Honey bee
Honey beeCanva

கைது செய்ய வந்த போலீஸ்... தப்பிக்க தேனீக்களை திறந்துவிட்ட பெண்!

போலீசார் வந்து அவரை வெளியேற்ற காத்திருந்தனர். அப்போது SUV காரில் வந்து இறங்கிய ரோரீ, தன்னுடன் தேனீ கூடுகளை எடுத்துவந்தார்.
Published on

கைது செய்ய வந்த காவல் துறையினர் மீது தேனீக்களை திறந்துவிட்டுள்ளார் பெண் ஒருவர்.

அமெரிக்காவின் மாசசுட்டஸ் மாகாணத்தை சேர்ந்தவர் ரோரி வுட்ஸ். 55 வயதாகும் இவர் மீது பொது மக்களுக்கு இடையூறு விளைவித்தல், அடிதடி, மிரட்டல், போன்ற அநேக குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. தற்போது இவர் தங்கியிருக்கும் வீட்டில் இருந்து இவரை காலி செய்ய சொன்னதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் அதை ஏற்க மறுத்துள்ளார்.

Honey bee
7 வருடங்களாக தப்பிய திருடன் - நொடியில் மாட்டிக்கொண்ட வேடிக்கை - என்ன நடந்தது?

மேலும், வீட்டை காலி செய்யமாட்டேன் என தகராறு செய்துள்ளார். இதனால் காவல் துறையினரின் உதவியை நாடியுள்ளது அவர் தங்கியிருந்த காலணி நிர்வாகம்.

போலீசார் வந்து அவரை வெளியேற்ற காத்திருந்தனர். அப்போது SUV காரில் வந்து இறங்கிய ரோரீ, தன்னுடன் தேனீ கூடுகளை எடுத்துவந்தார். காரை நிறுத்தியவர் சற்றும் எதிர்பாராத வகையில், காரை உலுக்கி, தேனீக் கூடுகளை திறந்துவிட்டார். அந்த இடம் முழுவதும் தேனீக்கள் சூழ்ந்தது.

இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் ரோரியோ முன்னெச்சரிக்கையாக தேனீக்கள் தாக்காமல் இருக்க பீ கீப்பர் சூட் அணிந்திருந்தார். தேனீக்களை விரட்டியடித்த பிறகு காவல் துறையினர் அவரை கைது செய்து அழைத்து சென்றனர்

இதற்கு முன் இதே போல நீதிமன்றத்தில் பெண் ஒருவர் கரப்பான் பூச்சிகளை திறந்துவிட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது

Honey bee
கரப்பான் பூச்சி : நீதிமன்றத்தில் திறந்து விட்ட பெண் - நடந்தது என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com