WTC: சுப்மன் கில் அவுட் கொடுத்தது தவறா? ரசிகர்களுடன் இணைந்து கேள்வி எழுப்பும் வீரர்!

இது குறித்து சுப்மன் கில் மேட்ச் முடியும் முன்னரே தனது ட்விட்டரில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்தார். அதில் பந்து தரையில் பட்டிருப்பது போலத் தெரிகிறது என ரசிகர்கள் வாதாடுகின்றனர்.
WTC: சுப்மன் கில் அவுட் கொடுத்தது தவறா? ரசிகர்களுடன் இணைந்து கேள்வி எழுப்பும் வீரர்!
WTC: சுப்மன் கில் அவுட் கொடுத்தது தவறா? ரசிகர்களுடன் இணைந்து கேள்வி எழுப்பும் வீரர்!Twitter
Published on

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணிக்கு 444 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இன்னிங்ஸில் இந்திய ஓபனிங் பேட்ஸ்மேன் சுப்மன் கில் விக்கெட் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

சும்மன் கில் அடித்த பந்தை கேமரூன் கிரீன் கேட்ச் பிடித்தார். அந்த கேட்ச் சரியாக பிடிக்கப்பட்டதா என்ற கேள்வி அனைவருக்குமே எழுந்தது.

ரசிகர்களுடன் சுப்மன் கில்லும் இந்த விவாதத்தில் இணைந்தார். மேட்ச் நடந்துகொண்டிருக்கும் போதே சுப்மன் கில் அவரது விக்கெட் குறித்த டிவி ஒளிபரப்பு புகைப்படத்தைப் பகிர்ந்தார்.

மேலும், இரண்டு பூதக்கண்ணாடிகள் இருக்கும் எமோஜிகளையும் பகிர்ந்துள்ளார். புகைப்படத்தில் பந்து தரையை தொட்டிருப்பது போலத் தெரிகிறது.

கில்லின் இந்த ட்வீட்டிற்கு பலரும் சப்போர்ட் செய்திருந்தாலும் சிலர் சுப்மன் கில் அவரது கரியரில் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும். இத்தகைய செயல்களில் ஈடுபடாமல் இருக்கலாம் எனவும் கூறியிருக்கின்றனர்.

WTC: சுப்மன் கில் அவுட் கொடுத்தது தவறா? ரசிகர்களுடன் இணைந்து கேள்வி எழுப்பும் வீரர்!
WTC: "Ashwin ஏன் களமிறக்கப்படவில்லை?" - ரோஹித் சர்மா மீது கேள்வி எழுப்பும் மூத்த வீரர்கள்!

ஆனால் இந்த விவகாரத்தில் கேமரூன் கிரீன் சரியாக தான் கேட்ச் பிடித்தார் என்பதை எடுத்துரைப்பது போல ஐசிசி அந்த கேட்சின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளது.

WTC: சுப்மன் கில் அவுட் கொடுத்தது தவறா? ரசிகர்களுடன் இணைந்து கேள்வி எழுப்பும் வீரர்!
சச்சின் முதல் கில் வரை - ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த கிரிக்கெட் வீரர்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com