இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்கா குணதிலகா சிட்னியில் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நடைபெற்று வரும் 20 ஓவர் உலக்கோப்பை தொடரில் விளையாட அணியுடன் ஆஸ்திரேலியா சென்றிருந்த நிலையில் தனுஷ்கா கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் டேடிங்க் ஆப் மூலமாக பழகிய பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு, ஞாயிற்றுக் கிழமை அதிகாலையில் தனுஷ்கா சிட்னி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
பாதிக்கப்பட்ட பெண்ணை அங்குள்ள ரோஸ் பே என்ற இடத்தில் கடந்த நவம்பர் 2ஆம் தேதி அவர் சந்தித்ததாக கூறப்படுகிறது. நேற்று சம்பவ இடத்தில் விசாரணைகள் மேற்கொண்ட பிறகு, இன்று காலை 31 வயது ஆண் ஒருவரை சஸ்ஸெக்ஸ் ஸ்ட்ரீட், சிட்னியில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலில் வைத்து நள்ளிரவு 1 மணிக்கு கைது செய்யப்பட்டார் என நியூ சவுத் வேல்ஸ் காவல் துறை அறிக்கையை ESPNcricinfo கூறியது.
சிட்னி காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட தனுஷ்கா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கிருந்து இணையம் வழியாக பர்ராமட்டா பெயில் கோர்ட்டை தொடர்பு கொள்ளவும் அனுமதி நிராகரிக்கப்பட்டதாக ஏஎன்ஐ தளம் தெரிவிக்கிறது.
ஹேம்ஸ்ட்ரிங்க் காயம் காரணமாக டி20 தொடருக்கான இலங்கை அணியில் இருந்து விலக்கப்பட்டார் தனுஷ்கா குணதிலகா. அவருக்கு பதிலாக மற்றொரு வீரர் அணியில் இடம்பெற்றபோதிலும் ஆஸ்திரேலியாவிலேயே தங்கியிருந்துள்ளார்.
நேற்று இங்கிலாந்துடனான போட்டியில் இலங்கை தோற்றதில், தொடரிலிருந்து வெளியேறியுள்ளது அணி. இந்நிலையில், தனுஷ்காவை ஆஸ்திரேலியாவில் விட்டுவிட்டு, இலங்கை அணி நாடு திரும்பியுள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust