சட்டமன்ற சிறப்பு கூட்டங்கள் : கடந்த 10 ஆண்டுகளில் நடந்த 5 கூட்டங்கள் நடந்த பின்னணி

கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தொடர்கள் நடைபெற்றுள்ளது. எந்தெந்த விஷயத்திற்கெல்லாம் சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்றுள்ளது எனக் காணலாம்.
சட்டமன்றம்

சட்டமன்றம்

Twitter

Published on

சட்டமன்ற கூட்டத்தொடர்கள் இல்லாத நாட்களில் முக்கியமான விதாவதங்கள் நிகழ்த்துவதற்காக அல்லது முக்கிய தீர்மானங்கள், மசோதாக்களை நிறைவேற்றுவதற்காகச் சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடைபெறும். கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தொடர்கள் நடைபெற்றுள்ளது. எந்தெந்த விஷயத்திற்கெல்லாம் சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்றுள்ளது எனக் காணலாம்.

முல்லைப் பெரியாறு பிரச்னை:

2012 ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணை தொடர்பாகத் தமிழக அரசின் உரிமையை நிலைநிறுத்தும் வகையில் ஏகமானதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அணை பலவீனமாக இருப்பதாகத் தொடர்ந்து கருத்துக்கள் பரப்பப்பட்டன. இதனால் முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்தும் வகையில் சிறப்புக்கூட்டம் கூடியது.

இலங்கை காமன்வெல்த் போட்டி:

இலங்கையில் நடைபெற்ற 2013 காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என்பதற்காகச் சட்டமன்ற சிறப்புக்கூட்டம் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் மாலை 5 மணியளவில் கூடி, காமன்வெல்த் போட்டிகளை புறக்கணிக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

<div class="paragraphs"><p>ஜல்லிக்கட்டு போராட்டம்&nbsp;</p></div>

ஜல்லிக்கட்டு போராட்டம் 

Facebook

ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம்:

2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு நடத்தத் தடை விதிக்கப்பட்டபோது, சென்னை மெரினா மற்றும் தமிழகமெங்கும் இளைஞர்கள் ஒன்றுகூடி போராடினர். அப்போதைய முதலமைச்சராக இருந்த ஒபிஸ் தலைமையில் ஜல்லிக்கட்டு தடையை நீக்கும் வகையில் சிறப்புக்கூட்டம் கூட்டப்பட்டு அவசரச் சட்டம் இயற்றப்பட்டது.

மேகதாது அணை விவகாரம்:

2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் தேதி கர்நாடகா காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டதை தடுக்கும் வகையில அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்புச் சட்டமன்ற கூட்டம் நடைபெற்றது.

நீட் விலக்கு மசோதா:

தற்போது நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதன் விளைவாக மீண்டும் நீட் விலக்கு சட்ட முன்வடிவை நிறைவேற்ற இன்று (8ஆம் தேதி) தமிழ்நாடு சிறப்பு சட்டமன்றக் கூட்டம் நடைபெற உள்ளது.

<div class="paragraphs"><p>சட்டமன்றம்</p></div>
அமைச்சர் செந்தில் பாலாஜி : சசிகலா முதல் மு.க.ஸ்டாலின் வரை செல்லப்பிள்ளை ஆனது எப்படி?

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com