ஸ்ரீகாந்த் முதல் அஷ்வின் வரை - இந்தியாவுக்காக உலகக்கோப்பையில் விளையாடிய தமிழர்கள்

உலகக்கோப்பை ஆரம்பித்த 1975ஆம் ஆண்டு முதல், தற்போதைய பருவம் வரை இந்திய அணியில் குறைந்தது ஒரு தமிழக வீரராவது இடம்பெற்றிருக்கிறார்.
ஸ்ரீகாந்த் முதல் அஷ்வின் வரை - இந்தியாவுக்காக உலகக்கோப்பையில் விளையாடிய தமிழர்கள்
ஸ்ரீகாந்த் முதல் அஷ்வின் வரை - இந்தியாவுக்காக உலகக்கோப்பையில் விளையாடிய தமிழர்கள்twitter
Published on

கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் இம்முறை போட்டிகளுக்கு தேர்வாகியுள்ளன.

உலகக்கோப்பை போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் இரண்டு ஆண்டுகள் கோப்பையை வென்றது மேற்கு இந்திய தீவுகள் அணி தான். கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களாக பார்க்கப்பட்ட அணி, இம்முறை தொடருக்கு தேர்வாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், உலகக்கோப்பை ஆரம்பித்த 1975ஆம் ஆண்டு முதல், தற்போதைய பருவம் வரை இந்திய அணியில் குறைந்தது ஒரு தமிழக வீரராவது இடம்பெற்றிருக்கிறார்.

1975ஆம் ஆண்டில் தான் முதன் முதலாக world cup போட்டிகள் அறிமுகமாகின. அப்போதைய இந்திய அணியில், வெங்கட ராகவன் என்ற தமிழக வீரர் இடம்பெற்றிருந்தார். வெங்கட ராகவன் தான் இந்திய அணியை அந்த தொடரில் தலைமைத் தாங்கினார்.

1975, 1979 மற்றும் 1983 ஆகிய மூன்று ஆண்டுகளுமே, இந்த ஒரு நாள் தொடர் 60 ஓவர் போட்டிகளாக நடத்தப்பட்டன. அதில், 1975 மற்றும் 1979 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் இந்திய அணியில் தேர்வானார் வெங்கட ராகவன்

அதன் பிறகு 1983ஆம் ஆண்டு இந்திய அணியில் இடம்பெற்றவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த். இவர் இந்திய அணியின் தொடக்க வீரர். அதிரடி ஆட்டக்காரர் ஆன ஸ்ரீகாந்த், அவரது ரசிகர்களால் இந்தியாவின் விவ் ரிச்சர்ட்ஸ் என்று அழைக்கப்பட்டார்.

விவ் ரிச்சர்ட்ஸ் அப்போதைய வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பெற்றிருந்த நட்சத்திர வீரராவார்.

ஸ்ரீகாந்த் இந்திய அணியில் இடம்பெற்ற அந்த ஆண்டு, அணி கோப்பையை முதன் முறையாக வென்றது.

1987ஆம் ஆண்டு உலகக்கோப்பையிலும் விளையாடினார் ஸ்ரீகாந்த். அந்த ஆண்டு இந்திய அணியில் லக்‌ஷமன் சிவராம கிருஷ்ணன் என்ற வீரரும் இடம்பெற்றிருந்தார்.

ஸ்ரீகாந்த் 1992ஆம் ஆண்டு உலககோப்பை இந்திய அணியிலும் விளையாடினார்.

இவரும், எல் சிவராமகிருஷ்ணன் என்று அறியப்படும் லக்‌ஷமன் சிவராம கிருஷ்ணனும், தற்போது கிரிக்கெட் ஆலோசகர்களாக, வர்ணனனையாளர்களாக உள்ளனர்

ஸ்ரீகாந்த் முதல் அஷ்வின் வரை - இந்தியாவுக்காக உலகக்கோப்பையில் விளையாடிய தமிழர்கள்
World Cup'23: இந்திய அணியில் கடைசி நிமிடத்தில் இடம்பெற்ற தமிழக வீரர் அஷ்வின்- என்ன காரணம்?

1996ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில், ஆஷிஷ் கபூர் என்ற தமிழ்நாட்டை சேர்ந்த வீரர் இடம்பெற்றிருந்தார். இவர் தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராக இருக்கிறார்.

அதன் பிறகு 1999ஆம் ஆண்டு உலகக்கோப்பை அணியில், ராபின் சிங் மற்றும் சடகோபன் ரமேஷ் ஆகியோர் இடம்பெற்றனர். 2003ல் எந்த ஒரு தமிழக வீரரும் அணியில் தேர்வாகவில்லை. அதன் பிறகு 2007ஆம் ஆண்டில் தினேஷ் கார்த்திக் தேர்வானார். இவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால், இந்த ஆண்டு இந்திய அணி 20 ஓவர் உலகக்கோப்பையை தான் வென்றது

தொடர்ந்து 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை இந்திய அணியில், ரவிச்சந்திரன் அஷ்வின் இடம்பெற்றார். 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றது. இதில் அஷ்வின் முக்கிய பங்காற்றினார்.

2015 உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றார் அஷ்வின், ஆனால் 2019ல் அவர் இடம்பெறவில்லை. விஜய் சங்கர் என்ற மற்றொரு தமிழக வீரர் இடம்பெற்றார்.

தற்போது நடைப்பெற்று வரும் உலகக்கோப்பை அணியில் அஷ்வின் இடம்பெற்றுள்ளார்.

ஸ்ரீகாந்த் முதல் அஷ்வின் வரை - இந்தியாவுக்காக உலகக்கோப்பையில் விளையாடிய தமிழர்கள்
World Cup 2023: உலகக்கோப்பை டிராபி குறித்த இந்த தகவல்கள் உங்களுக்கு தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com