ஐபிஎல் ஸ்பான்சராக சீன நிறுவனமான Vivo 2023-ம் ஆண்டு வரை ஒப்பந்தம் செய்திருந்தது.
2021 ஐபிஎல் நடைபெற்று வந்த போது இந்தியா சீனா இடையில் மோதல் போக்கு நிலவியது. சீன பொருட்களைத் தடை செய்ய வேண்டும் என பலர் பேசினர். இதனால் ஐபிஎல் ஸ்பான்சராக Vivo தொடர்வதில் சிக்கல் இருந்தது. இந்த ஆண்டும் எல்லையில் பாங்காங் ஏரியில் பாலம் கட்டுவது உள்ளிட்ட பிரச்சனைகள் இந்தியா - சீனா இடையில் நிலவி வருவதால் விவோ விலக்கப்பட்டிருக்கிறது
ஐபிஎல் 2022 -ன் புதிய டைடில் ஸ்பான்சராக டாடாவை அறிவித்தார் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல்.
தற்போது மெகா ஏலத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஏற்கெனவே எல்லா அணிகளும் தங்களது வீரர்களைத் தக்கவைத்துக்கொண்டுள்ளன. இந்த சீசனனில் புதிதாக 2 அணிகள் இணைகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 10 அணிகள் களமிறங்கும் இந்த ஐபிஎல்லை எதிர் நோக்கி ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள்.