WPL : கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் - பரிசு தொகை எத்தனை கோடி தெரியுமா?

மூன்றாவது இடம் பிடித்த உ.பி வாரியர்ஸ் அணிக்கு 1கோடி வழங்கப்பட்டது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் வெறும் கையுடன் வீடு திரும்பின.
WPl : கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் - பரிசு தொகை எத்தனை கோடி தெரியுமா?
WPl : கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் - பரிசு தொகை எத்தனை கோடி தெரியுமா?Twitter
Published on

பெண்களுக்கான ஐபிஎல் போட்டியின் முதல் சீசனில் கோப்பை வென்றுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

இறுதிப்போட்டில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வென்று ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை அணி வரலாறு படைத்துள்ளது.

நேற்றைய போட்டியில் மெக் லன்னிங் தலைமையில் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

9 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் குவித்தது. சுமாரான இலக்கு தான் என்றாலும் மும்பை அணிக்கு சேஸிங் எளிமையானதாக இல்லை.

இறுதி ஓவர் வரை 3 விக்கெட்கள் மட்டுமே இழந்திருந்த மும்பை அணி, 19.3 ஓவரில் 134 ரன்கள் எடுத்து கோப்பையை வென்றது.

முதல் பெண்கள் பிரிமியர் லீக் கோப்பை வென்ற அணிக்கு பாராட்டு, அங்கீகாரத்துடன் பரிசுத்தொகையும் கொடுக்கப்பட்டது.

ஆண்களுக்கான ஐபிஎல் கோப்பையின் மதிப்பு 20 கோடி ரூபாய் என நமக்குத் தெரியும். ஆனால் பெண்கள் பிரிமியர் லீக் கோப்பையின் மதிப்பு சொல்லப்படவில்லை.

ஒன்றரை அடி பெரிதான அந்த கோப்பை ஆண்கள் கோப்பையை விட மதிப்புக் குறைவு எனக் கூறப்படுகிறது.

WPl : கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் - பரிசு தொகை எத்தனை கோடி தெரியுமா?
IPL 2023 Schedule: முதல் போட்டி CSK Vs ? - சென்னைக்கு நட்சத்திர போட்டிகள் எப்போது?

WPL வெற்றியாளரான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 6 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

இறுதிப்போட்டி வரைத் தகுதிபெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு 3 கோடி வழங்கப்பட்டது.

மூன்றாவது இடம் பிடித்த உ.பி வாரியர்ஸ் அணிக்கு ஒரு கோடி பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

மேலும் பல பிரிவுகளில் விருதுகளை வெல்லும் வீராங்கனைளுக்கு 1 லட்சம் முதல் 5 லட்சம் வரை பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

WPl : கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் - பரிசு தொகை எத்தனை கோடி தெரியுமா?
WPL 2023: ஸ்மிருதி மந்தனா டு ஹர்மன் ப்ரீத் கவுர்- அதிக விலைக்கு எடுக்கப்பட்ட வீராங்கனைகள்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com