”தினம் 8 கிலோ...” ஆப்கானிடம் தோல்வி அடைந்த பாக். - முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் காட்டம்!

"பாகிஸ்தான் அணி வீரர்களின் ஃபிட்னஸும் ஃபீல்டிங்கும் மோசமாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அணி வீரர்கள் யாரும் ஃபிட்னஸ் சோதனையை மேற்கொள்ளவே இல்லை"
”தினம் 8 கிலோ...” ஆப்கானிடம் தோல்வி அடைந்த பாக். - முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் காட்டம்!
”தினம் 8 கிலோ...” ஆப்கானிடம் தோல்வி அடைந்த பாக். - முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் காட்டம்!twitter
Published on

நேற்று நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி பெரும் தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து பகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், கிரிகெட் வர்ணனையாளருமான வாசிம் அக்ரம் ஆக்ரோஷமாக பேசியுள்ளார்.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர் ஷஃபீக், கேப்டன் பாபர் அசாம், முறையே 58 மற்றும் 74 ரன்கள் அடித்தனர். ஷதாப் கான் மற்றும் இஃப்திகார் தலா 40 ரன்கள் அடித்திருந்தனர். 50 ஓவர் முடிவில் 282 ரன்கள் எடுத்திருந்தந்து பாகிஸ்தான் அணி.

ஆனால் இந்த இலக்கும் ஆப்கானின் திறன் வாய்ந்த வீரர்களுக்கு சொற்பமாகவே இருந்தது. 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 49 ஓவர்களில் நிதானமாக இலக்கை அடைந்து வெற்றி கண்டது அணி.

நபி, ரஷீத் கான், முஜீப், நூர் என ஆப்கானின் சுழலில் தட்டு தடுமாறியது பாகிஸ்தான். அதே போல பௌலிங்கிலும், வழக்கம் போல ஃபீல்டிங்கிலும் சொதப்பியது பாகிஸ்தான்.

பாகிஸ்தானின் விளையாட்டை கண்டு முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், ”இன்று மிகவும் அவமானமாக இருந்தது. 280 ரன்களுக்கு மேல் எடுத்தும் தோல்வியடைந்தது கேள்விக்குரியது.

பாகிஸ்தான் அணி வீரர்களின் ஃபிட்னஸும் ஃபீல்டிங்கும் மோசமாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அணி வீரர்கள் யாரும் ஃபிட்னஸ் சோதனையை மேற்கொள்ளவே இல்லை.

இவர்களை பார்த்தால், தினமும் 8 கிலோ மட்டன் கறி சாப்பிடுகிறார்கள் போல தோன்றுகிறது. உடல்வாகின் மேல் அக்கறையில்லை” என்று காட்டமாக பேசியிருந்தார் அக்ரம்.

”தினம் 8 கிலோ...” ஆப்கானிடம் தோல்வி அடைந்த பாக். - முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் காட்டம்!
World Cup 2023: உலகக்கோப்பை டிராபி குறித்த இந்த தகவல்கள் உங்களுக்கு தெரியுமா?

1992ல் பாகிஸ்தான் அணி உலகக்கோப்பையை வென்ற போது அணியின் முக்கிய நட்சத்திரமாக திக்ழ்ந்தார் வாசிம் அக்ரம். மேலும் 1999ல் பாகிஸ்தானை இறுதிப்போட்டி வரை கொண்டு சென்ற கேப்டனும் அவரே.

இப்படி உலகக்கோப்பையில் ஜாம்பவான்களாக திகழ்ந்த பாகிஸ்தான் அணி, இன்று சிறிய அணிகளிடமும் தோல்வி அடைவது பலரையும் அணி மற்றும் நிர்வாகம் குறித்து கேள்வி எழுப்பச் செய்துள்ளது.

”தினம் 8 கிலோ...” ஆப்கானிடம் தோல்வி அடைந்த பாக். - முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் காட்டம்!
IND vs NZ: விராட்டின் அதிரடி! 20 வருடம் சுமந்த துவேசத்தை தீர்த்தது இந்தியா

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com