ட சச்சின் சாதனைகள் என்ன?Twitter
Published on

நேற்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் சதம் விளாசியதன் மூலம் தொடர்ந்து 2 சதங்களை அடித்துள்ளார் விராட் கோலி.

3 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு கடந்த செப்டம்பர் மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்தார் விராட் கோலி.

இதனால் மீண்டும் அவரது சதக்கணக்கு தொடங்கியது. ஏற்கெனவே சச்சினின் 100 சதம் சாதனையை விராட் முறியடிப்பார் என நம்பிய ரசிகர்களுக்கு புதிய நம்பிக்கை பிறந்துள்ளது.

சர்வதேச போட்டிகளில் சச்சினுக்கு பிறகு 73 சதங்களுடன் 2வது இடத்தில் இருக்கிறார் விராட் கோலி. 100 சதங்களை துரத்திக்கொண்டிருக்கும் வேளையில் சச்சினின் இன்னும் பிற சாதனைகளை சமன் செய்தும் முறையடித்தும் வருகிறார் விராட்.

கோலியின் சதங்கள்

சச்சினுக்கு அடுத்த படியாக 73 சதங்கள் அடித்திருக்கும் விராட் கோலி, ஒரு நாள் போட்டிகளில் 45, டி 20-யில் 1 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 27 சதங்கள் விளாசியுள்ளார்.

இலங்கைக்கு எதிராக அதிக சதம்

ஒரு நாள் போட்டிகளில் இலங்கைக்கு எதிராக அதிக சதங்களை விளாசிய வீரர் என்ற சாதனையை சச்சினிடம் இருந்து பறித்துள்ளார் கோலி.

சச்சின் 8 சதமும் கோலி 9 சதமும் அடித்துள்ளனர்.

இது தவிர ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் ஆணிகளுக்கு எதிராக இருவருமே 9 சதங்களுடன் சமநிலையில் உள்ளனர்.

சொந்த மண்ணில் அதிக சதம்

இதுவரை விளையாடியுள்ள 257 ஒரு நாள் போடிகளில் 12,500 ரன்களை கடந்துள்ள விராட் குறைந்த போட்டிகளில் இந்த இலக்கை எட்டி சாதனைப் படைத்துள்ளார்.

சொந்த மண்ணில் சச்சின் அடித்த 20 சதங்களை சமன் செய்துள்ளார் கோலி.

இந்திய மண்ணில் 20 சதங்கள் அடிக்க சச்சினுக்கு 164 போட்டிகள் தேவைப்பட்ட நிலையில் இதனை வெறும் 101 போட்டிகளில் சாதித்துள்ளார் விராட்.

விராட் கோலி : சதங்களை துரத்தும் வீரர் - முறியடிக்கப்பட்ட சச்சின் சாதனைகள் என்ன?
விராட் கோலி: அணல் பறக்கும் 45வது ஒரு நாள் சதம்! சச்சினின் சாதனையை சமன் செய்த இந்திய வீரர்

ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் - சச்சினை முறியடிக்க வாய்ப்பு

ஒரு நாள் போட்டிகளில் 49 சதங்கள் அடித்து முன்னணியில் இருக்கிறார் சச்சின் டெண்டுல்கர். கோலி 45 சதங்களை அடித்து இந்த சாதனையை நெருங்கிவிட்டார்.

கோலிக்கு அடுத்த படியாக ரோகித் சர்மா மிகப் பெரிய இடைவெளியில் பின் தொடர்கிறார். ரோகித் 29 சதங்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சச்சின் தனது கடைசி 5 சதங்களை அடிக்க 3 ஆண்டுகள் எடுத்துக்கொண்டார். கோலியோ 2020க்கு பிறகு 2 சதங்கள் தான் அடித்துள்ளார்.

இதே ஃபார்மை தொடர்ந்தால் விரைவில் கோலி 50 ஒரு நாள் போட்டி சதங்கள் கண்டு சச்சினின் சாதனையை முறியடிப்பார்.

விராட் கோலி : சதங்களை துரத்தும் வீரர் - முறியடிக்கப்பட்ட சச்சின் சாதனைகள் என்ன?
விராட் கோலி - சச்சின் : 14 ஆண்டுகளில் சாதித்தது என்ன? - ஓர் ஒப்பீடு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com