"பல நேரங்களில் தனிமையை உணர்ந்துள்ளேன்" Depressionல் தவித்த கோலி - உருக்கமான பேச்சு

தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 14 ஆண்டுகளை கடந்துள்ள கிங் கோலி, தான் மன அழுத்தத்தால் தவித்து வருவதாகவும், தனிமையால் சூழப்பட்டுள்ளதாகவும் கூறியிருக்கிறார்
விராட் கோலி
விராட் கோலிடிவிட்டர்
Published on
"என்னை சுற்றி என்னை விரும்பும், ஆதரிக்கும் நபர்கள் இருந்தபோதிலும், பல நேரங்களில் தனிமையை உணர்ந்துள்ளேன்"
virat kholi

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. தோனி தனது கேப்டன்சியை விட்டு விலகிய பிறகு இந்திய அணியின் கேப்டனாக கோலி பொறுப்பேற்றார். 2008ம் ஆண்டு முதன் முதலில் சர்வதேச கிரிக்கெட் அரங்கிற்குள் நுழைந்த விராட் கோலி, இன்றோடு தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 14 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி இவரது தலைமையில் பல மைல்கற்களைத் தொட்டது. இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில், இவரது தலைமையில் தான் முதலிடத்தை தக்கவைத்திருந்தது.

ஆனால், கடந்த 2019 முதல் விராட் கோலி ஃபாரமில் இல்லை என்ற புகார் எழுந்திருக்கிறது. கிரிக்கெட் ரசிகர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் என அனைவரது விமர்சனத்துக்கும் ஆளாகி வந்தார் கோலி.

தனது 71வது சதத்தை இந்த மேட்சில் கோலி கடப்பார் என, இரண்டு ஆண்டுகளாக எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களுமே மிஞ்சி வருகிறது.

இந்நிலையில், தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 14 ஆண்டுகளை கடந்துள்ள கிங் கோலி, தான் மன அழுத்தத்தால் தவித்து வருவதாகவும், தனிமையால் சூழப்பட்டுள்ளதாகவும் கூறியிருக்கிறார்.

விராட் கோலி
விராட் கோலி :"90 நிமிடங்கள் நிற்காமல் ஆடினேன்" - அதிரடி ஆட்டத்தின் ரகசியம் பகிர்ந்த நாயகன்

கடந்த 2014ஆம் ஆண்டு, இங்கிலாந்திற்கு எதிரான ஆட்டத்தில் இவர் சரியாக விளையாடவில்லை. அப்போது, "உலகிலேயே நான் மட்டும் தனியாக இருப்பது போன்று உணர்ந்தேன்" என சில மாதங்களுக்கு முன்பு பாட்காஸ்ட் ஒன்றில் பேசியிருந்தார் கோலி.

இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையிடம் பேசிய கோலி, தனது கரியர் நெடுங்கிலுமே அழுத்தம் என்ற ஒரு விஷயம் தன்னுடன் பயணித்து வந்ததாக கூறினார். அது பல நேரங்களில் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தியாகவும் அவர் கூறினார்.

என்னை சுற்றி, என்னை விரும்புபவர்களும், ஆதரிப்பவர்களுமே இருந்தபோதிலும், நான் தனிமையை உணர்ந்துள்ளேன். பலரும் அவர்களது வாழ்க்கையில் இப்படி ஒரு நிலையை சந்தித்திருப்பார்கள், அவர்களுக்கும் இது புரியும்!
Virat Kholi

மேலும் இது தீவிரமான பிரச்னை என்றும், எவ்வளவு வலுவாக நாம் இருக்க நினைத்தாலும், இந்த உணர்வு நம்மை உடைக்கவல்லது என்றும் அவர் தெரிவித்தார். விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வு தேவை. அதன் மூலம் இவ்வாறான அழுத்தங்களிலிருந்து அவர்கள் விடுபட முடியும்.

இதை சரிவர கவனிக்காவிடில், அவர்களை சுற்றியுள்ள உலகம் உடைந்து சரிய நீண்ட காலம் எடுக்காது எனவும் பேசியிருக்கிறார் கோலி. ஆகையால், இளம் வீரர்கள், உங்களது உடல் நலத்தோடு மன நலத்தையும் பேணிக் காக்கவேண்டும் என தெரிவித்த கோலி, உங்களது சுயத்துடன் நீங்கள் எப்போதும் தொடர்பில் இருப்பது அவசியம் எனவும் கூறியுள்ளார்.

இதற்கு முன்னர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் க்லென் மேக்ஸ்வெல், மன அழுத்தத்தால் தவித்து வருவதாக கூறி, கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து பிரேக் எடுத்திருந்தார். மன நலத்தை சரி செய்துகொண்ட பின்னர் மீண்டும் விளையாட துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

விராட் கோலி
CSK -வை விட்டு விலகும் ஜடேஜா - உடைகிறதா நட்சத்திர அணி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com