இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விராட் கோலி நேற்று இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 166 ரன்கள் விளாசினார்.
இது இந்த தொடரின் இரண்டாவது நூறு ரன்களாகும். இந்த தொடரின் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார் கோலி.
கௌஹாத்தி மற்றும் திருவனந்தபுரத்தில் நூறு ரன்கள் விளாசியதன் மூலம் 46 ஒரு நாள் நூறுகளை நிறைவு செய்துள்ளார் கோலி. இது சச்சின் டெண்டுலுக்கரின் சாதனையான 49 நூறுகளை கிட்டத்தட்ட நெருங்குகிறது.
சொந்த மண்ணில் அதிக சதம் அடித்த வீரர் என்ற முறையிலும் சச்சினை தாண்டியிருக்கிறார் விராட் கோலி.
நேற்று தனது 74வது நூறு ரன்களை எட்டியதன் மூலம் 3-0 என்ற கணக்கில் இந்தியா தொடரை வெல்ல உதவியிருக்கிறார். தனது மனநிலை தான் இந்த வெற்றிக்கு காரணம் எனக் கூறியுள்ளார் விராட்.
இந்த போட்டியில் 13 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்கள் அடித்துள்ளார் கோலி. இலங்கைக்கு எதிராக அதிக நூறுகளை அடித்தவரான கோலிக்கு இது 10வது நூறு.
இந்த வெற்றியின் ரகசியம் குறித்து மனம் திறந்த கோலி, "என்னுடைய உறுதியான நோக்கத்தின் விளைவாக கிடைத்ததே இந்த வெற்றி. அணியை வலுவான இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே என் எண்ணமாக இருந்தது. நான் சரியான காரணங்களுக்காக விளையாடினேன் அது எனக்கு உதவியது. நான் இடைவெளிக்கு பிறகு திரும்பியதில் இருந்து நன்றாக உணர்கிறேன். இலக்கை அடையவேண்டும் என்ற விரக்தி என்னிடம் இல்லை" எனப் பேசினார் கோலி.
மேலும் பேசிய அவர் முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமியை புகழ்ந்து பேசினார்.
அடுத்ததாக இந்திய அணி ஜனவரி 18 முதல் நியூசிலாந்துக்கு எதிராக விளையாட உள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust