Dhoni ஆல் TNPL தொடரில் விளையாட முடியுமா?

திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக அஸ்வின் விளையாடும் போது, ஏன் தோனி இந்த தொடரில் பங்கேற்க கூடாது? வேறெந்த தொடரிலும் விளையாடாத நிலையில் தமிழக ரசிகர்களுக்காக தோனியால் இதை சாத்தியப்படுத்த முடியுமா?
Dhoni ஆல் TNPL தொடரில் விளையாட முடியுமா?
Dhoni ஆல் TNPL தொடரில் விளையாட முடியுமா? Twitter
Published on

தமிழ்நாடு பிரிமியர் லீகின் 8வது சீசன் தொடங்க உள்ளது. நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் சென்னை அணி வெற்றி பெற்ற ‘வைப்’ அடங்காத தமிழக கிரிக்கெட் ரசிகர்களுக்கு அடுத்த விருந்தும் தயாராகியுள்ளது.

தமிழ்நாடு பிரிமியர் லீகில் சர்வதேச போட்டியாளர்களும் பங்கேற்பார்கள் என்பது நாம் அறிந்தது தான். அனுபவமிக்க ஸ்பின்னரான ஆர் அஸ்வின் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக விளைடாடவுள்ளார்.

அஸ்வின் விளையாடும் தொடரில் தோனியால் விளையாட முடியும் தானே என ரசிகர்கள் நினைப்பதில் தவறில்லை. வேறெந்த போட்டியிலும் விளையாடாத நிலையில் தோனியால் டி.என்.பி.எல் விளையாட முடியுமா?

ஆனால் தோனிக்கு டின்.என்.பி.எல் போட்டியில் விளையாடும் தகுதி இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம் தமிழ்நாடு ரசிகர்களுக்காக டி.என்.பி.எல் விளையாடுவதைத் தவிர தோனிக்கும் மகிழ்ச்சி தரக் கூடிய விஷயம் ஒன்றும் இருக்க  முடியாது. ஆனால் அவரே நினைத்தாலும் டி.என்.பி.எல்-ல் அவரால் விளையாட முடியாது. 

2018ம் ஆண்டு டின்.என்.பி.எல்லில் வெளி ஊர் வீரர்கள் விளையாட முடியாது என்ற விதி கொண்டுவரப்பட்டது. இதனால் 2018ம் ஆண்டு தொடரில் விளையாட பதிவு செய்திருந்த மற்ற ஊரின் 16 வீரர்களால் விளையாட முடியாமல் போனது.

Dhoni ஆல் TNPL தொடரில் விளையாட முடியுமா?
IPL 2023 Finals: "நிம்மதியா தூங்க முடியல” ஐபிஎல் தோல்விக்கு பிறகு மனமுடைந்த மோஹித் சர்மா!

தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷனில் பதிவு செய்யப்பட்ட வீரர்கள் மட்டுமே டி.என்.பி.எல்லில் விளையாட முடியும்.  ஆனால் தோனி ராஞ்சியில் வாழ்வதால் ஜார்கண்ட் கிரிக்கெட் அசோசியேஷனில் தனது பெயரை பதிவு செய்துள்ளார். 

இப்போது அவர் டி.என்.பி.எல் போன்ற எந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியிலும் விளையாடவில்லை என்பதனால் அவர் விளையாடுவதைப்பார்க்க நாம் அடுத்த ஐபிஎல் வரைக் காத்திருக்க வேண்டியது தான்.

Dhoni ஆல் TNPL தொடரில் விளையாட முடியுமா?
Suresh Raina-வை புறக்கணிக்கும் லங்கா பிரிமியர் லீக் : விளம்பரத்துக்காக இந்திய வீரரா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com