GT vs DC : "முதல் அடி என்னோடதா இருக்கும்" - வெற்றிக்கு பிறகு ஹர்திக் பேசியது என்ன?

"சாய் சுதர்ஷனின் பேட்டிங் அபாரமாக இருக்கிறது. கடந்த 15 நாட்களாக இதனை அருகில் இருந்து பார்த்து வருகிறேன். இன்னும் இரண்டு வருடங்களில் இவர் மிகப்பெரிய ஐபிஎல் நட்சத்திரமாக இருப்பார். இந்திய அணிக்காகவும் விளையாடுவார் என உறுதியாக நம்புகிறேன்"
GT vs DC : "முதல் அடி என்னோடதா இருக்கும்" - வெற்றிக்கு பிறகு ஹர்திக் பேசியது என்ன?
GT vs DC : "முதல் அடி என்னோடதா இருக்கும்" - வெற்றிக்கு பிறகு ஹர்திக் பேசியது என்ன?Twitter
Published on

ஹர்திக் பாண்டியாவின் குஜராத் டைட்டன்ஸ் அணி நேற்றைய போட்டியில் இரண்டாவது வெற்றியை பெற்று பாயிண்ட்ஸ் டேபிளில் முதலிடம் பிடித்திருக்கிறது.

நேற்றைய போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் குஜராத் டைட்டன்ஸ் மோதியது. குஜராத் ஆணியின் நட்சத்திர பந்துவீச்சாளர்களான முகமது ஷமி மற்றும் ரஷித் கான் முறையே 41 மற்றும் 31 ரன்கள் விட்டுக்கொடுத்து தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

கேப்டன் ஹர்திக் பாண்டியா விக்கெட் எதுவும் எடுக்கவில்லை என்றாலும் 3 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் அதிகபட்சமாக 37 ரன்கள் எடுத்தார். ஆல்ரவுண்டரான அக்ஸர் படேல் 3 சிக்சர்கள் 2 பவுண்டரிகளுடன் 22 பந்துகளுக்கு 36 ரன்கள் எடுத்து அசத்தினார். மொத்தமாக 8 விக்கெட் இழந்த டெல்லி கேபிடல்ஸ் 162 ரன்கள் குவித்தனர்.

163 ரன்களை சேஸ் செய்த குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சுமாராக விளையாடி அவுட் ஆனாலும் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் சீராக ரன்களை சேர்த்தார்.

48 பந்துகளுக்கு 62 அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். அவருக்கு சரியான இணையாக டேவிட் மில்லர் களமிறங்கி 16 பந்துகளுக்கு 31 ரன்கள் அடித்ததால் குஜராத் அணி 18.1 ஓவரிலேயே போட்டியை வென்றது.

போட்டிக்கு பிறகு ஹர்திக் பாண்டியா பேசியதாவது,

"நான் என் பக்கமே எப்போதும் நிற்கிறேன். மற்றவர்களை நம்புவதை விட என் முடிவுகளை நம்பி கீழே விழுந்தாலும் பரவாயில்லை. முதல் அடி வாங்குவதை விட முதல் குத்து விடுவதைதான் விரும்புகிறேன். என்ன நடந்தாலும் வெளியில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், ஒருவரை ஒருவர் கவனித்துக்கொள்ள வேண்டும்" என்றுப் பேசினார் ஹர்திக்.

GT vs DC : "முதல் அடி என்னோடதா இருக்கும்" - வெற்றிக்கு பிறகு ஹர்திக் பேசியது என்ன?
CSK vs GT: "ருதுராஜ்ஜை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது" - தோல்வி பற்றி தோனி பேசியது என்ன?

'பவர் பிளேவில் 15-20 ரன்களை அதிகமாக வழங்கினோம். இருப்பினும், அடுத்து பௌலர்கள் சிறப்பான கம்பேக் கொடுத்து அசத்தினார்கள். நான் எப்போதுமே எனது முடிவினை 100 சதவீதம் நம்புவேன். ஆகையால்தான், சிறப்பாக செயல்பட முடிகிறது. அழுத்தங்கள் இல்லாமல் விளையாட இது உதவுகிறது'எனப் பேசினார்.

GT vs DC : "முதல் அடி என்னோடதா இருக்கும்" - வெற்றிக்கு பிறகு ஹர்திக் பேசியது என்ன?
Dhoni: மும்பை வான்கடே மைதானத்தில் ‘தல’ தோனிக்கு சிலை - எப்போது திறப்பு விழா?

மேலும் சாய் சுதர்ஷன் குறித்து,'சாய் சுதர்ஷனின் பேட்டிங் அபாரமாக இருக்கிறது. கடந்த 15 நாட்களாக இதனை அருகில் இருந்து பார்த்து வருகிறேன். இன்னும் இரண்டு வருடங்களில் இவர் மிகப்பெரிய ஐபிஎல் நட்சத்திரமாக இருப்பார். இந்திய அணிக்காகவும் விளையாடுவார் என உறுதியாக நம்புகிறேன்'என்றார்.

GT vs DC : "முதல் அடி என்னோடதா இருக்கும்" - வெற்றிக்கு பிறகு ஹர்திக் பேசியது என்ன?
தோனியுடன் ஹர்திக் பாண்டியா - கேப்டன்கள் சந்திப்பு எங்கு நடந்தது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com