தோனி விக்கெட்: "நான் வாழ்நாளில் கேட்டிராத சத்தம்" மனம் திறந்த மார்க் வுட் - என்ன பேசினார்?

எப்படியாவது அவரை ஆட்டமிழக்கச் செய்யவேண்டும் என்பதே லக்னோ கேப்டன் கே எல் ராகுலுக்கும், பந்துவீச்சாளர் மார்க் வுட்டிற்கும் இலக்காக இருந்தது.
தோனி: ” நான் வாழ்நாளில் கேட்டிராத சத்தம்” மனம் திறந்த மார்க் வுட் - என்ன பேசினார்?
தோனி: ” நான் வாழ்நாளில் கேட்டிராத சத்தம்” மனம் திறந்த மார்க் வுட் - என்ன பேசினார்?ட்விட்டர்
Published on

கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி சென்னை லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டியில் எம் எஸ் தோனியை அவுட்டாக்கினார் லக்னோ அணியின் மார்க் வுட்.

தோனிக்கு பந்துவீசிய தனது அனுபவம் குறித்து மனம் திறந்துள்ளார் இங்கிலாந்து வீரர்.

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட். 2018 முதல் ஐபிஎல்லில் இவர் பங்கேற்றாலும், அதிகமான போட்டிகளில் இவர் விளையாடவில்லை. தற்போது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஸ்டார் பவுலராக இருக்கிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி போட்டி நடந்தது. இது மூன்று ஆண்டுகளுக்கு பின் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த முதல் போட்டி.

இதில் முதலில் சென்னை அணி பேட் செய்தது . 20வது ஓவரில் களமிறங்கினார் கேப்டன் தோனி.

மைதானத்திற்குள் நுழையும்போதே ஆர்ப்பரித்த ரசிகர்களுக்கு, தக்க விருந்தாக அமைந்தது தோனி அடித்த டபுள் சிக்ஸர்.

ஆனால் மூன்றாவது பந்திலேயே அவுட்டாகி பெவிலியனுக்கு திரும்பினார். எனினும், அவர் அடித்த அந்த இரண்டு சிக்சர்களே எதிரணிக்கு வயிற்றில் புளியை கறைத்தது எனலாம்.

தோனி: ” நான் வாழ்நாளில் கேட்டிராத சத்தம்” மனம் திறந்த மார்க் வுட் - என்ன பேசினார்?
GT vs DC : "முதல் அடி என்னோடதா இருக்கும்" - வெற்றிக்கு பிறகு ஹர்திக் பேசியது என்ன?

எப்படியாவது அவரை ஆட்டமிழக்கச் செய்யவேண்டும் என்பதே லக்னோ கேப்டன் கே எல் ராகுலுக்கும், பந்துவீச்சாளர் மார்க் வுட்டிற்கும் இலக்காக இருந்தது.

“நானும் எனது அணி கேப்டனும் கலந்துரையாடி தோனிக்கு ஏற்றவாறு ஃபீல்ட் செட் செய்திருந்தோம். நான் அமைதியாக இருக்கவே நினைத்தேன், அவரை அவுட்டாக்குவது குறித்து தான் சிந்தித்துக்க்கொண்டிருந்தோம்.

ஆனால் அதற்கு நான் 12 ரன்களை விலைக்கொடுத்தேன். எனினும், அவர் இரண்டாவது பந்தில் அடித்த சிக்சர் மிகவும் சிறப்பான ஷாட். Pretty Incredible" என்றார்

தோனி: ” நான் வாழ்நாளில் கேட்டிராத சத்தம்” மனம் திறந்த மார்க் வுட் - என்ன பேசினார்?
தோனி டு கோலி- 2011 உலகக்கோப்பை வெற்றி கூட்டணி இப்போதைய நிலை என்ன? '12YearsofIndiaWorldCup'

மேலும் பேசியவர் தோனி மைதானத்திற்குள் நுழைந்தபோது ரசிகர்கள் அவ்வளவு உற்சாகமாக குரல் எழுப்பினார்கள். இது தான் வாழ்நாளில் இதுவரை கேட்டிராத சத்தம் எனவும் கூறினார்.

தோனி அடித்த இரண்டு சிக்சர்கள் மூலம் ஐபிஎல்லில் 5000 ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் அவர் இணைந்தார்.

தோனியின் சிக்சர்கள் குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா, “உலகின் அதிவேகமான பவுலர், 145-147 kmphல் பந்துவீசும் போது, அதனை சிக்சருக்கு விளாசுவது அவ்வளவு எளிதல்ல” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது

தோனி: ” நான் வாழ்நாளில் கேட்டிராத சத்தம்” மனம் திறந்த மார்க் வுட் - என்ன பேசினார்?
தோனி: சேப்பாக்கில் CSKவுக்கு முதல் வெற்றி- வெளுத்துக்கட்டிய ருதுராஜ்; தல கொடுத்த வார்னிங்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com