"Dhoni, Kohli மட்டும் ஹீரோ இல்ல" முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் காட்டம்

இந்தியன் எக்ஸ்பிரஸ் ஐடியா எக்ஸ்சேஞ்ச் பேட்டியில், கம்பீரிடம் கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. இந்தியாவில், குறிப்பிட்ட ஒருவரை மட்டும் ஹீரோவாக பார்ப்பது, மற்ற வீரர்களின் வருங்காலத்தை பாதிக்கிறதா? என்பது தான் அந்த கேள்வி
கம்பீர்
கம்பீர்டிவிட்டர்
Published on

ஒருவரை மட்டும் ஹீரோவாக தலையில் தூக்கிவைத்து கொண்டாடும் வழக்கம் இந்தியாவில் மாறவேண்டும் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் எல்லோருக்கும் சமமான அங்கீகாரம் வேண்டும் என்று கூறியுள்ளார் கம்பீர். காலம் காலமாக யாராவது ஒருவரை மட்டும் ஹீரோவாக பார்த்து, தலையில் ஏற்றிவைத்து கொண்டாடும் கலாச்சாரம் மாறவேண்டும் என ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் ஐடியா எக்ஸ்சேஞ்ச் பேட்டியில், கம்பீரிடம் கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. இந்தியாவில், குறிப்பிட்ட ஒருவரை மட்டும் ஹீரோவாக பார்ப்பது, மற்ற வீரர்களின் வருங்காலத்தை பாதிக்கிறதா? என்பது தான் அந்த கேள்வி. அதற்கு பதிலளித்த கம்பீர், 

ரசிகர்களும், கிரிக்கெட் உலகைச் சேர்ந்தவர்களும், ஒருவரை மட்டுமே ஹீரோவாக பார்க்கும் கலாச்சாரத்தை கைவிட வேண்டும் என தெரிவித்தார். அணியின் வெற்றிக்குச் சிறிதளவு பங்காற்றினாலும், அதற்கு அடையாளம் கொடுக்கவேண்டும் எனக் கூறினார். சமீபத்தில் ஆசியக்கோப்பை போட்டியில் விராட் கோலி தனது 71வது சதத்தை அடித்தார். இது 1021 நாட்களுக்கு பிறகு அவர் பதிவு செய்யும் முதல் சதம். இந்த 71வது சதம் என்பது, கோலியையும் தாண்டி, ரசிகர்கள், கிரிக்கெட் உலகின் பெரும்புள்ளிகளின் காத்திருப்பாகவே இருந்தது. 

கம்பீர்
"தோனி மட்டும் தான் என்னிடம் பேசினார்" - மனம் திறந்த விராட் கோலி
Virat Kohli
Virat Kohli ICC

அந்த போட்டியில் இந்தியா வெற்றிபெற்ற நிலையில், கோலிக்கு பாராட்டுகள் குவிந்தன. ஆனால், அதே போட்டியில் பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் சிறப்பான ஆடத்தை வெளிபட்டுத்தி 5 விக்கெட்களை வீழ்த்தினார். "அன்றைய போட்டியில் எல்லோரும் கோலியை கொண்டாடினார்கள். ஆனால் சிறிய நகரமான மீரட்டில் இருந்து வந்த புவனேஸ்வர் குமாரை யாரும் கண்டுகொள்ளவில்லை. அன்று கமெண்டரியில் கூட என்னை தவிர யாரும் அவரை பற்றி பேசவில்லை" எனவும் வருத்தம் தெரிவித்தார்.

1983ல் கபில்தேவ், 2007, 2011ல் தோனி, தற்போது அந்த வரிசையில் கோலி ஹீரோவாக உள்ளார் எனக் கூறிய கம்பீர், சமூக வலைத்தளம் தான் இதற்கு முக்கிய காரணம் என தெரிவித்தார்

"சமூக வலைத்தளங்களில் இருக்கும் ஃபாலோவர்களின் எண்ணிக்கையை வைத்து தான் உங்களை எடைப்போடுகிறாகள். அதிக ஃபாலோவர்கள் இருந்தால் அதுவே ஒரு பிராண்டாக மாறிவிடுகிறது" என்று குற்றம் சாட்டியவர், கிரிக்கெட் மட்டுமில்லை, அரசியல், பொதுநலன் ஆகிய விஷயங்களிலும், இந்தியாவில் இந்த தவறு நடக்கிறது என்றார். 

ஒரு குறிப்பிட்ட நபரை மட்டும்  ஹீரோவாக பார்க்காமல், அனைவருக்கும் சமமான அங்கீகாரம் கொடுக்கும் மாறுதல் நாட்டில் வரவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார் 

கம்பீர்
Virat Kohli : 71வது சதத்துக்கு பிறகு விராட் கோலியின் ட்வீட், பிரபலங்களின் எமோஷனல் பதிவுகள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com