KKR vs SRH: ”என் இதயத்துடிப்பு 200ஐ தொட்டது” என்ன பேசினார் வருண் சக்கரவர்த்தி?

இரண்டாவதாக களமிறங்கிய ஹைதராபாத் அணி முதலில் தடுமாறினாலும், கேப்டன் மார்க்ரம் மற்றும் வெளிநாட்டு வீரர் கிளாச்சன் சிறப்பாக விளையாடினர். ஆனால் அவர்களது விக்கெட்களை இழந்த பிறகு மீண்டும் போட்டி கொல்கத்தாவின் பக்கம் திரும்பிவிட்டது.
KKR vs SRH: ”என் இதயத்துடிப்பு 200ஐ தொட்டது” என்ன பேசினார் வருண் சக்கரவர்த்தி?
KKR vs SRH: ”என் இதயத்துடிப்பு 200ஐ தொட்டது” என்ன பேசினார் வருண் சக்கரவர்த்தி?ட்விட்டர்
Published on

நேற்றைய ஆட்டத்தின் கடைசி ஓவரை வீசிய கொல்கத்தா அணி பௌலர் வருண் சக்கரவர்த்தி, பந்து வீசும்போது பதற்றத்தில் தன் இதயத்துடிப்பு 200ஐ தொட்டது எனக் கூறியுள்ளார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துடன் மோதிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நேற்று 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 4 ஓவர்களை வீசி வெறும் 20 ரன்களையே வழங்கி, தமிழ்நாட்டை சேர்ந்த வீரர் வருண் சக்கரவர்த்தி போட்டியை வென்று கொடுத்துள்ளார்.

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 171 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ரிங்கு சிங் 46 ரன்களும், நிதிஷ் ரானா 42 ரன்களும் எடுத்திருந்தனர்.

இரண்டாவதாக களமிறங்கிய ஹைதராபாத் அணி முதலில் தடுமாறினாலும், கேப்டன் மார்க்ரம் மற்றும் வெளிநாட்டு வீரர் கிளாச்சன் சிறப்பாக விளையாடினர். ஆனால் அவர்களது விக்கெட்களை இழந்த பிறகு மீண்டும் போட்டி கொல்கத்தாவின் பக்கம் திரும்பிவிட்டது.

கடைசி ஓவரில் ஹைதராபாத் அணிக்கு 9 ரன்கள் தேவை என்றிருந்த நிலையில், வெறும் 4 ரன்களையே வழங்கி அணியை வெற்றி பெற வைத்தார்.

KKR vs SRH: ”என் இதயத்துடிப்பு 200ஐ தொட்டது” என்ன பேசினார் வருண் சக்கரவர்த்தி?
Mumbai Indians : தொடர்ந்து சொதப்பும் சூர்யகுமார் யாதவ் - IPL இல் ஜொலிக்கமுடியாமல் போவாரா?

போட்டி முடிந்து பேசிய வருண், “பந்து வழக்கத்தை விட அதிகமாக வழுக்கியது. அதனால், லாங்கர் சைடில் பேட்டரை அடிக்க வைத்து விக்கெட்டை எடுக்கவேண்டும் என்பது தான் என் இலக்காக இருந்தது. கடைசி ஓவரை வீசும்போது என் இதயத்துடிப்பு 200ஐ தொட்டுவிட்டது.

நான் வீச்ய முதல் ஓவரில் 12 ரன்களை வழங்கிவிட்டேன், மார்க்ரம் இரண்டு ஃபோர்கள் அடித்தார், போட்டிகள் அப்படித்தான் இருக்கும். கடந்த ஆண்டு முதலே என் பௌலிங் எப்படி இருக்கிறது என்பதை ஆராய்ந்து எங்கு மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டேன்.” என்றார்.

வருண் சக்கரவர்த்திக்கு நேற்று ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

KKR vs SRH: ”என் இதயத்துடிப்பு 200ஐ தொட்டது” என்ன பேசினார் வருண் சக்கரவர்த்தி?
IPL 2023: போராடி தோற்ற சென்னை, ராஜஸ்தான் - கடைசி பந்து வரை சென்ற Sunday போட்டிகள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com