தி ஓவல் ஸ்டேடியத்தில் யானை: இங்கிலாந்தில் இந்தியாவின் முதல் வெற்றி - புல்லரிக்கும் வரலாறு!

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளில் 19 தொடர்கள் இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடியிருந்தன. ஆனால் ஒன்றில் கூட இந்தியா வெற்றி பெற்றதில்லை. 1960களில் இங்கிலாந்து இந்தியாவை வைட் வாஷ் செய்வது வழக்கமாக இருந்தது. இந்த வரலாறு மாற்றி எழுதப்படாதா என ஏக்கத்துடன் இந்திய ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்தனர்.
தி ஓவல் ஸ்டேடியத்தில் யானை: இங்கிலாந்தில் இந்தியாவின் முதல் வெற்றி - புல்லரிக்கும் வரலாறு!
தி ஓவல் ஸ்டேடியத்தில் யானை: இங்கிலாந்தில் இந்தியாவின் முதல் வெற்றி - புல்லரிக்கும் வரலாறு!Twitter
Published on

இந்திய மக்களுக்கு கிரிக்கெட் மீதிருக்கும் மோகம் எப்படிப்பட்டது எனச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. இந்த வெறி இன்று நேற்று பிறந்ததில்லை 50,60 ஆண்டுகளாக இருக்கிறது.

நம்ப முடியவில்லையா? இந்த சம்பவத்தை தெரிந்துகொண்டபிறகு நிச்சயமாக நம்புவீர்கள். அது 1971 ஆகஸ்ட் 21ம் தேதி, இந்திய கிரிக்கெட் அணி ஒரு “நானும் ஆள்தாண்டா” என உலகுக்கு நிரூபிக்க சம்பவம் செய்த நாள்.

1932ம் ஆண்டு இந்திய அணிக்கு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் உரிமை கிடைத்தது. அன்றிலிருந்து கிட்டத்தட்ட 40 ஆண்டுகளில் 19 தொடர்கள் இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடியிருக்கின்றன.

ஆனால் ஒன்றில் கூட இந்தியா வெற்றி பெற்றதில்லை. 1960களில் இங்கிலாந்து இந்தியாவை வைட் வாஷ் செய்வது வழக்கமாக இருந்தது. இந்த வரலாறு மாற்றி எழுதப்படாதா என ஏக்கத்துடன் இந்திய ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்தனர். 

ஜூலை, ஆகஸ்டில் நடந்த அந்த டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் மழைக்காரணமாக ட்ரா ஆனது. மூன்றாவது போட்டி ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி தொடங்கியது.

அந்த டெஸ்ட் போட்டியைக் காண கிட்டத்தட்ட 5000 இந்திய ரசிகர்கள் ஓவல் மைதானத்துக்கு சென்றதாக கூறப்படுகிறது. அன்றைய கேப்டன் அஜய் வடேகர் மீது அனைவருக்கும் நம்பிக்கை இருந்தது. 

நட்சத்திர வீரரான சுனில் கவாஸ்கர் இருந்தார், குண்டப்பா விஸ்வனாத்,  ஃபரூக் இஞ்சினீர், திலீத் சர்தேசாய், அசோக் மன்கட் ஆகியோர் இந்தியாவின் பேட்ஸ்மேன்கள். 

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. 355 ரன்கள் அடித்து அனைத்து விக்கெட்டையும் இழந்தனர்.

ஏக்நாத் சோல்கர் 3 விக்கெட்டையும் பேடி, பிரசன்னா மற்றும் சந்திரசேகர் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.

அடுத்ததாக விளையாடிய இந்திய அணியால் 284 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. 71 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது இங்கிலாந்து. 

இந்த நிலையில் இருந்து இந்தியா வெற்றி பெறும் என யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. ஆனால் அந்த மாயாஜாலத்தை நிகழ்த்திக்காட்டினார் சுழற்பந்து வீச்சாளர் பகவத் சந்திரசேகர்.

18 ஓவர்கள் வீசிய அவர் 38 ரன்கள் மட்டுமேக் கொடுத்து 6 விக்கெட்டுகளை எடுத்தார். மொத்தமாக இங்கிலாந்து அணி 101 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்தின் மிகக் குறைந்த ஸ்கோர் இதுவாகும்.

தி ஓவல் ஸ்டேடியத்தில் யானை: இங்கிலாந்தில் இந்தியாவின் முதல் வெற்றி - புல்லரிக்கும் வரலாறு!
உலகில் அதிக சர்வதேச கிரிக்கெட் மைதானங்கள் உள்ள நாடு எது?: தெரிந்த நாடுகள் தெரியாத தகவல்கள்

ஸ்டேடியத்துக்குள் வந்த யானை

இந்தியா வெற்றி பெற 173 ரன்கள் தேவைப்படது. ஆகஸ்டு 24 இறுதிநாளில் 76/2 என்ற நிலையில் களமிறங்க இருந்தது இந்திய அணி. அன்று விநாயகர் சதூர்த்தியும் கூட.

இந்திய ரசிகர்களுக்கு தங்கள் அணியை வெற்றி பெற வைக்க ஒரு நல்ல யோசனை வந்தது.

செஸ்ஸிங்டன் உயிரியல் பூங்காவில் இருந்து ஒரு யானையை வாடகைக்கு எடுத்தனர். அதனை ஓவல் மைதானத்துக்கு அழைத்துவந்து இந்தியா வெற்றிபெற வேண்டும் என்ற வேண்டுதலுடன் யானையை உலா வர செய்தனர்.

இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அடுத்த 100 ரன்களை எடுப்பது சவாலாக இல்லை. இங்கிலாந்துக்கு எதிராக தனது முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா.

இறுதி பவுண்டரியை அடித்த சயித் அபித் அலி வெற்றியைக் கொண்டாட பெவிலியனுக்கு ஓடிவந்தார். ஆனால் அவருக்கு முன்னதாக மேல் இருக்கையில் இருந்த ரசிகர்கள் மைதானத்துக்குள் ஓடி வந்தனர். பேட்ஸ் மேன்களை தோளில் தூக்கிக் கொண்டாடினர். 

இந்த ஓவல் மைதானத்தில் தான் இப்போது இந்தியா vs ஆஸ்திரேலியா இறுதிப்போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

தி ஓவல் ஸ்டேடியத்தில் யானை: இங்கிலாந்தில் இந்தியாவின் முதல் வெற்றி - புல்லரிக்கும் வரலாறு!
தோனி முதல் கோலி வரை : உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்கள் யார் யார்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com