விராட் கோலி :"90 நிமிடங்கள் நிற்காமல் ஆடினேன்" - அதிரடி ஆட்டத்தின் ரகசியம் பகிர்ந்த நாயகன்

ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பையை இந்தியா வெல்வது தான் என்னுடைய உண்மையான இலக்கு அதற்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறேன் - விராட்
Virat Kohli
Virat KohliBCCIஈ
Published on

IPL -ன் அதிரடி வீரர் விராட். அவர் அடித்த ஸ்கோர்கள் இது வரை எந்த பேட்ஸ்மேனும் நெருங்காதது. ஒரே சீசனில் 4 முறை நூறு ரன்களை எட்டி கிங் கோலியாக வலம் வந்தவர் இந்த சீசனில் சரியாக ஆடவில்லை. மூன்று முறை கோல்டன் டக் ஆகியிருக்கிறார். அவரது சராசரி 20 ரன்களை கூட எட்டவில்லை. ஆனால் நேற்றைய போட்டியில் புதிதான உற்சாகமான கோலியைக் காண முடிந்தது. நேற்று விராட் கோலி பேசிய வார்த்தைகள் மிக முக்கியமானதாகப் பார்க்கப்பட்டன.

“ஸ்கோர் வரத்தொடங்கினால் நான் எவ்வளவு உற்சாகமாக இருப்பேன் என்று எனக்குத்தெரியும்”. என அவர் பேசத்தொடங்கினார்.

“நான் சமநிலையில் முன்னேற வேண்டும். கொஞ்சம் ஓய்வெடுத்து, புத்துணர்ச்சியுடன் மீண்டும் வர வேண்டும். ஒரு சீரான நிலைக்கு வந்த பிறகு திரும்பிப் பார்க்க வேண்டாம்… அது வேடிக்கையாக இருக்கும். ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பையை இந்தியா வெல்வது தான் என்னுடைய உண்மையான இலக்கு அதற்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறேன்”

Virat Kohli
Virat Kohli: “இதுதான் சுதந்திரம்” : விராட் வரைந்த ஓவியம் - நெகிழ்ந்த ரசிகர்கள்
விராட் கோலி
விராட் கோலிBCCI

ஓய்வு குறித்த கேள்விக்கு விராட், “இதை அதிக பேர் சொல்லவில்லை. மிக துல்லியமாக ரவி பாய் கூறினார். ஏனெனில் கடந்த 7 ஆண்டுகளாக நான் சந்திக்கும் விஷயங்களை அவர் நெருக்கத்திலிருந்து பார்த்திருக்கிறார்."

“உங்களால் ஒரு விஷயத்தில் 100 விழுக்காடு முழுமையாகச் செயல்பட முடியாமல் போனால் நீங்கள் கொஞ்சம் ஓய்வு எடுக்க வேண்டியது அவசியம். புத்துயிர் பெறுவதற்காகச் சிறிது ஓய்வு எடுப்பது நல்ல முடிவாக இருக்கும்”

“கிரிக்கெட் விளையாடுவதனால் உடல் எப்போதும் ஃபிட்டாக இருக்கும். இது மன ரீதியிலான ஓய்வு. நாம் என்ன செய்கிறோம் என்பது குறித்து உற்சாகத்துடன் இருக்க வேண்டும். ஒரு சூழ்நிலைக்கு உங்களைத் திணித்துக்கொண்டதாக இருக்கக் கூடாது.” என்றார்.

எந்த ஷாட்டில் மிக உத்வேகமாக உணர்ந்தீர்கள் என்ற கேள்விக்கு, “பௌலரின் தலைக்கு மேல் அடித்த அந்த ஷாட்தான் பெரிய இன்னிங்ஸ் ஆடுவதற்கான நம்பிக்கையைக் கொடுத்தது.” எனப் பதிலளித்தார் விராட்.

Virat Kohli
IPL 2022: 'மாரியாத்தா உனக்கு இரக்கமே இல்லையா' விராட் கோலிக்கு தொடரும் துரதிருஷ்டம்
விராட் கோலி
விராட் கோலிBCCI

அதிரடியான ஆட்டத்துக்குப் பின் அவர், “இன்றைய போட்டி எங்களுக்கு மிக முக்கியமானதாக இருந்தது. அணிக்காகச் சிறந்த பங்களிப்பை அளிக்க முடியாமல் ஏமாற்றமுற்றேன். கடினமாக உழைத்தேன். நேற்று மட்டும் 90 நிமிடங்கள் வலையில் பேட்டிங் ஆடினேன். அணியின் வெற்றிக்காகத் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் பெர்ஃபார்ம் செய்ததில் மகிழ்ச்சி” என்று பேசினார்.

பிளேஆஃப்ஸ் வாய்ப்பை பொறுத்தவரை, நாளை மறுநாள் நடைபெறும் டெல்லி vs மும்பை ஆட்டத்தில் டெல்லி தோற்றால் மட்டுமே பெங்களூருவிற்கு பிளேஆஃப்ஸ் வாய்ப்பு கிடைக்கும். 'நான் ரோஹித்தை நம்புகிறேன். அவர் பெரிதாகச் செய்வார்' என டு ப்ளெஸ்ஸி பேசியிருக்கிறார்.

Virat Kohli
IPL 2022 : சாகும் வரை சண்டை செய்த கொல்கத்தா; டீ காக் செய்த தரமான சம்பவம் - 'மாஸ்' மேட்ச்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com