World Cup 2023: உலகக்கோப்பை டிராபி குறித்த இந்த தகவல்கள் உங்களுக்கு தெரியுமா?

இதுவரை நடந்து முடிந்த உலகக்கோப்பை போட்டிகளில் அதிகமுறை ஆஸ்திரேலியா கோப்பையை வென்றுள்ளது. உலகக்கோப்பை வெல்லும் அணிக்கு டிராபி வழங்கப்பட்டும். உலகக்கோப்பை டிராபி பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
World Cup 2023: உலகக்கோப்பை டிராபி குறித்த இந்த தகவல்கள் உங்களுக்கு தெரியுமா?
World Cup 2023: உலகக்கோப்பை டிராபி குறித்த இந்த தகவல்கள் உங்களுக்கு தெரியுமா?twitter

2023ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிகள் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கியது.

இதுவரை நடந்து முடிந்த உலகக்கோப்பை போட்டிகளில் அதிகமுறை ஆஸ்திரேலியா கோப்பையை வென்றுள்ளது.

உலகக்கோப்பை வெல்லும் அணிக்கு டிராபி வழங்கப்பட்டும்.

உலகக்கோப்பை டிராபி பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ!

ஒரிஜினல் டிராபியா?

இறுதியில் வெற்றிபெற்ற அணிக்கு வழங்கப்படும் டிராபி நிஜமானதா அல்லது அது போன்ற மற்றொரு கோப்பையா என்ற கேள்வி நம்மில் பலருக்கு வந்திருக்கும்.

அந்த கோப்பை நிஜமானது அல்ல! உலகக்கோப்பையின் மாதிரியை தான் ஐசிசி வெற்றிபெற்ற அணிக்கு வழங்கும்.

உண்மையான டிராபி, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஐசிசி தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும்.

ஐசிசியின் சின்னம் உலகக்கோப்பை மாதிரிகளில் வெளியில் பொறிக்கப்பட்டிருக்கும்

உலகக்கோப்பையின் வடிவம்

இந்த கோப்பை தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய உலோகங்களால் ஆனது. இது கிரிக்கெட் பந்தின் வடிவத்தில் இருக்கும். கோப்பையில் இருக்கும் வெள்ளி பகுதிகள், கிரிக்கெட்டின் மூன்று முக்கிய பகுதிகளை குறிக்கிறது

  • பேட்டிங்

  • பௌலிங்

  • ஃபீல்டிங்

கோப்பையின் கீழே இருக்கும் மரப்பலகையில், வெற்றிபெற்ற அணியின் பெயர் பொறிக்கப்படும்.

World Cup 2023: உலகக்கோப்பை டிராபி குறித்த இந்த தகவல்கள் உங்களுக்கு தெரியுமா?
CSK: கண்கலங்கிய தோனி, மனமுடைந்த மோஹித் சர்மா - உணர்வுப்பூர்வமாக நிறைவடைந்த 2023ன் ஐபிஎல்

உலகக்கோப்பையின் உயரம் என்ன?

ஐசிசியின் சர்வதேச ஒரு நாள் உலகக்கோப்பையின் உயரம் 65 செ.மீ மற்றும் இதன் எடை 11 கிலோ ஆகும். லண்டனை சேர்ந்த உள்ள ஜெரார்ட் அண்ட் கோ-வின் பால் மார்ஸ்டன் இந்த கோப்பையை வடிவமைத்தாக தகவல்கள் கூறுகின்றன

எப்போது உருவானது முதல் கோப்பை?

என்னதான் 1975ஆம் ஆண்டே உலகக்கோப்பை தொடர் தொடங்கப்பட்டாலும், 1996ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளுக்கு பிறகு தான், சர்வதேச கிரிக்கெட் வாரியம் ஒரு நிரந்தரமான கோப்பை தயாரிக்க முடிவு செய்தது.

அதற்கு முன்பு வரை, நடந்த 4 உலகக்கோப்பை தொடர்களில் வெவ்வேறு விதமான கோப்பைகள் வெற்றி பெற்ற அணிக்கு வழங்கப்பட்டது.

அதன் பிறகு 1999ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் தான் தற்போதுள்ள கோப்பை பயன்பாட்டிற்கு வந்தது. உருமாற்றம் பெற்ற நிரந்தர கோப்பையை முதன் முதலில் வென்றது ஆஸ்திரேலியா அணி என்பது குறிப்பிடத்தக்கது.

World Cup 2023: உலகக்கோப்பை டிராபி குறித்த இந்த தகவல்கள் உங்களுக்கு தெரியுமா?
World Cup: 1983 உலக கோப்பை வென்ற இந்த இந்திய வீரர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை - ஏன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com