Football : மைதானத்துக்கு உள்ளேயே துப்பும் வீரர்கள் - அறிவியல் காரணம் தெரியுமா?

கால்பந்து, ரக்பி போன்ற விளையாட்டுகளில் மட்டுமே இப்படி மைதானத்தில் துப்ப அனுமதியிருக்கிறது. டென்னிஸ், கூடைப்பந்து போன்ற போட்டிகளில் இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
Football : மைதானத்துக்கு உள்ளேயே துப்பும் வீரர்கள் - அறிவியல் காரணம் தெரியுமா?
Football : மைதானத்துக்கு உள்ளேயே துப்பும் வீரர்கள் - அறிவியல் காரணம் தெரியுமா? Twitter

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் நடைபெற்று வருகின்றன.

டிசம்பர் 18 வரை நடைபெறும் இந்த தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது.

கால்பந்து பார்பவர்களுக்கு எந்த அணி அடுத்தக்கட்டத்தை எட்டப் போகிறது என்ற கேவியைப் போலவே ஏன் வீரர்கள் மைதானதுக்கு உள்ளேயே வாய் கொப்பளித்து துப்புகிறார்கள் என்ற சந்தேகமும் இருக்கிறது.

வீரர்கள் ஓடி விழுந்து படுத்து புரளும் மைதானத்திலேயே எச்சிலும் துப்புவது சுகாதாரமற்றதாக தோன்றலாம்.

சிலருக்கு அருவருப்பை ஏற்படுத்தினாலும் மைதானத்தில் அந்த செயலின் தேவையை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

ஏன் மைதானத்தில் எச்சில் துப்பப்படுகிறது?

விளையாடும் போதும் உடற்பயிற்சி செய்யும் போதும் நம் எச்சிலின் அடர்த்தி அதிகரிப்பதை உணர்திருப்பீர்கள்.

இதற்கு காரணம் வேலைகளில் ஈடுபடும் போது எச்சிலில் அதிக புரதம் கலப்பது தான்.

கால்பந்து போன்ற போட்டிகளில் வீரர்கள் தொடர்ந்து ஓடிக்கொண்டிருப்பதனால் வாய்வழியாக மூச்சுவிட வேண்டியது இருக்கும்.

இதனால் வாய் எளிதில் வறண்டுவிடும்.

Football : மைதானத்துக்கு உள்ளேயே துப்பும் வீரர்கள் - அறிவியல் காரணம் தெரியுமா?
FIFA உலக கோப்பை 2022 : பெருமைக்கு எருமை மேய்ப்பதா? கத்தார் சந்திக்கும் சர்ச்சைகள் என்ன?

வறட்சியை தடுப்பதற்காக MUC5B என்ற சளிப்போன்ற பொருள் எச்சிலில் கலக்கிறது.

இந்த அடர்த்தியான எச்சிலை விழுங்குவது மிகக் கடினமான ஒன்று என்பதனால் கொப்பளித்து துப்ப வீரர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

கால்பந்து, ரக்பி போன்ற விளையாட்டுகளில் மட்டுமே இப்படி மைதானத்தில் துப்ப அனுமதியிருக்கிறது.

டென்னிஸ், கூடைப்பந்து போன்ற போட்டிகளில் இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

Football : மைதானத்துக்கு உள்ளேயே துப்பும் வீரர்கள் - அறிவியல் காரணம் தெரியுமா?
FIFA 2022: கத்தாரின் ஸ்டேடியம் 974 உலகக் கோப்பைக்கு பின் காணாமல் போகுமா?- விரிவான தகவல்கள்

கார்ப் ரின்சிங்

நம் உடல் சுறுசுறுப்பாக செயல்பட கார்போஹைட்ரேட்கள் மிக முக்கியம் என்பதை நாம் அறிவோம்.

வீரர்கள் வாய்கொப்பளிக்கும் போது கார்ப் சொல்யூஷனையும் பயன்படுத்துகின்றனர்.

இப்படி பயன்படுத்தும் போது வீரர்களின் மூளை உடலில் அதிகமாக கார்பன் டை ஆக்ஸைடு இருப்பதாக உணரும்.

இதனால் வீரர்களின் திறனும் அதிகரிக்கும்.

Football : மைதானத்துக்கு உள்ளேயே துப்பும் வீரர்கள் - அறிவியல் காரணம் தெரியுமா?
கத்தார் : கால்பந்து உலகக் கோப்பையை நடத்தும் பாலைவன நாடு - 10 சுவாரஸ்ய தகவல்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com