Virat Kohli சதத்தால் கேள்விக் குறியான CSK, LSG பிளே ஆஃப் வாய்ப்பு- IPLல் தொடரும் ட்விஸ்ட்!

தனது சதம் குறித்து பேசிய கோலி, “நான் என் மேல் ஏற்கனவே அளவுக்கு அதிகமான அழுத்ததை போட்டுக்கொண்டுள்ளேன். மற்றவர் பேச்சுக்கள் குறித்து நான் கவலைக்கொள்ளப் போவதில்லை. அவரவர் கருத்து, அவர்களுடன் இருக்கட்டும்” என்றார்.
Virat Kohli சதத்தால் கேள்விக் குறியான CSK, LSG பிளே ஆஃப் வாய்ப்பு- IPLல் தொடரும் ட்விஸ்ட்!
Virat Kohli சதத்தால் கேள்விக் குறியான CSK, LSG பிளே ஆஃப் வாய்ப்பு- IPLல் தொடரும் ட்விஸ்ட்!Twitter
Published on

விராட் கோலி சன்ரைசர்ஸுக்கு எதிரான நேற்றின் போட்டியில் சதமடித்ததன் மூலம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இமாலய வெற்றி பெற்றது.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் நேற்றைய ஐபிஎல் போட்டியில் மோதியது பெங்களூரு அணி. இது கிட்ட தட்ட ஆர் சி பிக்கு Do or Die போட்டி தான். இன்னும் ஒரு போட்டி கையில் இருந்தாலும், இந்த மேட்சின் ரிசல்ட் தான் அவர்களின் அடுத்த கட்டத்தை முடிவு செய்வதாக இருந்தது.

டாஸ் வென்று பௌலிங் தேர்வு செய்தது பெங்களூரு அணி. வழக்கம்போல ஹைதராபாத் டாப் ஆர்டர் சரிய, விக்கெட் கீப்பர் கிளாசன் அணிக்கு நம்பிக்கை அளித்தார். 51 பந்துகளில் 8 ஃபோர், 6 சிக்சர்கள் உள்பட அவர் அடித்த 104 ரன்கள், அணியை குறைவான ஸ்கோரிலிருந்து தப்ப வைத்தது. ஹேரி ப்ரூக்கும் தன் பங்கிற்கு 27 ரன்கள் சேர்த்ததில், ஆர் சி பிக்கு 187 ரன்கள் இலக்கானது.

தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு அணியின் முந்தைய மற்றும் தற்போதைய கேப்டன்களான, டுப்ளெசி மற்றும் விராட் கோலி, நங்கூரம் போல நின்றனர்.

நீ சிக்சர் அடித்தால் நானும் சிக்சர் அடிப்பேன், நீ சிங்கிள் எடுத்தால் நானும் ஒரு ரன் தான் எடுப்பேன் என, களத்தில் நின்று சன்ரைசர்ஸ் பௌலர்களை திக்குமுக்காட செய்தனர்.

Virat Kohli சதத்தால் கேள்விக் குறியான CSK, LSG பிளே ஆஃப் வாய்ப்பு- IPLல் தொடரும் ட்விஸ்ட்!
CSK vs RCB: ”Result பற்றிய கவலை எனக்கு இல்லை” வெற்றிக்கு பின் என்ன பேசினார் கேப்டன் தோனி?

8வது ஓவரில் டுப்ளெசி அடித்த பந்து ஃபீல்டரிடம் சென்று கேட்சாக, அது விக்கெட் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் அதிர்ஷ்டவசமாக அது நோ பால் என அறிவிக்கப்பட, விக்கெட் எடுக்க இருந்த ஒரு வாய்ப்பும் பறிபோனது. டுப்ளெசி அரைசதம் கடந்தார்.

தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலிக்கு பக்கபலமாக நின்றார் டுப்ளெசி. சிக்சர்களும் ஃபோர்களும், கவர் டிரைவ்களுமாக விளாசிய கோலி 63 பந்துகளில் சதமடித்தார். இது அவரது ஆறாவது ஐபிஎல் சதம்.

சரியாக 100 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார் கோலி, அவரை தொடர்ந்து 71 ரன்களில் டுப்ளெசியும் வெளியேறினார். எனினும் 19.2 ஓவர்களில் 187 ரன்கள் அடித்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றனர் ஆர் சி பி.

இதற்கு முன் மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த கிறிஸ் கெயில் தான் ஐபிஎல்லில் 6 சதங்கள் அடித்திருந்தார், விராட் கோலி தற்போது அந்த சாதனையை சமன் செய்துள்ளார். விரைவில் அந்த சாதனையை முறியடிக்கவும் வாய்ப்புள்ளது

Virat Kohli சதத்தால் கேள்விக் குறியான CSK, LSG பிளே ஆஃப் வாய்ப்பு- IPLல் தொடரும் ட்விஸ்ட்!
IPL 2023: தொடர்ந்து லக்னோவிடம் தோற்கும் மும்பை இந்தியன்ஸ் - பிளே ஆஃப் வாய்ப்பை தவறவிட்டதா?

தனது சதம் குறித்து பேசிய கோலி, “நான் என் மேல் ஏற்கனவே அளவுக்கு அதிகமான அழுத்ததை போட்டுக்கொண்டுள்ளேன். மற்றவர் பேச்சுக்கள் குறித்து நான் கவலைக்கொள்ளப் போவதில்லை. அவரவர் கருத்து, அவர்களுடன் இருக்கட்டும்” என்றார்.

ஆர் சி பியின் இந்த வெற்றி, சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பிளே ஆஃபுக்கு செல்லும் வழியில் தற்போது முட்டுக்கட்டையாக வந்துள்ளது.

மும்பை பெங்களூரு என இரண்டு அணிகளும் தற்போது 14 புள்ளியில் இருப்பதால், மும்பை அணியும் பிளே ஆஃபுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கிரிக்கெட் உலகம், கோலியின் இந்த சதத்தை கொண்டாடி வருகிறது

Virat Kohli சதத்தால் கேள்விக் குறியான CSK, LSG பிளே ஆஃப் வாய்ப்பு- IPLல் தொடரும் ட்விஸ்ட்!
Pathirana: தோனி பாராட்டும் இந்த இளைஞர் யார்? இவரை ‘Baby Malinga’ என்றழைப்பது ஏன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com